வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..

Skin Care Tips In Tamil: நாளுக்கு நாள் உங்கள் முகம் கருமையாகிக் கொண்டே இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை அகற்றும் ஒரு சரும பராமரிப்பு செயல்முறை தான் எக்ஸ்போலியேஷன்.

இது சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும், சரும கருமையை அகற்றவும், கரும்புள்ளிகள், அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவற்றை நீக்கவும் உதவுகிறது. இந்த செயல்முறையில் சருமத்திற்கு ஸ்க்ரப்பை பயன்படுத்தப்படும். கடைகளில் ஏராளமான ஸ்க்ரப்புகள் விற்கப்படுகின்றன. ஆயினும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டும் ஸ்க்ரப்புகளை தயாரித்து பயன்படுத்தலாம்.

Skin Care Tips Top 5 DIY Homemade Facial Scrubs To Remove Sun Tan

இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்க்ரப் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக நேச்சுரல் ஸ்க்ரப்புகளால் எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது. இப்போது சருமத்தில் உள்ள கருமையை போக்க உதவும் சில நேச்சுரல் ஸ்க்ரப்புகளைக் காண்போம்.

1. காபி ஸ்க்ரப்

* இதற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் 1/2 கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துடைத்த பின், மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

2. தேங்காய் பால் மற்றும் பாதாம் ஃபேஸ் ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஒயிட் க்ளே பவுடர், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் ரோஜாப்பூ இதழின் பவுடரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் தேங்காய் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

3. தேன், எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஃபேஸ் ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் ஆயில் ஆயில், 1 ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை நீண்ட நேரம் சருமத்தில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், சருமத்தில் உள்ள ஈரப்பதம் முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிடும்.

4. தயிர் மற்றும் தக்காளி ஃபேஸ் ஸ்க்ரப்

* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு ஒரு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தக்காளி கூழ் மற்றும் தயிரை சேர்த்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* ஒருவேளை இதை சருமத்தில் தடவியதும், ஏதேனும் அரிப்புக்களை சந்தித்தால், உடனே கழுவிவிடுங்கள்.

5. தேன் மற்றும் பட்டை ஸ்க்ரப்

* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* அதன் பின் முகத்தை துடைத்துவிட்டு, தவறாமல் மாய்ஸ்சுரைசரை தடவுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, September 3, 2025, 20:30 [IST]
Desktop Bottom Promotion