Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கோடையில் உடனடி சரும நிறத்தைப் பெற வேண்டுமா? அப்ப தர்பூசணி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க...
Skin Care Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் மார்கெட்டுகள் மற்றும் தெருவோரங்களில் தர்பூசணிப் பழங்கள் அதிகம் விற்கப்படுவதைக் காணலாம். இப்படி விற்கப்படும் தர்பூசணி பழத்தை வெறுமனே வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி, அவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், கோடையில் சந்திக்கும் சரும பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது தெரியுமா?
ஏனெனில் தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக உள்ளன. இதனால் இதைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். மேலும் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருக்கும். இப்போது கோடைக்காலத்தில் பொலிவான சருமத்தைப் பெற உதவும் சில தர்பூசணி ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. தர்பூசணி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தர்பூசணி ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை கோடைக்காலத்தில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி துண்டுகளை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். ஆனால் ஃபேஸ் வாஷ், சோப்பு போன்றவற்றைக் கொண்டு முகத்தைக் கழுவாதீர்கள்.
3. தர்பூசணி மற்றும் கற்றாழை ஜெல்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தர்பூசணி கூழ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அவற்றை நன்கு கலந்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் மட்சா க்ரீன் டீ தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவைகள்:
* தர்பூசணி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் முன், முகத்தை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். மேலும் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்திய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
* முகத்தை கழுவிய பின், சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications