Latest Updates
-
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்
முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகளை போக்க வேண்டுமா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகத்தில் முகப்பருக்களால் வந்த தழும்புகள் நீங்காமல் அசிங்கமாக உள்ளதா? இந்த முகப்பரு தழும்புகளை நீக்க எத்தனை க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் நீங்காமல் உள்ளதா? இதுவரை நீங்கள் இயற்கை வழிகளை முயற்சித்துள்ளீர்களா? இல்லையென்றால் இயற்கை வழிகளை ட்ரை செய்யுங்கள்.
நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் மருத்துவ குணங்களைக் கொண்டவை. இந்த இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், முகப்பருக்கள் விட்டு சென்ற கருமையான மற்றும் அசிங்கமான தழும்புகள் மறையத் தொடங்குவதைக் காணலாம்.

குறிப்பாக இதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவற்றால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. கீழே முகத்தில் அசிங்கமாக இருக்கும் முகப்பரு தழும்புகளைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளை அறிந்து, அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
1. தேன்
* தேன் மருத்துவ பண்புகளைக் கொண்டவை. இதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் இது ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும்.
* அதுவும் முகத்தில் உள்ள தழும்புகளைப் போக்க தேனை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் கழுவி வந்தால், முகத்தில் உள்ள கருமையான தழும்புகள் மறைவதைக் காணலாம்.
2. எலுமிச்சை சாறு
* எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் கருமையான தழும்புகளை மறைய வைக்கும்.
* அதற்கு எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. கற்றாழை
* இந்தியாவில் உள்ள அனைவரது வீடுகளிலும் காணப்படும் ஒரு பொதுவான செடி தான் கற்றாழை. இந்த கற்றாழை சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகள் மற்றும் தழும்புகளை போக்குவதில் வல்லது.
* அதற்கு கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமையான தழும்புகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறத்திலும் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. மஞ்சள்
மஞ்சள் அனைவரது வீட்டு சமையலறையிலும் இருக்கும் மிகவும் மங்களகரமான மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பொருள். மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் உள்ளன.
* இந்த மஞ்சள் பொடியை தேன் அல்லது தயிருடன் சேர்த்து பேஸ்ட் செய்து, தழும்புகள் உள்ள முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், மிகச்சிறந்த பலனைப் பெறலாம்.
5. உருளைக்கிழங்கு ஜூஸ்
* உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒரு காய்கறி. இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் சில நொதிப் பொருட்கள் உள்ளன. இவை சரும செல்களை புத்துயிர் பெற வைப்பதோடு, கருமையான தழும்புகளை போக்க உதவுகின்றன.
* அதற்கு உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்துக் கொண்டு, அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமையான தழும்புகள் நீங்குவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











