For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீசனுக்கு ஏற்ற டிரஸ் போடுங்க! நீங்க அழகு ராணிதான்!!

By Mayura Akilan
|

Saree
கந்தையானாலும் கசக்கி கட்டு என்பார்கள். சாதாரண காட்டன் உடை என்றாலும் அதை நன்றாக அணிந்தாலே போதும் அசத்தலாய் இருக்கும் . ஆனால் சில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போது எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் உடைகளாக இருந்தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.

ஆடை அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் நீங்களும் அழகு ராணிதான்.

ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.

கோடைக்கேற்ற ஆடை

கோடை சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம். பிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.

வியர்க்காத ஆடைகள்

ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.

வெயில் காலங்களில் கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

உடல் பருமனானவர்கள்

பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள். பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.

உயரமாக ஒல்லியாக உள்ளவர்கள்

ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. சிறிய பார்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் பாட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.

கறுப்பு அல்லது மாநிறப் பெண்கள்

கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் கடும் நிறத்தில் உள்ள சேலைகளை அணிய வேண்டாம் கருப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய ஜரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ சேலை அணியலாம். பெரும்பாலும் பார்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.

சிவப்பு நிறப் பெண்ணா

சிவந்த நிறம் உடையவர்கள் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம்.

சீசனுக்கு ஏற்ற உடைகள்

பெண்கள் துணிகளை வாங்கச் செல்லும்போது அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம். எனவே ஆடை அலங்கார நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத்திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம்.

English summary

The Secrets Of Well-Dressed Women | சீசனுக்கு ஏற்ற டிரஸ் போடுங்க! நீங்க அழகு ராணிதான்!!

These days, the economy is forcing even the biggest shopaholics to put the breaks on spending. And clothing may be one of the first things to go. Fashion diet? Yes. But it doesn't have to feel like starvation: Take a leaf out of the French woman's book and learn to shop smart. Here, five tips from stylish women on how to dress gorgeously and save money while doing so.
Story first published: Monday, April 9, 2012, 13:23 [IST]
Desktop Bottom Promotion