பயணத்தின்போது எடுத்துச் செல்லவேண்டிய அழகு சாதனப்பொருள்கள்

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

நீங்கள் விடுமுறை கொண்டத்தில் இருக்கிறீர்களா. அப்போ ஒவ்வொரு இடங்களாக சுற்றிப் பார்க்க ஆசையும் படுவீர்கள் அல்லவா. ஏராளமான செல்ஃபி என்று ஒவ்வொரு இடங்களிலும் உங்கள் அழகையையும் சந்தோஷத்தையும் படம் பிடித்து மகிழ்வீர்கள் உண்மை தானே.

நீங்கள் செல்லும் ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கும் உங்கள் மேக்கப் பாக்ஸ்யை தூக்கி கொண்டே அலைய முடியுமா? அதனால் தேவையான சிறிய வடிவ பாட்டில்கள், பிபி க்ரீம், ப்ளஷ் தட்டு, ஐ ப்ரோ கிட், லைனர், வாட்டர் ப்ரூவ் மஸ்காரா போன்ற அத்தியாவசியமான பொருட்களை எடுத்து செல்லுங்கள். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு.

விடுமுறை நாட்கள் பயணத்தின் போது எடுத்து செல்ல வேண்டிய முக்கியமான பியூட்டி பொருட்கள்

விடுமுறை நாட்கள் பயணத்தின் போது எடுத்து செல்ல வேண்டிய முக்கியமான பியூட்டி பொருட்கள் எவை எனத் தெரியுமா

நீங்கள் விடுமுறை கொண்டத்தில் இருக்கிறீர்களா. அப்போ ஒவ்வொரு இடங்களாக சுற்றிப் பார்க்க ஆசையும் படுவீர்கள் அல்லவா. ஏராளமான செல்ஃபி என்று ஒவ்வொரு இடங்களிலும் உங்கள் அழகையையும் சந்தோஷத்தையும் படம் பிடித்து மகிழ்வீர்கள் உண்மை தானே. ஆனால் என்ன பயணக் களைப்பும் உங்களை தொற்றிக் கொண்டே வருவது நிச்சயம். நீங்கள் செல்லும் ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கும் உங்கள் மேக்கப் பாக்ஸ்யை தூக்கி கொண்டே அலைய முடியுமா?

கண்டிப்பாக முடியாது. அதனால் தான் நாங்கள் பயணத்தின் போது உங்களுக்கு தேவையான அத்தியாவசியமான பியூட்டி பொருட்களை பட்டியலிட போகிறோம்.

நிறைய நேரங்களில் நம்மால் எல்லா பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியாது. லக்கேஜ் கனம் அதிகமாகி விடும் காரணத்தால் நாம் நம் மேக்கப் சாமான்களை விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.

அதற்கு தான் நாங்கள் சில ஐடியாக்களை உங்களுக்கு கொடுக்கிறோம். பெரிய வடிவ பாட்டிலுக்கு பதிலாக சிறிய வடிவ கைக்கு அடக்கமான பாட்டில்களை எடுத்து செல்லுங்கள். எல்லா இடங்களிலும் சிறிய டச் அப் செய்ற மாதிரி சிறிய லிப்ஸ்டிக், சிறிய பாட்டில் மாய்ஸ்சரைசர் போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.

சரி வாங்க இப்பொழுது நாம் நம் பயணத்திற்கு தேவையான பியூட்டி பொருட்களை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சன் க்ரீன்

சன் க்ரீன்

நமக்கு முதலில் முக்கியமான பொருள் சன் க்ரீன். நீங்கள் சன் க்ரீன் SPF30 அல்லது அதற்கு அதிகமான வேறொரு அளவை கூட எடுத்து செல்லலாம். ஏனெனில் நீங்கள் போகும் இடத்தில் சூரியக் கதிர்களின் தாக்குதல் எந்த அளவுக்கு இருக்கும் என தெரியாது. சில இடங்களில் வெப்பம் குறைந்து குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக்கலாம்.

சில மணி நேரங்களுக்கு ஒரு முறை சன் ஸ்கிரீன் அப்ளே செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்கள் சருமம் சூரியக் கதிர்களின் தாக்குதலிருந்து பாதுகாக்கப்படும்.

க்ளீன்சர்

க்ளீன்சர்

பயணத்தின் போது கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டிய மற்றொரு பொருள் க்ளீன்சர். இதை கண்டிப்பாக எப்பொழுதும் உங்கள் ஹேன் பேக்கிலயே வைத்து கொள்வது நல்லது. எனவே சிறிய வடிவ க்ளீன்சரை வாங்கி கொண்டால் எடுத்து செல்லவும் எளிதாக இருக்கும். வெளியே செல்லும் போது சுற்றுப் புற மாசுக்களால் சருமம் பாதிப்படையும் அதற்கு க்ளீன்சர் பயன்படும்.

மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசர்

நாம் எந்த ஒரு மேக்கப் செய்தாலும் முதலில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் தேவைப்படும். எனவே மாய்ஸ்சரைசர் கொண்டு செல்வது முக்கியம். ஜெல் வகை மாய்ஸ்சரைசர் என்றால் எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். அதே மாதிரி நீங்கள் ஹையலூரோனிக் அமில மாய்ஸ்சரைசர் கூட பயன்படுத்தி கொள்ளலாம். மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கொண்டால் நீங்கள் செல்லும் இடங்களின் எந்த விதமான கால நிலையையும் பொருப்படுத்த தேவையில்லை.

பிபி க்ரீம்

பிபி க்ரீம்

உங்கள் பயணத்தின் போது பவுண்டேஷன், ப்ரைமர், கண்சீலர், கலர் கரக்டர் இப்படி எல்லாவற்றையும் கட்டி தூக்கிக் கொண்டு செல்ல முடியாது. எனவே இவற்றிற்கு பதிலாக எளிதான ஒரு வழி என்றால் பிபி க்ரீம். இந்த பிபி க்ரீம் நம் முகத்தை பொலிவாக்குதல், பருக்கள் போன்றவற்றை மறைத்தல், சூரியக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு, மாய்ஸ்சரைசிங் என்று ஒட்டுமொத்த நன்மைகளையும் ஒருங்கே தருகிறது. எனவே உங்கள் பயணத்திற்கு ஒரு சிறந்த க்ரீம் என்றால் பிபி க்ரீம்.

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

பெண்களுக்கான மேக்கப் பொருட்களில் முக்கியமானது லிப்ஸ்டிக். ஆனால் எல்லா நிறங்களையும் நம்மால் பயணத்தின் போது தூக்கி செல்ல முடியாது. எனவே பிங்க், சரும நிற கலர் மற்றும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போன்ற மூன்று நிறங்கள் நமக்கு போதுமானது. இதில் சிவப்பு நிறம் உங்கள் இரவு நேர பயண கொண்டாட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும். பிங்க் மற்றும் சரும நிற கலர் லிப்ஸ்டிக்கை நீங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே பயணத்தின் போது இந்த மூன்று நிறங்களை கொண்டு செல்வதும் உங்களுக்கு செளகரியமாக இருக்கும்.

ப்ளஷ்

ப்ளஷ்

உங்கள் கன்னங்களுக்கு அழகுபடுத்த ப்ளஷ் மிகவும் முக்கியம். நீங்கள் பயணத்தின் போது ஒட்டுமொத்த ப்ளஷ் கிட்டையும் தூக்கி கொண்டு செல்வதை விட ப்ளஷ் தட்டை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். உங்கள் லிப்ஸ்டிக்கு தகுந்த மாதிரி ப்ளஷ்யை பயன்படுத்தி இயற்கையாகவே ஜொலிக்கலாம். ப்ளஷ் தட்டு உங்களுக்கு எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதோடு விலையும் குறைவு.

டோனர்

டோனர்

நிறைய பெண்கள் டோனரை பயன்படுத்துவதில்லை. நீங்கள் முகத்தை கழுவி விட்டு மேக்கப் போடும் போது கண்டிப்பாக டோனர் தேவை. ஏனெனில் நீங்கள் முகத்தை சுத்தம் செய்தும் இன்னும் மூடியே இருக்கும் சரும துவாரங்களை டோனர் தூய்மை செய்கிறது. மேலும் உங்கள் முகத்தில் இன்னும் அழுக்குகள் மாசுக்கள் இருந்தால் நீக்கப்படும்.

ஐ ப்ரோ கிட்

ஐ ப்ரோ கிட்

நிறைய பெண்கள் பயணத்தின் போது இதை எடுத்து செல்லுவதில்லை. ஆனால் உங்கள் புருவங்கள் தான் உங்கள் முகத்திற்கே அழகு தரும். மேலும் சீக்கிரமாகவும் புருவங்கள் வளர்ந்தும் விடும். நீங்கள் இதுவரை புருவத்தை அழகுபடுத்தி விட்டு பயணத்தின் போது விட்டுவிட்டால் உங்கள் முகத் தோரணையே மாறிவிடும். எனவே உங்கள் புருவத்தை சரி செய்ய தேவையான கருவி, பென்சில் அல்லது வேக்ஸ் இப்படி எந்த ஒரு விஷயமானாலும் ஐ ப்ரோ கிட்யை எடுத்து செல்லுங்கள்.

லைனர்

லைனர்

பயணத்தின் போது பெண்கள் கண்களை அழுகுபடுத்துவதும் முக்கியம். ஆனால் நம்மால் எல்லா ஐ ஷேடோ கிட் களையும் எடுத்து செல்ல முடியாது. எனவே பென்சில் அல்லது லிக்யூட் ஐ லைனரையாவது எடுத்து செல்லுங்கள். நிறைய பெண்கள் பென்சில் ஐ லைனரையே விரும்புகின்றனர். ஏனெனில் எளிதாக ஸ்மோக்கி ஐ லுக் கிடைக்கும். லிக்யூட் ஐ லைனர் உங்களுக்கு கூர்மையான விங்க் வடிவ இமைகளை பெற உதவும்.

வாட்டர் ப்ரூவ் மஸ்காரா

வாட்டர் ப்ரூவ் மஸ்காரா

உங்களால் செயற்கை கண் இமைகளை எல்லாம் பயணத்தின் போது எடுத்து சென்று பயன்படுத்த முடியாது. மேலும் சாதாரண மஸ்காராவை பயன்படுத்தினால் பயணத்தின் போது வியர்வையால் களைய வாய்ப்புள்ளது. மேலும் செல்லும் இடங்களில் நீச்சல் போன்றவற்றை மேற்கொண்டால் மஸ்காரா களைந்து விடும். எனவே எப்பொழுதும் பயணத்தின் போது வாட்டர் ப்ரூவ் மஸ்காராவை எடுத்து செல்லுங்கள். இது கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

கண்டிப்பாக இந்த டிப்ஸ்கள் உங்கள் பயண கொண்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: make up
English summary

பயணத்தின்போது எடுத்து செல்ல வேண்டிய முக்கிய பியூட்டி பொருட்கள் எவை எனத் தெரியுமா

beauty-essentials-to-carry-when-you-are-travelling
Story first published: Wednesday, March 7, 2018, 8:00 [IST]