ஷேவ் செய்வதால் வரும் கொப்புளங்களை உடனடியாக போக்க 6 சூப்பர் டிப்ஸ்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

சில ஆண்கள் ஷேவ் செய்வதையே வெறுப்பார்கள். அதற்கு காரணம், ஷேவ் செய்வதால் உண்டாகும் சிறு சிறு கொப்புளங்கள் தான். அப்படியே ஷேவ் செய்தாலும் கொப்புளங்களின் மீது இருக்கும் முடியானது, உங்களது அழகையே கெடுப்பதாக இருக்கும்.

ஷேவிங் செய்த பிறகு உண்டாகும் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் எதனால் வருகிறது என தெரியுமா? நீண்ட நாட்களாக ஒரே ரேசரை உபயோகிப்பதாலும், தரமற்ற ஷேவிங் கீரிம்களை பயன்படுத்துவதாலும் இது போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.

Best Home Remedies to Get Rid of Razor Bumps

இந்த பகுதியில் ஷேவ் செய்த பிறகு வரும் கொப்புளங்களில் இருந்து தப்பிக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. குளிர்ந்த அல்லது சூடான நீர்:

1. குளிர்ந்த அல்லது சூடான நீர்:

ஷேவிங் செய்த பின்னர் கொப்புளங்கள் வந்தால், அதன் மீது உடனடியாக சூடான அல்லது குளிர்ந்த நீரினால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதற்கு குளிர்ந்த அல்லது சூடான நீரில் துண்டை நனைத்துக்கொண்டு பின்னர் அந்த துண்டினால் முகத்தில் ஒத்தடம் கொடுங்கள்.

2. டீ ட்ரீ ஆயில்

2. டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ (tea tree oil) ஆயில் சரும பிரச்சனைகளை போக்கும் மிகச்சிறந்த ஆயில் ஆகும். இது ஒரு ஆன்டி -பாக்டீரியல் ஆகும். அரை டம்ளர் தண்ணீரில் மூன்று துளிகள் டீ ட்ரீ ஆயிலை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை பஞ்சில் தொட்டு, பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். நல்ல பலனை பெற இதை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

3. பேபி பவுடர்

3. பேபி பவுடர்

பேபி பவுடரை ஷேவ் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்னர் தடவி விட்டு, பின்னர் ஷேவ் செய்வதன் மூலம் காயங்கள் இன்றியும், கொம்புளங்கள் இன்றியும் ஷேவ் செய்ய முடியும்.

4. கற்றாளை

4. கற்றாளை

கற்றாழை உங்களது சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

இது காய்ந்ததும், குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இந்த முறையை தினமும் குறைந்தது இரண்டு முறைகளாவது செய்ய வேண்டும்.

5. டீ பேக்

5. டீ பேக்

டீ யில் டெனிக் ஆசிட் அடங்கியுள்ளது. இந்த டீ பேக்கை சுடு நீரில் வைத்து, பின்னர் கன்னங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் சிவந்த நிறத்தையும், முகப்பருக்களையும் நீக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Home Remedies to Get Rid of Razor Bumps

Best Home Remedies to Get Rid of Razor Bumps
Subscribe Newsletter