Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
கண்ணுக்கு கீழ அசிங்கமா இருக்கும் கருவளையங்களை நீக்கணுமா? உங்க வீட்டிலிருக்கும் இந்த பொருட்களே போதும்...!
பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான சருமப் பிரச்சினைகளில் ஒன்று கண்களுக்கு கீழ் தோன்றும் கருவளையம். கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்கள் சோர்வு, மன அழுத்தம், முதுமை அல்லது மரபியல் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அவை ஆரோக்கியத்திற்கு பெரிதாக எந்த தீங்கு விளைவிக்காத போதிலும், அவை உங்களை சோர்வாகவும் வயதானவராகவும் காட்டக்கூடும்.
கருவளையங்களை குணப்படுத்த எப்போதும் காஸ்ட்லியான க்ரீம்களை பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. அதிர்ஷ்டவசமாக, கருவளையங்களின் தோற்றத்தைக் குறைத்து சருமத்தை ஒளிரச் செய்யும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. உங்கள் சருமப் பராமரிப்பு நடைமுறையில் எளிதாகச் சேர்க்கக்கூடிய மற்றும் பயனளிக்கக்கூடிய எளிய வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐஸ் கட்டிகள்
ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்துவது இரத்த நாளங்களை சுருக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், கண்களுக்குக் கீழே உள்ள கருமையைக் குறைக்கவும் உதவும். சில ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் சுற்றி கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் 5-10 நிமிடங்கள் மெதுவாக அழுத்தவும். சோர்வு அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் கருவளையங்களுக்கு இந்த வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெள்ளரிக்காய் துண்டுகள்
வெள்ளரிக்காய் கருவளையங்களுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும். ஏனெனில் வெள்ளரிக்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளன, அவை சருமத்தை குணப்படுத்தும் மற்றும் சருமத்தில் ஏற்படும் நிறமாற்றத்தைக் குறைக்கின்றன. குளிர்ந்த வெள்ளரிக்காயை தடிமனான வட்டங்களாக நறுக்கி, கண்களை மூடி 10-15 நிமிடங்கள் வைக்கவும். கருவளையம் விரைவில் மறைய வேண்டுமெனில் தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
தேனீர் பேக்ஸ்
தேநீரில், குறிப்பாக க்ரீன் அல்லது ப்ளாக் டீ-யில், காஃபின் மற்றும் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளது, அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கண்களுக்குக் கீழே உள்ள இரத்த நாளங்களை சுருக்குகின்றன. இரண்டு தேநீர் பைகளை சூடான நீரில் ஊறவைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் குளிர வைக்கவும். குளிர்ந்த தேநீர் பைகளை உங்கள் கண்களின் மேல் 10-15 நிமிடங்கள் வைக்கவும். இந்த தீர்வு கருவளையங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ
பாதாம் எண்ணெய் கண்களுக்குக் கீழே உள்ள மென்மையான சருமத்தை ஈரப்பதமாக்கும் ஒரு இயற்கைப் பொருளாகும், அதே நேரத்தில் வைட்டமின் ஈ சேதத்தை சரிசெய்ய ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. சில துளிகள் பாதாம் எண்ணெயை ஒரு துளி வைட்டமின் ஈ எண்ணெயுடன் கலந்து, படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் கழுவவும். இதை தொடர்ந்து செய்தால் விரைவில் கருவளையம் மறையும்.
தக்காளி மற்றும் எலுமிச்சைச்சாறு
தக்காளியில் லைகோபீன் உள்ளது, இது நிறமாற்றத்தைக் குறைக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், அதே நேரத்தில் எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங்ப் பொருளாக செயல்படுகிறது. ஒரு டீஸ்பூன் தக்காளி சாற்றை அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் கண்களுக்குக் கீழே தடவவும், ஆனால் இந்த சாறு உங்கள் கண்களில் படாமல் கவனமாக இருங்கள். 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு அதற்குப்பின் கழுவவும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன, அவை சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்து நிறமியைக் குறைக்க உதவுகின்றன. ஒரு பச்சை உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றைப் பிழியவும். பருத்தித் துண்டை சாற்றில் நனைத்து உங்கள் கண்களில் 10-15 நிமிடங்கள் தேய்க்கவும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். சிறப்பான பலன்களைப் பெற இந்த செயல்முறையை தினமும் செய்யவும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை பல நூற்றாண்டுகளாக நம் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது கருவளையங்களைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த தீர்வாகும். உங்கள் கண்களுக்குக் கீழே ஒரு சிறிதளவு கற்றாழை ஜெல்லைத் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். கழுவுவதற்கு முன் 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். கற்றாழை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.



Click it and Unblock the Notifications
