For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்கு கண்ணாடியுடன் அழகாக தெரிய ஆசையா? அப்ப இத ஞாபகத்துல வெச்சுக்கோங்க...

By Super
|

கண்ணாடி அணிய அனைவருக்கும் ஆசை தான். ஆனால் அதற்கான அலங்காரம் செய்யாமல் கண்ணாடி அணிந்தால் நாம் கேளி பொருள் ஆகிவிடுவோம். நம்மை பார்த்து அனைவரும் அசந்து போவார்கள் என்று நாம் நினைத்தால் அனைவரும் பயந்து ஓடிவிடுவார்கள். இது தேவையா? அதற்கு தான் அழகான ஆடை மற்றும் மேக்-அப்புடன் கண்ணாடி அணிந்தால் அசந்து போவார்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. ஆம், நாம் உடுத்தும் உடை நம்மை பற்றி பேச வேண்டும். மேலும் அந்த உடையுடன் சேர்த்து, நாம் அணியும் கண்ணாடியும் நாம் யார் என்று கூறும். ஆகவே கண்ணாடியை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்கான ஆடை அலங்காரத்திலும் கவனம் தேவை. அதைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புருவத்தை அழகுப்படுத்துங்கள்

புருவத்தை அழகுப்படுத்துங்கள்

புருவங்களை சுத்தமாகவும், நல்ல வடிவத்திலும் வைத்து கொண்டால், கண்கள் எடுப்பாக தெரியும். இதை செய்தால் கண்ணாடி அணியவே தேவையில்லை. மேலும் புருவத்தின் இடையில் அதற்கென இருக்கும் பெளடரையும், லைனரையும் பயன்படுத்தி அழகுபடுத்தலாம்.

கன்சீலர் பயன்படுத்தவும்

கன்சீலர் பயன்படுத்தவும்

கண்ணாடிகள் கண்களுக்கு கீழ் இருண்ட கருவளையங்களை கொண்டு வருகின்றன. இவை கண்களின் அழகை கெடுக்கும். எனவே கன்சீலரைப் பயன்படுத்தி கண்களை அழகுபடுத்துங்கள்.

நிறத்தின் தன்மைக்கு ஏற்ற ஐ ஷேடோவை பூசுங்கள்

நிறத்தின் தன்மைக்கு ஏற்ற ஐ ஷேடோவை பூசுங்கள்

கண்கள் மற்றும் கண்ணாடிகள் இரண்டையும் முன்னிலைப்படுத்த விரும்பினால், அதற்கு ஏற்ற ப்ரேம் பயன்படுத்தவும். எப்பொழுதும் நிறத்தை அடர்த்தியாகவும், மெல்லிய நிறத்திலும் தேர்ந்தெடுக்காமல் நடுநிலையில் நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.

ஐ-லைனர் தேவை

ஐ-லைனர் தேவை

கண்கள் அழகாக காட்சியளிக்க ஐ-லைனர் தேவை. அதற்கு மெல்லிய கோடாக ஐ-லைனரை வரையவும். அடர்த்தியாக வேண்டாம். ஏனெனில் நீங்கள் மற்றவர்களை கவர வேண்டுமே தவிர பயத்தை ஏற்படுத்தக்கூடாது. எனவே மெல்லியதாக வரையவும்.

கவரும் லிப் நிறம் தேவை

கவரும் லிப் நிறம் தேவை

ப்ரௌன் அல்லது கருப்பு நிற கண்ணாடி வேண்டுமெனில், லிப் கலரை கவனமாக தேர்ந்தெடுக்கவும். அதிலும் அடர்ந்த சிவப்பு அல்லது கவரும் பிங் மிகவும் அழகாக இருக்கும்.

சரியான தலை அலங்காரம் தேவை

சரியான தலை அலங்காரம் தேவை

கொஞ்சம் மேலே, கொஞ்சம் கீழ் என்றுள்ள முடி அலங்காரம் எல்லாம் நன்றாக இருக்காது. ஒன்று முடியை கட்டாமல் லூசாக விடுங்கள் இல்லையென்றால் குதிரை வால் ஸ்டைல் போடுங்கள். இது மேலும் அழகுப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Look Pretty In Glasses?

Glasses are a great way to look smart, sassy and sophisticated. Here are ways to look pretty in glasses.
Desktop Bottom Promotion