Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சிரிப்பழகி சாய் பல்லவியின் ஜொலிக்கும் அழகிற்கு பின்னால் இருக்கும் இயற்கை ரகசியம் என்ன தெரியுமா?
Sai Pallavi Beauty Secrets In Tamil: சிரிப்பழகி சாய் பல்லவியின் அழகை பார்த்து வியக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். கொள்ளையடிக்கும் சிரிப்பிற்கும் அழகிற்கும் சொந்தக்காரியான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
தனது சிறந்த நடிப்பாலும், திறமையான நடனத்தாலும் இயற்கையான அழகாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார் இவர். இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இருக்கும் சாய் பல்லவி, இளம் பெண்களுக்கு இயற்கை அழகுக்கான முன்னுதாரணமாகவும் இருக்கிறார். நடிகை சாய் பல்லவி எந்த நிகழ்ச்சி அல்லது விருது வழங்கும் விழாவிற்கு செல்லும்போதும் புடவை அணிந்து எந்த மேக்-அப்பும் போடாமல் இயற்கையான அழகோடு செல்வார்.

நல்ல பளபளக்கும் சருமம் மற்றும் நீண்ட, ரம்மியமான சுருள் முடியுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர் சாய் பல்லவி. படங்களில் மேக்-அப் இல்லாமல் தனது இயற்கையான அழகிலேயே நடித்து, ரசிகர்கள் பட்டளாத்தை சேர்த்தவர். படங்களில் நடிக்கும்போது, பெரும்பாலும் மேக்கப் போடாமல் இருக்கவே சாய் விரும்புகிறார். மேலும், அவர் தன் முகப்பருவை வெளிக்காட்ட தயங்குவதில்லை.
தினமும் சரியாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதில் சாய் பல்லவி அதிக கவனம் செலுத்துகிறார். முகத்தில் நிறைய பருக்கள் சாய் பல்லவிக்கு இருக்கும். ஆனால், அதுதான் அவரின் அழகை மேலும் கூட்டுகிறது. மக்களும் சாய் பல்லவியை அப்படியே ஏற்றுக்கொண்டனர். மேலும் நம்பிக்கையே உண்மையான அழகு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாய் பல்லவி தனது அழகை எப்படி பராமரிக்கிறார் என்ற ரகசியத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "நான் என் தலைமுடி மற்றும் சருமத்தைப் பராமரிக்க ஷாம்பு, சோப்பு போன்ற செயற்கை இரசாயனங்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதில்லை. முடி மற்றும் உடலுக்கு இயற்கையான கற்றாழை போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறேன். என் தலைமுடிக்கு ஹேர் கலரிங் கூட செய்வதில்லை. சினிமாவில் கூட நான் என் இயற்கையான முடியுடன் நடிக்கிறேன்". என்று தெரிவித்திருந்தார்.
சாய் பல்லவி அடிப்படை விஷயங்களையே தினமும் பின்பற்றுகிறார். குறைந்தது வாரம் மூன்று முறை உடற்பயிற்சி செய்வது மற்றும் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றையே அதிகம் பின்பற்றுகிறார்.
மன அழுத்தம் உங்கள் சரும ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், உங்கள் சருமம் நிச்சயமாக ஒளிராது. எனவே உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்! அது சமமாக முக்கியமானது என்கிறார் சாய். பல்லவியைப் பொறுத்தவரை, விலையுயர்ந்த தோல் பராமரிப்பில் முதலீடு செய்வதை விட, உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
மன அழுத்தம் நம் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது, மேலும் ஒரு நபரை முன்கூட்டியே முதுமையாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் தோலில் உள்ள புரதங்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் சருமத்தில் தோன்றும்.
மனஅழுத்தம் முடியின் வளர்ச்சி சுழற்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பெரிய அளவில் முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டிய முடி நரைக்கும் பிரச்சனை ஏற்படலாம். இதையெல்லாம் தவிர்க்க, உங்கள் அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அதற்கு ஒரு சிறந்த வழி தியானம் மற்றும் யோகா.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்கள்
சாய் பல்லவியின் அழகு திரையிலும் சரி, வெளியேயும் சரி முற்றிலும் இயற்கையானது. விலையுயர்ந்த அழகு சாதன பொருட்கள் மற்றும் நீண்ட நேரம் பார்லரில் இருப்பது தனக்கு நம்பிக்கை இல்லை என்று சாய் நேர்காணல்களின் போது அடிக்கடி கூறியுள்ளார். அவரது விருப்பம் எப்போதும் வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை பொருட்களில் பயன்படுத்திலே உள்ளது.
ஆர்கானிக் தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் மூலிகைகளில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற வளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை அழற்சி அல்லது எரிச்சலை ஏற்படுத்தும் ஒவ்வாமைகளைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆர்கானிக் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது சருமத்திற்கு நல்லது. எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. அந்த வகையில், சாய் ஆர்கானிக் ஃபேஸ் பேக்குகளையே தன் சருமத்திற்கு பயன்படுத்துகிறார்.
சாய் பல்லவியின் ரம்மியமான நீண்ட சுருள் கருமையான கூந்தலுக்குப் பின்னால் உள்ள ரகசியம் என்னவென்றால், இயற்கைப் பொருட்களைக் கொண்டு 3 நாட்களுக்கு ஒருமுறை அவரது தலைமுடியை அலசுவதே ஆகும். மேலும் அவர், தலைமுடிக்கு கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார்.
கற்றாழை அதன் பயன்பாடுகளில் மிகவும் பல்துறை வாய்ந்தது. செயலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அதன் ஜெல் சருமம் மற்றும் முடி இரண்டிலும் பயன்படுத்தப்படலாம். கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி 12, சி மற்றும் ஈ ஆகியவை நுண்ணறைகளை வலுப்படுத்தவும், உடைவதைக் குறைக்கவும் உதவுகின்றன.
பெண்கள் மத்தியில் மற்றொரு விருப்பமான முடி சிகிச்சை தேங்காய் எண்ணெய். சாய் பல்லவி இந்த அற்புதமான மூலப்பொருளைப் பயன்படுத்தி முடியை பராமரிக்கிறார். முடி உதிர்தல், முடி உடைவது, முடி உலர்ந்து போவதைத் தவிர்க்க தேங்காய் எண்ணெய் உதவும். இந்த வழக்கமானது அவரது தலைமுடிக்கு பளபளப்பான ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கிறது.
இறுதிக்குறிப்பு
சாய் பல்லவியின் அழகும் அவரது நடிப்புத் திறமையும், அபாரமான நடன அசைவுகளும் தான் இத்தகைய புகழுக்குக் காரணம். அவரது இயற்கையான பளபளப்பின் பின்னணியில் உள்ள ரகசியம் அவரது தோல் பராமரிப்பில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதாகும். சாய் பல்லவியை போல நீங்களும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி இயற்கையான ஜொலிக்கும் சருமத்தை பெறலாம்.



Click it and Unblock the Notifications














