ஆண்களுக்கு ஏன் ஃபேஷியல் அவசியம் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? இன்றைக்க சந்தையில் ஆண்களுக்கான அழகு சாதனப்பொருட்கள் பல கிடைத்துவிடுகிறது. ஆண்களுக்காகவும் அவர்களின் முகத்தை பொலிவாக்கவும் பேஷியல் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.

அது வீண் செலவோ அல்லது அழகு சார்ந்த விஷயம் மட்டுமே அல்ல. ஆரோக்கியமான ஒரு விஷயத்தை நோக்கிய நகர்வு இது. சருமத்தை பாதுகாத்திடும் பேஷியல் உங்களைப் பற்றிய மதிப்பீட்டையும் உயர்ந்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக எண்ணெய் :

அதிக எண்ணெய் :

பெண்களை விட ஆண்களுக்கு அதிகப்படியாக எண்ணெய் சுரக்கும். ஏனென்றால் அவர்களுக்கு சுரக்கும் டெஸ்ட்டோஸ்டிரோன் அளவு அதிகம். அதனை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றாலோ அல்லது முகத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றால் முகத்தில் கரும்புள்ளி,பரு போன்றவை வர ஆரம்பித்துவிடும். பேஷியல் என்பது உங்கள் முகத்தில் கெமிக்கல்களை கொட்டுவதல்ல, அதிக எண்ணெய்ப்பசையை நீக்குவதுடன் சரும துவாரங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளும்.

ஆண்களின் சருமம் :

ஆண்களின் சருமம் :

ஆண்களுக்கு அதிகப்படியான டெஸ்ட்டோஸ்டிரோன் சுரப்பதால் எல்லாருக்குமே ஆயில் ஸ்கின் இருக்கும், அதிகமாக எண்ணெய் சுரக்கும் என்று சொல்ல முடியாது. அவரவர் சருமத்திற்கு ஏற்ப பேஷியல் செய்யது கொள்ளலாம். ட்ரை ஸ்கின்னாக இருந்தால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும். ஆயில் ஸ்கின்னாக இருந்தால் அடிக்கடி பேஷியல் செய்து வர முகத்தில் எண்ணெய் வழிவது குறைந்திடும்.

ஷேவிங் :

ஷேவிங் :

ஆண்களுக்கு அடிக்கடி ஷேவிங் செய்து சிலருக்கு கண்ணங்களில் அலர்ஜி அல்லது ரேஷஸ் ஏற்ப்பட்டிருக்கும். அதிலேயே மேலும் மேலும் கெமிக்கல்கள் பூசி ஷேவிங் செய்திடும் போது முகத்தையே அகோரமாக்கிவிடும்.

முகத்தி பேஷியல் செய்திடும் போது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் ரேஷஸ், அலர்ஜி போன்றவற்றிக்கு தீர்வாகவும் அமைந்திடும்.

தோற்றம் :

தோற்றம் :

முகத்தில் உள்ள திசுக்கள் எல்லாம் இறுக்கமடையும், சருமத்திற்கு பொலிவேற்றக்கூடிய க்ரீம், இயற்கையான பொருட்கள் போன்றவற்றை முகத்தில் சேர்ப்பதால் உங்கள் முகத்தில் நல்ல மாற்றங்கள் தெரியும்,அதே நேரத்தில் சருமம் டைட்டாகவும் எளிதில் சுருக்கம் விழாமலும் இருக்கும்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

முகத்தில் பரு வந்தாலோ அல்லது வேறு ஏதாவது ஏற்ப்பட்டாலோ முகமே களையிழந்து போய்விடும். இதனால் உங்களது தினசரி வேலையே பாதிக்கப்பட்டுவிடும். பேஷியல் செய்து கொள்வதால் இதனை தவிர்க்கலாம்.

பொதுவாக பல இடங்களுக்கும் சென்று வரும் ஆண்களுக்கு ஸ்ட்ரஸ் அதிகமாக இருக்கும். இந்த பேஷியல் என்பது உங்களுக்கு ஓர் ரிலாக்‌சேஷனாக இருக்கும்.

ஆரோக்கியம் :

ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக சரும ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு பராமரிக்க வேண்டும். நாட்கணக்கில் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் முகத்தில் அழுக்குகள் தேங்கி எளிதில் நோய்த்தொற்று, அலர்ஜி போன்றவை ஏற்படும்.

உங்களின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் சருமப்பிரச்சனைகளை வராமல் தடுத்திட சருமத்தை பொலிவுடன் பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do Men Need Facial?

Men need facial for their healthy skin and helps to motivate themselves
Story first published: Thursday, August 3, 2017, 17:41 [IST]