Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
கோடையில் அழகாக இருக்க வேண்டுமா?

குளிர்ச்சியாக்குங்கள்
மேக்-அப் போடும் போது நல்ல இயற்கை வெளிச்சத்தில் போடவும். லைட் வெளிச்சத்தில் உங்கள் மேக்-அப் சரியாக தெரியாமல் வேறு விதமாக காட்டக்கூடும். மேக்-அப் போட்டுக் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான் அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயிண்ட் அடித்த மாதிரி தான் தெரியும். மேக்-அப் போட்டு முடித்த பிறகு ஜில்லுனு ஜூஸ் ஏதாவது குடியுங்கள் அது உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
மஸ்காரா போடுங்க
திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி போன்ற விழாக்களுக்கு செல்லும்போது மட்டுமே பிளஷர் உபயோகிக்கவும். மற்றபடி முக்கிய இடங்களுக்கு செல்லும் போது அது வேண்டாம். மஸ்காரா உபயோகிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் நிறைய கோட் தடவினால் செயற்கையாக தெரியும். ஒன்றிரண்டு கோட்டோடு நிறுத்திக் கொள்ளவும். இன்டர்வியூ போகிற போது உடைகளுக்கு மேட்ச்சாக ஐஷேடோ மற்றும் மஸ்காரா உபயோகிப்பதை தவிர்க்கவும். அது உங்களை நவ நாகரிக பெண்ணாக காட்டினாலும், அந்த இடத்திற்கு ஒத்து வராது.
வாட்டர் புரூப் மேக் அப்
பகல் வேலைகளில் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது அளவுக்கதிகமாக மேக்-அப் போட வேண்டாம். அதே மாதிரி அனைத்து மேக்-அப் பொருட்களும், சன் ஸ்கிரீன் கலந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது ஐலைனர், மஸ்காரா, லிப்ஸ்டிக் என எல்லாமே வாட்டர் புரூப் ரகத்தில் கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்தால் வியர்வையோ, தண்ணீரோ பட்டால் மேக்-அப் கலையாமல் அப்படியே இருக்கும்.
புத்துணர்ச்சி அழகு
பவுன்டேஷன், காம்பேக்ட் பவுடர் போன்றவற்றை எப்போதும் கைப் பையில் வைத்திருங்கள். நீங்கள் போன காரியம் தாமதமாகும் என தெரிந்தால் மறுபடி ஒருமுறை டச்-அப் செய்து கொள்ளலாம். வேலை முடிந்து அங்கிருந்து நேராக ஏதேனும் முக்கிய இடத்திற்கோ, தியேட்டருக்கோ செல்ல வேண்டுமா கவலை வேண்டாம். கண்களுக்கு மட்டுமாவது மேக்-அப் போட்டுக் கொள்ளுங்கள் புத்துணர்வோடு திகழ்வீர்கள்.



Click it and Unblock the Notifications
