For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழை காலத்திற்கான சருமப் பாதுகாப்பு டிப்ஸ்

By Mayura Akilan
|

Skin Care
பருவகாலத்தில்தான் இந்த பூமியானது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றது. இந்த காலத்தில் பருவமழை பெய்து அனைத்தும் பசுமையாக மாறிவிடும். இந்த காலத்தில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நோய்கள் தாக்கத் தொடங்கும். மழை காலத்தில் பின்பற்ற வேண்டிய தோல் பாதுகாப்பு டிப்ஸ் உங்களுக்காக

தண்ணீர் அவசியம் குடிங்க

முகத்தை தினமும் கிளன்சர் கொண்டு கிளீன் செய்ய வேண்டும். மெதுவாக மைல்டாக ஸ்கர்ப் செய்ய வேண்டும். இறந்த செல்கள் உதிர்ந்து புதுப்பிக்க ஏதுவாகும். தினம் ஒருமுறை ஆல்பா ஹைட்ராக்சில் ஆசிட்டை தண்ணீரில் கலந்து முகம் கழுவுவதன் முகம் புத்துணர்ச்சி பெறும்.

மழைக்காலம் என்பதால் தாகம் எடுக்காது. எனினும் தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். இது தோலின் பிஹெச் பேலன்ஸ் சரியாக வைத்திருக்கும்

தண்ணீர் சத்து குறைவினால் வறண்ட சருமம் ஏற்படுபவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தினர் தயிர், தேன் கலந்து தோலில் பூசி குளிக்கலாம். இது தோலினை வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை கூழ் போல செய்து ஓட்சுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும்.

சுகாதரம் அவசியம்

மழைக்காலத்தில்தான் தோல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தோலில் தேங்கியுள்ள அழுக்கினை உடனடியாக நீக்க வேண்டும். ஏனெனில் வெயில் காலத்தில் வியர்வை வழியாக அழுக்கானது வெளியேறிவிடும். மழைக்காலத்தில் அந்த வாய்ப்பு இல்லை என்பதால் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

English summary

Skincare tips for rainy season | மழை காலத்தில் சருமத்தைக் காப்பது எப்படி?

Monsoon is season to rejuvenate all the living things on the planet. It is a refreshing season that makes you feel that beauty tips cane forgotten for some time. However as the intermittent showers pour high, you may notice some uneasiness with the skin. Here are some easy tips to maintain your youthful skin during this monsoon.
Story first published: Monday, November 7, 2011, 17:56 [IST]
Desktop Bottom Promotion