Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்படின்னா முட்டையை 'இந்த மாதிரி' யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க வேண்டுமா? ஆனால் உங்களால் அழகு நிலையங்களுக்கு செல்ல நேரம் ஏதும் இல்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் உள்ள முட்டையைக் கொண்டே இதற்கு நல்ல தீர்வைக் காண முடியும்.
முட்டையில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முட்டையைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முதுமைக் கோடுகள் மற்றும் சரும சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படும், சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

முக்கியமாக முட்டை ஃபேஸ் பேக்கை போடும் போது, அது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும். கீழே சரும பொலிவை அதிகரிக்கும் சில முட்டை ஃபேஸ் பேக்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படுவதோடு, முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.
1. முட்டை, தேன், எலுமிச்சை பேக்
முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் இந்த முட்டை ஃபேஸ் பேக்கைப் போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. முட்டை மற்றும் ஆரஞ்சு பேக்
உங்கள் சருமத்தின் நிறம் சீரற்று உள்ளதா? அப்படியான இந்த ஃபேஸ் பேக் நல்ல மாற்றத்தைத் தரும். அதற்கு ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் சருமத்தை உலர்த்தி, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
3. முட்டை, அவகேடோ மற்றும் தயிர் மாஸ்க்
முகத்தில் அழுக்குகள் அதிகம் இருந்தால் தான் முகம் பொலிவிழந்து காணப்படும். உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்படியானால் இந்த முட்டை ஃபேஸ் பேக்கை போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தயிர், சிறிது மசித்த அவகேடோ சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
4. முட்டை மாஸ்க்
உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக உள்ளதா? அந்த கரும்புள்ளிகளை எளிதில் அகற்ற வேண்டுமா? அப்படியானால் இந்த முட்டை மாஸ்க்கை போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவ வேண்டும். அதன் பின் பேப்பர் டவலை முகத்தில் விரிக்க வேண்டும். பின் மீண்டும் அதன் மேல் முட்டையை தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் மெதுவாக உரித்தெடுக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
5. முட்டை, வெள்ளரிக்காய், தேன் பேக்
உங்கள் சருமம் சென்சிடிவ் என்றால், இந்த ஃபேஸ் பேக்கை போடலாம். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பின் முகத்தை உலர்த்தி, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
6. முட்டை, எலுமிச்சை பேக்
உங்கள் பிம்பிள் அதிகமா வருமா? அந்த பிம்பிளைத் தடுத்து, முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். சிறந்த பலனைப் பெற, இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
7. முட்டை, விளக்கெண்ணெய், கற்றாழை மாஸ்க்
உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக உள்ளதா? உங்கள் முகத்தில் முதுமைத் தோற்றம் தெரிய ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் முகத்தை துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications