Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மழைக்காலத்தில் எந்த மாதிரி மேக் அப் போடலாம்?

தூசி, அழுக்குகள் அதிகம் படியும் இடம் முகம் எனவே முதலில் முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும் பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்ணீரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர்க்க உதவும்.
இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின், தண்ணீரால் கழுவ வேண்டும்.
ஐஷேடோவாக, பிங்க் கலர் கிரீமை பயன்படுத்தலாம். பின், கண் அலங்காரத்திற்கு, தண்ரில் கரையாத மஸ்டுகாரா உபயோகிக்க வேண்டும்.மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ்டிக் தான் சிறந்தது. லைட் ஷேட், லிப் லைனர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத்தலாம்.
மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். கூந்தலில் ஏற்படும், அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலுவற்று காணப்படுகிறது. கூந்தல் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவை மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்.
மேலும் காற்றில் உள்ள ஈரப்பதம், கூந்தலை வலுவிழக்க செய்வதோடு, கூந்தலில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்திற்கு, கூந்தலுக்கு அதிகமாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிதமான ஷாம்புகள் பயன்படுத்தி, குளிக்கலாம். தலையை சற்றே தளர்வாக பின்னலாம். இறுக்கமான பேன்டுகள் போடுவதோ, தலையை ப்ரீஹேர் விடுவதோ கூடாது.
மழைக்காலத்தில் சாலைகளில் சேறு இருக்கும் என்பதால், வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். நீலம், ரிச் கிரீன், அடர் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் உடையணியலாம். கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்கவேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது. அதேபோல் டெனிம் ஜீன்ஸ் போடுவதை தவிர்க்கவேண்டும். காட்டன் உடைகளையோ, த்ரி போர்த் பேண்ட்களை போடலாம்.
மழைக்காலத்தில் மேக்-அப்பிற்கு ஏற்றவாறு, எடை குறைவான நகைகளை அணியலாம்.மழைக்காலத்தில் குடையும், ரெயின் கோட்டும் அவசியம். எனவே மனதிற்கு இதமான நிறங்களில் அவற்றை தேர்ந்தெடுக்கலாம். மழைக்காலத்தில் லெதர் ஷு, ஹை ஹீல்ஸ் போன்றவைகளை தூக்கி தூரப்போடுங்கள். லைட் வெயிட் செருப்புகளை போடுங்கள்.



Click it and Unblock the Notifications