Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
ஷவரில் குளிக்கும் போது இந்த தவறுகளை ஒரு போதும் செய்யாதீங்க...
Shower Mistakes In Tamil: நாம் தினசரி குளித்து நம் உடம்பை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்வோம். இருப்பினும் சில சமயங்களில் நாம் செய்யும் தவறுகளால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் அதிக சூடான தண்ணீரில் குளிக்கும் போது உங்கள் சருமம் சீக்கிரம் வறண்டு போக வாய்ப்பு உள்ளது.
அதே மாதிரி நறுமணமிக்க பாடி வாஷ்களை பயன்படுத்துவது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்ய நேரிடலாம். இப்படி குளிக்கும் போது நாம் பல தவறுகளை நம்மை அறியாமல் செய்கிறோம். கீழே குளிக்கும் போது ஒருபோதும் செய்யக்கூடாத சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களிடம் இருந்தால், அதை உடனே நிறுத்துங்கள்.

குளிக்கும் போது நாம் செய்யும் தவறுகள்
நாம் சூடான நீரில் குளிப்பதால் நம் சருமம் வறண்டு போகக் கூடும். சூடான நீரில் குளிப்பது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கிவிடும். சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை இது நீக்கிவிடும். இதனால் அரிப்பு, எரிச்சல், சொறி போன்றவை ஏற்படலாம். எனவே சூடான நீரில் குளிப்பதை தவிருங்கள்.
அடிக்கடி குளிப்பது
நம் உடலில் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதங்கள் என்பது எப்போது இருக்கும். இவற்றை நீங்கள் தொடர்ந்து கழுவுவதால் அவை நீங்கி உங்கள் சருமத்தில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை குளிப்பது சருமத்தை வறண்டு போகச் செய்யும். அதே மாதிரி குளிக்கும் போது அதிகமாக சோப்பு போட்டு குளிக்காமல் குறைத்துக் கொள்ளுங்கள்.
எரிச்சலூட்டும் பொருட்கள்
எரிச்சலூட்டும் பாடி வாஷ்களை பயன்படுத்துவதை தவிருங்கள். பாடி வாஷ்களை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படித்து வாங்குவது நல்லது. பல பாடி வாஷ்களில் வாசனை திரவியங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் சல்பேட்டுகள் போன்ற கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது. இவை உங்கள் தோல்களை எரிச்சலடையச் செய்யும். இதனால் தோல் வெடிப்பு, வறட்சி இவற்றை பெற நேரிடலாம். உங்களுக்கு சென்ஸ்டிவ் சருமம் இருந்தால் எண்ணெய் சார்ந்த க்ளீன்சரை தேர்ந்தெடுங்கள். இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
வடிகட்டப்படாத தண்ணீர்
நீங்கள் குளிக்கும் தண்ணீர் வடிகட்டப்படவில்லை என்றால் அதுவும் உங்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்கும். வடிகட்டப்படாத தண்ணீரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இவை சருமத்தில் வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்க நேரிடலாம். மேலும் ஷவர் நீர் சுத்தப்படுத்தப்படாமல் இருந்தால் அதிலிருந்து அழுக்குகள் மற்றும் துர்நாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நேற்றைய ஆடையை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்
நேற்றைய ஆடையை மீண்டும் பயன்படுத்துவது சரி கிடையாது. அதிலிருக்கும் வியர்வை நாற்றங்கள் உங்களுக்கு உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் ஈரமான துணிகளில் பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் அச்சுகள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும். எனவே எப்பொழுதும் ஆடைகளை நன்றாக துவைத்து சுத்தம் செய்து உடுத்துங்கள்.
லூஃபாவை ஷவரில் விடுதல்
சிலர் தாங்கள் பயன்படுத்தும் ஸ்க்ரப் மற்றும் லூஃபாவை அப்படியே ஷவரில் விட்டுச் செல்கின்றனர். சூடான மற்றும் நீராவி சூழலில் பாக்டீரியாக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும். இதனால் லூஃபாவில் அதிகமாக பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்து சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
அதிகமாக ஸ்க்ரப்பை பயன்படுத்துதல்
ஸ்க்ரப் உங்கள் சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்க பயன்படுகிறது. முகம் மற்றும் உங்கள் உடல் இரண்டையும் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை மட்டுமே ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதற்கு மேல் ஸ்க்ரப் செய்யும் போது தோலின் கீழடுக்கு வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு வீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் எளிதாக பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் சருமத்தில் ஊடுருவி பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எல்லா திசைகளிலும் ஷேவிங் செய்தல்
ஷேவிங் செய்யும் போது முடி வளர்ந்த திசையில் ஷேவிங் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வெவ்வேறு திசைகளில் ஷேவிங் செய்யும் போது சருமத்தில் புடைப்புகள், எரிச்சல் மற்றும் ingrown hair போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதே மாதிரி கூந்தல் வளர்ச்சிக்கு எதிராக ஷேவிங் செய்வது உங்களுக்கு நெருக்கமான ஷேவிங்கை உண்டாக்கும். இருப்பினும் முடி வளரும் திசையிலயே ஷேவிங் செய்வது சிறந்தது.
ஒரே ரேசரைப் பயன்படுத்துதல்
சிலர் ஒரே பிளேடுவை ஒரு மாதத்திற்கு பயன்படுத்துவார்கள். இதனால் ஃபோலிகுலிடிஸ் என்ற நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மயிர்க்கால்களில் வீக்கங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. ரேசர்கள் தோலில் வெட்டுக்களை உண்டாக்குகிறது. இதனால் பாக்டீரியாக்கள் எளிதாக சருமத்தினுள் நுழைந்து நமக்கு கொப்புளங்களை உண்டாக்குகிறது. எனவே நீங்கள் எவ்வளவு ஷேவ் செய்கிறீர்கள் என்பதை பொருத்து உங்கள் ரேசர் பிளேடுகளை அடிக்கடி மாற்றுவது அவசியம்.
மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாமல் இருப்பது
ஷவரில் குளித்த உடனேயே மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. கால்களுக்கு ஷேவிங் செய்த பிறகு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்ய வேண்டும். வாசலின் போன்ற மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.
பொதுக் குளியலறையில் ஷவர் ஷூக்கள் அணியாமல் இருப்பது
பொதுக் குளியலறையில் ஷவர் ஷூக்கள் அணியாமல் இருப்பது பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒருவரின் கால்களில் வாழும் பூஞ்சை உங்களுக்கும் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுக் குளியலறையில் குளிக்கும் போது ஷவர் ஷூக்கள் அணிவது மிகவும் அவசியம்.



Click it and Unblock the Notifications