Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது?
Onion Juice Vs Garlic Oil In Tamil: தற்போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. ஒருவருக்கு தலைமுடி பல்வேறு காரணங்களால் உதிரலாம். அதில் மாசுபாடு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி சில சமயங்களில் வயது, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில ஆரோக்கிய பிரச்சனைகளாலும், தலைமுடி அதிக உதிரலாம்.

இப்படி தலைமுடி அதிகம் உதிரும் போது, அதைக் கட்டுப்படுத்த பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், முதலில் முயற்சிக்க நினைப்பது இயற்கை வழிகளைத் தான். அதுவும் தலைமுடி உதிரும் போது ஆரம்பத்திலேயே அதை கவனித்து முறையான பராமரிப்பு கொடுத்து வந்தால், முடி உதிர்வை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
அப்படி தலைமுடி உதிர்வை நிறுத்தி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும் ஏராளமான இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டும் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களாக கருதப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவை இரண்டில் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதில் எது சிறந்தது என்பதை இப்போது காண்போம்.
தலைமுடி வளர்ச்சிக்கு வெங்காய சாறு எப்படி உதவுகிறது?
வெங்காய சாறு தலைமுடியை ஊக்குவிக்க பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இதில் சல்பர் அதிகமாக உள்ளன. மேலும் இதில் கெரட்டின் மற்றும் கொலாஜன் போன்ற முடி வளர்ச்சியை அதிகரிக்கும் புரோட்டீகளும் உள்ளன. இவை தான் தலைமுடியை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த மயிர் கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கல்களுக்கு அதிகளவிலான சத்துக்கள் கிடைக்க செய்கிறது. மறுபுறம் அதில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை ஸ்கால்ப்பில் தொற்றுகள் மற்றும் அழற்சி ஏற்படுவதைத் தடுத்து, முடி உதிர்வைக் குறைக்கிறது. கடைசியாக வெங்காய சாற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஸ்கால்ப் மற்றும் மயிர் கால்கள் சேதமடையாமல் பாதுகாக்கின்றன.
முடி வளர்ச்சிக்கு வெங்காய சாற்றினை பயன்படுத்துவது எப்படி?
* நற்பதமான வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு அதை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து அதிக நறுமணம் கொண்ட மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
பூண்டு எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது?
பூண்டு எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்கால்களை வலுப்படுத்தவும், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவி புரிந்து, தலைமுடி உதிர்வை தடுக்கிறது. ஏனெனில் இந்த பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர்க்கால்களுக்கு அதிக ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதை உறுதி செய்கின்றன. மேலும் இதில் உள்ள சல்பர் முடி வளர்ச்சிக்கு அவசியமான மற்றொரு புரதமான கொலாஜனை உருவாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் ஸ்கால்ப்பில் தொற்றுகள், பொடுகு போன்றவை ஏற்படுவதைத் தடுத்து, முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன.
முடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
* முடி வளர்ச்சியை அதிகரிக்க பூண்டு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* வேண்டுமானால் அந்த பூண்டு எண்ணெயுடன் சிறிது கற்றாழை ஜெல் மற்றும் சிறிது நறுமணமிக்க எண்ணெயை சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். இதனால் தலைமுடியில் பூண்டின் நாற்றம் வீசாமல், நல்ல மணத்துடன் இருக்கும்.
* முக்கியமாக இந்த எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.
* குறிப்பாக தலைமுடியை அலசும் போது, நல்ல நறுமணமிக்க மைல்டு ஷாம்பு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், பூண்டின் வாசனையை தவிர்க்கலாம்.
சிறந்தது எது?
வெங்காய சாறு மற்றும் பூண்டு எண்ணெய் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான விளைவுகளை கொண்டிருந்தாலும், வெங்காய சாற்றினை விட பூண்டு எண்ணெய் சற்று சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மட்டுமின்றி, செலினியம், ஜிங்க் போன்ற தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் உள்ளன. இது தவிர, இவ்விரண்டிலும் சல்பர் சம அளவில் உள்ளன. இந்த சத்து தலைமுடியை வலுப்படுத்தவும், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஒருவேளை உங்களுக்கு ஸ்கால்ப்பில் சில பிரச்சனைகள் இருந்தால், பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து, பின் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இவ்விரண்டையும் தலைமுடிக்கு பயன்படுத்த சில நாட்களிலேயே மாற்றத்தை காண முடியாது. தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் மட்டுமே, தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


