Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Exclusive: மழைகாலத்திலும் சருமத்தை கவனித்துக் கொள்வது அவசியம்.. ஏன் தெரியுமா? விளக்குகிறார் அழகு கலை நிபுணர்!
பொதுவாக கோடைக்காலத்தை விட மழைக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது அவசியமாகிறது.. காரணம் இந்த மழைகாலத்தில் நமது சருமத்தில் ஈரப்பதம் அதிகரிப்பது சில சமயங்களில் பூஞ்சை தொற்று, வெடிப்புகள் அல்லது மந்தமான தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்..
அதனால் உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்வது மிக மிக அவசியம் என அழகு கலை நிபுணர் தேவிபாலா கூறுகிறார்.. எனவே மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வீட்டு வைத்திய குறிப்புகளை கண்டிப்பாக ஃபாலோ செய்யுங்கள் என இந்த பதிவில் நமக்கு விளக்குகிறார்..

சென்னையில் உள்ள சாரா பியூட்டி ஸ்டுடியோவின் அழகு கலை நிபுணரான பியூட்டிசன் தேவிபாலா மழைகால சரும பராமரிப்பு குறித்து கூறியதாவது,
இயற்கை மூலப்பொருள் மூலம் சுத்தப்படுத்துதல்
1. தேன் மற்றும் எலுமிச்சை க்ளென்சர்: தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவுகளில் எடுத்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.. பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவி, மெதுவாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். எலுமிச்சை சருமத்தை பிரகாசமாக்கும். தேன் ஈரப்பதமாக்கும்.
2. வெள்ளரிக்காய் மற்றும் தயிர் க்ளென்சர்: இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து பேஸ்ட்டாக கலக்கிக் கொள்ளவும்... பின்னர் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் விட்டு, முகத்தை கழுவி விட வேண்டும்... வெள்ளரிக்காய் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் குளிர்விக்கிறது, அதே நேரத்தில் தயிர் சருமத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் தோலை ஹைட்ரேட் செய்கிறது.
ஸ்க்ரப் செய்தல்
1. ஓட்மீல் ஸ்க்ரப்பர்: அரைத்த ஓட்மீலை தேன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் sஎய்துக் கொள்ளவும்... இந்த கலவையுடன் உங்கள் முகத்தை வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்... ஓட்மீல் மெதுவாக உங்கள சருமத்தை ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை அகற்றி தோலை பளப்பளப்பாக்கும்..
ஃபேஸ் மாஸ்க்
1. முல்தானி மட்டி மாஸ்க்: முல்தானி மட்டியை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்யவும். அதை உங்கள் முகத்தில் சமமாக தடவி, அது காய்ந்து போகும் வரை விடவும். பின்னர் தண்ணீரில் கழுவி விடவும்.. இது எண்ணெய் மற்றும் முகப்பருவை கட்டுப்படுத்த உதவுகிறது.
2. மஞ்சள் மற்றும் உளுந்து மாஸ்க்: தயிருடன் மஞ்சள் தூள் மற்றும் உளுந்து மாவு கலந்து பேஸ்ட் போல தயார் செய்துக் கொள்ளவும்... பின்பு அதை உங்கள் முகத்தில் தடவி, உலர விடவும், பின்னர் 10-15நிமிடத்தில் கழுவிவிடுங்கள்... மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதே நேரத்தில் உளுந்து மாவு சருமத்தை பிரகாசமாகிறது.
3. கற்றாழை மாஸ்க்:
கற்றாழை ஜெல் சருமத்தை ட்ரை ஆகாமல் ஈரப்பதமாக்குகிறது.. அத்துடன் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது.
தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு:
1. வேப்பம்பூ தண்ணீர்:
வேப்பம்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து, இந்த வேப்பம்பூ கலந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ பயன்படுத்தவும். வேம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. அதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்..
2. தேயிலை மர எண்ணெய்:
தேயிலை மர எண்ணெயை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.. முக்கியமாக இதை பூஞ்சை தொற்று அல்லது முகப்பருக்கள் உள்ள பகுதிகளில் தடவவும். இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
3. நீரேற்றம் மற்றும் உணவுமுறை:
உங்கள் சருமத்தை உள்ளே இருந்து நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். மழைக்காலமாக இருந்தாலும் கோடையில் குடிப்பதை போலவே நன்றாக தண்னீரை குடிக்கவும்.. மேலும் ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்க பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள்.
சூரிய பாதுகாப்பு:
மழைக்காலத்தில் கூட, புற ஊதா கதிர்கள் மேகங்கள் வழியாக ஊடுருவ முடியும். எனவே நீங்கள் வெளியில் செல்ல விரும்பினால், குறைந்தபட்சம் SPF 30 கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினால் நல்லது.. இந்த வீட்டு வைத்தியம் மற்றும் குறிப்புகள் அதிகப்படியான எண்ணெய், பூஞ்சை தொற்று மற்றும் மந்தமான தன்மை போன்ற பொதுவான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும்.. அதன் மூலம் மழைக்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவும்” என்கிறார் அழகு கலை நிபுணர்..



Click it and Unblock the Notifications
