Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
பத்தே நாட்களில் கருவளையங்களை போக்க வேண்டுமா? இதோ சில அட்டகாசமான எளிய வழிகள்!
Skin Care Tips In Tamil: ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தற்போது சந்திக்கும் ஒரு அழகு பிரச்சனை தான் கருவளையம். தற்போதைய மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையால் சரியான தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
சரியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாத காரணத்தினால், கண்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. உங்கள் கண்களைச் சுற்றியும் இப்படி அசிங்கமான கருவளையங்கள் உள்ளதா? அந்த கருவளையங்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? அதை போக்க வேண்டுமா?

அப்படியானால் அதற்கு கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்தாமல், இயற்கை வழிகளை முயற்சி செய்யுங்கள். இதனால் நிச்சயம் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்கலாம். கீழே கருவளையங்களை போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. க்ரீன் டீ பேக்
நீங்கள் க்ரீன் டீ குடிப்பீர்களா? அப்படியானால் க்ரீன் டீ தயாரித்த பின், அந்த க்ரீன் டீ பேக்கை தூக்கி போடாமல், ஃப்ரிட்ஜ்ஜில் சிறிது நேரம் வைத்து, க்ரீன் டீ பேக் நன்கு ஜில்லென்று ஆனதும், அதை கண்களின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள டேனின், கண்களில் உள்ள கருவளையங்களைப் போக்க உதவும்.
2. தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு டீஸ்பூன் தக்காளி சாற்றுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி பயன்படுத்தி வந்தால், கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் மாயமாய் மறையும்.
3. வெள்ளரிக்காய்
இது அனைவருக்குமே தெரிந்த மிகவும் பிரபலமான வழி தான். பொதுவாக கருவளையங்களைப் போக்க பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வழியும் கூட. அதற்கு வெள்ளரிக்காய் துண்டுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நன்கு குளிர்ந்ததும், கண்களின் மேல் 15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி தினமும் மேற்கொண்டு வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் சீக்கிரம் போவதோடு, கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
4. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்தில் பல மாயங்களை புரியக்கூடியவை. அதில் ஒன்று தான் கருவளையங்களையும் போக்குவது. அதற்கு தேங்காய் எண்ணெயை இரவு தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் போய்விடும்.
5. பாதாம் எண்ணெய்
இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயை சில துளிகளை எடுத்து, அதை கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்யும் போது, பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, கருவளையங்களை போக்க உதவும்.
6. குளிர்ந்த பால்
குளிர்ந்த பாலை காட்டனில் நனைத்து, அந்த காட்டனை கண்களின் மேல் வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சற்றியுள்ள கருவளையங்கள் வேகமாக மறைவதோடு, கண்களின் கீழ் உள்ள சுருக்கங்களும் நீங்கும்.
7. உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதன் சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து, அந்த பஞ்சுருண்டைகளை கண்களின் மேல் வைத்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையங்களை மறைவதைக் காணலாம்.
8. ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் கருவளையங்களை போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, அதை கண்களின் மேல் வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், கருவளையம் நீங்குவதோடு, கண்களில் உள்ள சோர்வும் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications
