Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
உங்க முகத்தில் எண்ணெய் வழியுதா? முகப்பரு அதிகமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
Skin Care Tips In Tamil: வெயில் காலம் என்பதால் மற்ற காலங்களை விட அதிகமாக வியர்க்கும். இதன் விளைவாக முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு இருக்கும். இப்படி முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதன் விளைவாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கி, சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி, முகப்பருக்களை அதிகம் வரவழைக்கும்.
இந்நிலையில் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கும் மற்றும் முகப்பரு வருவதைத் தடுக்க சருமத்தில் போதுமான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். அதுவும் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி வந்தால், முகத்தை பொலிவோடு, பருக்களின்றி பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்து வந்தால், சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும். கீழே முகத்தில் வழியும் எண்ணெயைக் கட்டுப்படுத்தவும், முகப்பருக்களைப் போக்க அல்லது தடுக்கவும் உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதோடு, முகப்பருக்களைக் குறைக்கும்.
2. வேப்பிலை மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு கையளவு வேப்பிலையை அரைத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, சருமத்தை பொலிவாக்கும்.
3. எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு, முகப்பருக்களைக் குறைக்கும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் க்ளே ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் க்ளே பவுடரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சமநிலையில் பராமரிக்கவும், சருமத்தில் உள் அழுக்கைப் போக்கவும் உதவுகிறது.
5. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளியை சிறிது எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத் துளைகள் சுத்தம் செய்வதோடு, பருக்களைக் குறைக்க உதவும்.
6. வெள்ளரிக்காய் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சிறிது வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
7. டீ-ட்ரீ ஆயில் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.
8. முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்துளைகளை இறுக்கமடைவதோடு, எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.
9. சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறு வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை குறைப்பதோடு, பருக்கள் வராமலும் தடுக்கும்.
10. புதினா மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு கையளவு புதினாவை எடுத்து அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீர் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் மற்றும் முகப்பருக்களைத் தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications