Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் அதிகப்படியான வியர்வை காரணமாக, சருமத்தில் அழுக்குகளும், இறந்த செல்களும் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து டல்லாக காணப்படுகிறது. இந்நிலையில் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துவோம். ஆனால் சிலருக்கு கெமிக்கல்கள் நிறைந்த ஃபேஸ் வாஷ்கள் சருமத்தில் அதிகப்படியான வறட்சியை ஏற்படுத்தி, பலவிதமான சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

இத்தகையவர்கள் சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. நம் வீட்டு சமையலறையில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று பயன்படுத்தும் போது, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.
அதுவும் நம் சமையலறையில் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்ற உதவும் பல்வேறு பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களை தினசரி சருமத்தில் பயன்படுத்தி வரும் போது, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது முகத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் வாஷ்கள்/ஸ்க்ரப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கடலை மாவு மற்றும் மஞ்சள்
* இதற்கு ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் சிறிது மஞ்சள் தூளை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ரோஸ் வாட்டர் அல்லது பாலை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் அழகாகவும், பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும்.
2. காபித் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய்
* இதற்கு காபித்தூளை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. சர்க்கரை மற்றும் தேன்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு, சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜனை அதிகரிக்கிறது.
4. ஓட்ஸ் மற்றும் பால்
* இதற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்து ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. ஆரஞ்சு தோல்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த ஆரஞ்சு தோலின் பொடியை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகப்பருக்களைத் தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

