Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வீட்டிலேயே காணப்படும் 5 மிகச்சிறந்த மேக்கப் நீக்கும் பொருட்கள்!!!
ஒளி பொருந்தியவாறும், பார்வைக்கு பளிச்சிடும் வகையிலும இருக்கும் சருமத்தை பெற வேண்டுமானால், அதை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு சருமத்தை பாதுகாக்கும் பொருட்களை கவனத்தில் வைத்திருப்பதும், பராமரிப்பதும் இன்றியமையாத விஷயமாகும்.
நம்முடைய இயற்கையான தோற்றத்தை மேக்கப் போடுவதன் மூலம் மெருகூட்ட முடியும் என்றாலும், அதனை முறையாக நீக்காவிடில் மிகவும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பதை மறந்து விடக் கூடாது. உங்களுடைய மேக்கப்பை கலைக்காமல் தூங்கினால் தோலில் உள்ள துளைகள் அடைத்துக் கொள்ளவும் மற்றும் அரிப்புகள் வரவும் செய்யும். அது மட்டுமல்லாமல், இளநரை வந்து உங்களுடைய அழகு பாழ்படவும் செய்யும். எனவே, நீங்கள் இரவு தூங்கும் முன்னர் மேக்கப்பை கலைத்து விடுவது நல்ல பலன் தரும்.
செயற்கையான மேக்கப் நீக்கும் சாதனங்கள் மிகவும் பிரபலமாகவும், எளிதில் கிடைக்கும் வகையிலும் இருக்கும் வேளையில், இயற்கையான வழிமுறைகளை நீங்கள் நாடிச் செல்லவும் முடியும். இந்த கட்டுரையில் உங்கள் வீட்டிலேயே கிடைக்கக் கூடிய 4 வகையான மேக்கப் நீக்கும் சாதனங்களை அடையாளம் காட்ட நாங்கள் உதவுகிறோம்.
இவற்றால் சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு விளைவிக்காத பொருட்களாக இருக்கும் இவை, பாதுகாப்பானவையாகவும், இயற்கையானவையாகவும் உள்ளன.

பாதாம் பால்
பாதாம் கொட்டையிலிருந்து பாதாம் பால் தயார் செய்யப்படுகிறது. பிற பால் வகையறாக்களைப் போல், பாதாம் பாலில் லாக்டோஸ் இருப்பதில்லை. உரிக்கப்பட்ட பாதாம் கொட்டைகளை எடுத்து, நன்றாக வெளிரும் வகையிலும், கிரீம் போலவும் அரைத்துக் கொள்ளவும். நாள் முழுவதும் உடலில் தங்கியிருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் மேக்கப்பை நீக்கவும் மற்றும் இயற்கையாகவே சுத்தம் செய்யும் கரைசலாகவும் பாதாம் பால் உள்ளது. இவ்வாறு மேக்கப்பை நீக்கும் போது, சிறிதளவு பாதாம் பாலை எடுத்து ஒரு பருத்தி துணியை உருண்டையாக சுற்றி அதில் நனைத்து, முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு தேய்த்து விட்டு முகத்தை நன்றாக கழுவவும். அதிகபட்சமாக இருக்கும் பாதாம் பாலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் ஈரப்பதத்தை நிறுத்தி வைக்கும் குணம், உங்கள் முகம் வறண்டு போகாமலும் மற்றும் சோர்வடையாமலும் இருக்கச் செய்ய உதவும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் வெள்ளரிக்காய் உதவுவதால், செயற்கையான மேக்கப் நீக்கும் சாதனங்களை தேடிச் செல்வதை தவிர்க்கலாம். நீங்கள் வெள்ளரிக்காய் சாற்றைக் கொண்டு உங்கள் முகத்தை கழுவலாம் மற்றும் வெள்ளரிக்காயை எடுத்து நன்றாக அரைத்து அந்த கலவையை முகத்தில் பசை போல தேய்த்து ஒட்டிக் கொள்ளவும் செய்யலாம்.

சோயா பால் மற்றும் வாழை
சோயா பால் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் கலவை மேக்கப் சாதனங்களை நீக்க மிகவும் இயற்கையான வழிமுறையாக உள்ளது. இந்த கலவையில் உள்ள என்சைம்கள் மேக்கப்பை கரைக்கவும் மற்றும் முகத்தில் தங்கியிருக்கும் அழுக்கை நீக்கவும் உதவுகின்றன. இந்த கலவையை உருவாக்கும் போது, வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டி, சோயா பாலுடன் கலந்து கொள்ளவும். இந்த இரண்டும் ஒன்றாக நன்றாக கலக்கும் வகையில் கலந்து விட்டு, முகம் முழுவதும் தடவி விடுங்கள். இந்த கலவையை சில நிமிடங்கள் முகத்தில் தடவி விட்டு, நன்றாக கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் உங்களுக்கு அகமும், புறமும் உதவக் கூடிய சுகாதாரமான எண்ணெயாகும். இயற்கையான பொருளாகவும், சிராய்ப்புகள் தராமலும் இருக்கும் இந்த எண்ணெய் சிறந்த மேக்கப் நீக்கும் சாதனமாகவும் உள்ளது. ஆலிவ் எண்ணெயை தனியாகவும் அலல்து காட்டுச் செடியுடன் () கலவையாகவும் கலந்து பயன்படுத்தலாம். காட்டுச்செடியுடன், ஆலிவ் எண்ணெயை கலந்து கிடைக்கும் கலவைக்கு சுருக்கங்களை கட்டுப்படுத்தும் குணமும், ஈரப்பதத்தை ஏற்படுத்தும் குணமும் உள்ளன. இந்த கலவை சரும துளைகள் அடைத்துக் கொள்வதை தவிர்க்கவும் மற்றும் மோசமான மேக்கப்பை நீக்கும் குணங்களும் உள்ளன.

தேங்காய் எண்ணெய்
மிகவும் நன்றாக கரையக் கூடிய கொழுப்புகளை கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய், வறண்ட தோலை ஈரப்பதமாக வைத்திருக்கும் குணமும் கொண்டுள்ளது. மிகவும் கடினமாக இருக்கும் மேக்கப்பை, குறிப்பாக கண்களில் இருக்கும் மேக்கப்பை தேங்காய் எண்ணெய் நீக்கி விடுகிறது. மேலும், மேக்கப்பை தளர்த்தி விட்டு, பூஞ்சைகள் மற்றும் வைரஸ்களை நீக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. எனவே, தேங்காய் எண்ணெயை நீங்கள் சிறந்த ஈரப்பதமூட்டும் பொருளாகவும் மற்றும் சரும பாதுகாப்பு பொருளாகவும் மேக்கப்பை கலைத்த பிறகு சருமத்தில் போட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு
மேற்கூறிய பொருட்களை நீங்கள் உங்கள் வீட்டிலேயே கண்டறிய முடியும் என்பதால், இவற்றை எளிதில் முயற்சி செய்து பார்க்கலாம். அதன் பின்னர், நீங்கள் புதிதாக மேக்கப் நீக்கும் சாதனங்களை வாங்க வேண்டிய அவசியம் கூட இருக்காது!



Click it and Unblock the Notifications