Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? அப்ப நைட் தேனுடன் இதை கலந்து ஃபேஸ் பேக் போடுங்க...
Skin Care Tips In Tamil: நீங்கள் உங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? ஆனால் என்ன தான் கடைகளில் விற்கப்படும் பொருட்களை பயன்படுத்தினாலும், முகத்தில் எதிர்பார்த்த மாற்றம் தெரியவில்லையா?
மாறாக அதில் உள்ள கெமிக்கல்களால் சருமத்தில் பிரச்சனைகளை தான் சந்திக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும். அதுவும் நம் வீட்டு சமையலறையிலேயே சருமத்தின் ஆரோக்கியத்தை மற்றும் அழகை மேம்படுத்த உதவும் நிறைய பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் தேன்.

தேன் ஒரு சுவையூட்டி மட்டுமின்றி, மருத்துவ குணம் நிறைந்த பொருளும் கூட. அதே சமயம் தேன் சருமத்தின் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. தேனில் உள்ள சத்துக்கள் சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்குவதோடு, சருமத்திற்கு பொலிவையும், ஈரப்பதத்தையும் அளிக்கின்றன.
நீங்கள் அதிக செலவு செய்யாமல் உங்கள் சருமத்தை பளிச்சென்று பிரகாசமாக வைத்துக் கொள்ள விரும்பினால் தேனைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள். கீழே அனைத்து வகையான சருமத்தினருக்குமான சில தேன் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சிறிது தேனை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 15-20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சருமம் மென்மையாக இருக்கும்.
ஃபேஸ் பேக் #3
* பிளெண்டரில் ஒரு கையளவு புதினாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து, அதை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2-3 டீஸ்பூன் தேனை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.
* பின்பு சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கம் தடுக்கப்படுவதோடு, சருமம் ஈரப்பதத்துடன் பளிச்சென்று இருக்கும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
ஃபேஸ் பேக் #6
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு அதை 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
