Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...!
உங்க முகம் மேடு பள்ளமா அசிங்கமா இருக்கா? அப்ப வாரம் 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
Skin Care Tips In Tamil: தினமும் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, உங்கள் முகம் மேடு பள்ளமாக அசிங்கமாக இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறீர்களா? ஒருவரது முகத்தில் இப்படி குழிகள் இருக்க காரணம், சரும துளைகள் திறந்தவாறு இருப்பது தான்.
இப்படி முகத்தில் உள்ள சருமத் துளைகள் திறந்தவாறு இருந்தால், அது அந்நபரின் அழகை கெடுப்பது மட்டுமின்றி, தன்னம்பிக்கையை பாதிக்கும். ஆனால் இப்படி திறந்திருக்கும் சருமத் துளைகளை ஒருசில ஃபேஸ் பேக்குகளை போடுவதன் மூலம் சுருங்க வைக்க முடியும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில எளிய இயற்கை பொருட்களைக் கொண்டு திறம்பட சுருங்க வைக்கலாம்.

முக்கியமாக இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சருமத் துளைகள் சுருங்குவது மட்டுமல்லாமல், சருமம் மென்மையாக இருக்கும். இப்போது திறந்துள்ள சருமத் துளைகளை சுருக்க உதவும் சில சிறந்த ஃபேஸ் பேக்குகள் எவையென்பதைக் காண்போம்.
1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் சீராக தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படுவதோடு, சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி, சரும இறுக்கமடையும்.
2. முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும துளைகள் சுருக்குவதோடு, இறுக்கமடையச் செய்யும். அதுவும் இதில் எலுமிச்சை சேர்ப்பதால், சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
3. தக்காளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த ஒரு தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம், முகத்தில் உள்ள பள்ளங்களை மறைவதோடு, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியும் குறையும்.
4. தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கமுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் மற்றும் எலுமிச்சை சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்து, சருமத்தை பிரகாசிக்க வைக்கும்.
5. ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுக்கை வெளியேற்றும் மற்றும் சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்து, சருமத்தை மென்மையாக்கும்.
6. கற்றாழை வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
7. க்ளே மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் க்ளே அல்லது களிமண் பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி, சருமத்தை இறுக்கமடையச் செய்து, சருமத்தை பொலிவைத் தரும்.
8. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 1/2 கப் மசித்த பப்பாளியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கி, சரும துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ள உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











