For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

By Mayura Akilan
|

Pineapple and Mango
கோடை சீசன் வந்தாலே மாம்பழ வரத்து அதிகரித்துவிடும். மாம்பழம் சாப்பிட மட்டுமல்ல கோடையில் சருமத்தைப் பாதுகாக்கும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. மாம்பழக்கூழில் பேசியல் செய்வதன் மூலம் எழிலான தோற்றத்தைப் பெறமுடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மாப்பழக்கூழ்

மாம்பழத்தை தோல் உரித்து அதன் சதையை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் தேய்க்கவும். இதன் மூலம் மாம்பழத்தின் சாறு குளிர்ச்சியை ஏற்படுத்தி சோர்வடைந்த சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. மாம்பழக்கூழ் தேய்த்த முகத்தில் 6 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த பாலை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தில் உள்ள பழக்கலவையை துடைத்து எடுத்து விடவேண்டும். பின்னர் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி முகத்தை கழுவ வேண்டும்.

தயிர், மாம்பழ பேஷியல்

மாம்பழத்தை தோலுரித்து அதன் சதையை எடுத்து வைக்கவும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தயிர், மற்றும் எலுமிச்சைச் சாறு ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கைகளில் பேஷயல் போடவும். 15 நிமிடம் நன்றாக ஊறவைத்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். கோடை காலத்தில் இந்த பேஷியலை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்யவேண்டும். சருமம் ஜொலி ஜொலிக்கும்.

முட்டை, மாம்பழக்கூழ் பேஷியல்

அதிக பணம் செலவில்லாமல் முகத்தை ஜொலிக்கச் செய்வதில் இது எளிமையான பேஷியல் முறையாகும். மாம்பழத்தை தோல் உரித்து சதையை எடுத்து நன்றாக அடித்து கூழாக்கவும். அதோடு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி நன்றாக கலக்கவும் அதோடு ஒரு டீ ஸ்பூன் தேனை ஊற்றி நன்றாக அடித்து கலக்கி முகத்திற்கும், கழுத்துப் பகுதியிலும் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையாக கழுவி ஒத்தடம் கொடுப்பதுபோல துடைக்கவும். சருமம் பொலிவுறும்.

ஓட்ஸ், மாம்பழக்கூழ்

கோடை வெப்பத்தினால் கருமையடைந்துள்ள சருமத்தை புத்துணர்ச்சியாக்க இந்த பேஷியல் மிகச்சிறப்பானது. ஒரு கிண்ணத்தில் மாம்பழக்கூழினை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 3 டீ ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 3 டீ ஸ்பூன் பாதம் பவுடர், 3 டீ ஸ்பூன் பாலாடை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்தை தரும் இது வெயிலில் ஏற்பட்ட கருமையை போக்குவதோடு முகத்தை புத்துணர்ச்சியாக்கும்.

மாம்பழக்கூழ் கொண்டு செய்யப்படும் பேஷியலை முயற்சி செய்து பாருங்கள் கோடை வெப்பத்தில் வெளியே சென்று வந்தாலும் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்.

English summary

4 Refreshing Mango Facial Recipes! | பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

Summer heat and sun tan can spoil your complexion. Mangoes, the fruit of summer has several facial benefits. So, apart from enjoying the taste of the summer fruit, you can also care for your skin with mangoes.
Story first published: Saturday, March 10, 2012, 9:55 [IST]
Desktop Bottom Promotion