Latest Updates
-
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
இரண்டே வாரத்தில் அக்குள் கருமையைப் போக்கணுமா? அப்ப பேக்கிங் சோடாவை இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: நிறைய பேருக்கு அக்குள் பகுதி மிகவும் கருப்பாக இருக்கும். உங்கள் அக்குள் பகுதியும் இப்படி கருப்பாக அசிங்கமாக உள்ளதா? உங்கள் அக்குளை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் பல க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறீர்களா?
இருப்பினும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள். கெமிக்கல் கலந்த க்ரீம்கள் அனைவருக்குமே நற்பலனை வழங்கும் என்று கூறிவிட முடியாது. சொல்லப்போனால் கெமிக்கல் கலந்த க்ரீம்கள் நிறைய பேருக்கு அரிப்பு, எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, கருமையை மேலும் தான் அதிகரிக்கும்.

எனவே கெமிக்கல் கலந்த பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களைக் கொண்டு அக்குளை வெள்ளையாக்க முயற்சித்தால், அக்குள் கருமை நீங்குவதோடு, அக்குளில் அதிகம் வியர்ப்பதும், அக்குளில் வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.
சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் பல இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பேக்கிங் சோடா. பேக்கிங் சோடாவில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சரும கருமையைப் போக்குவதோடு, சருமத்தில் மெலனின் உற்பத்தியைத் தடுக்கும்.
மேலும் இது அக்குளில் அதிகம் வியர்ப்பதையும், துர்நாற்றத்தையும் தடுக்கும். இப்போது அக்குளில் உள்ள கருமையைப் போக்க பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டர்
* ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 5-6 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், அக்குள் கருமையை வேகமாக மறையும்.
2. பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் டீ-ட்ரீ ஆயில்
* ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து கிளறி, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் ஊறியதும், அக்குளை மென்மையாக 2-3 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
3. பேக்கிங் சோடா மற்றும் தக்காளி சாறு
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை அக்குளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், அக்குள் கருமை மாயமாய் மறையும்.
4. பேக்கிங் சோடா, சோள மாவு, பாதாம் எண்ணெய்
* ஒரு பௌலில் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பின்பற்றினால், அக்குளில் உள்ள கருமை நீங்கும்.
5. பேக்கிங் சோடா, தயிர், கடலை மாவு
* ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் கடவை மாவை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை அக்குளில் தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால், அக்குள் வெள்ளையாவதை விரைவில் காணலாம்.
6. பேக்கிங் சோடா, வெள்ளரிக்காய் சாறு மற்றும் ஆலிவ் ஆயில்
* ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரம் இரண்டு முறை பின்பற்றினால், அக்குள் கருமை மறையும்.
7. பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடை எடுத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 4-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், அக்குள் கருமை வேகமாக நீங்கும்.



Click it and Unblock the Notifications
