For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகிற்கு மெருகூட்டும் செந்நிற ஆடைகள்!

By Mayura Akilan
|

Deepika Padukone
அழகாக பிறர் கண்களுக்கு தோற்றமளிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படி எனில் சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள் என்று ஆலேசானை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். சிவப்பு நிறம் உஷ்ணத்தின் அடையாளம். இந்த வண்ணம் எளிதில் பிறர் கவனத்தைக் கவரும். இந்த நிற ஆடையை உடுத்தியுள்ளவர்கள் எளிதில் வெற்றியை அடைவார்கள் என்றும் ஆடை அலங்கார நிபுணர்கள் கூறியுள்ளனர். சிவப்பு நிற ஆடையைப் பற்றி அவர்கள் பட்டியலிட்டுள்ளதை தெரிந்து கொள்ளுங்களேன்.

கவர்ச்சித் தன்மை

பொதுவாக சிவப்பு நிற உடை மற்றவரைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான நிறம். பகல், இரவு எந்த நேரத்திற்கும் சிவப்பு வண்ண உடை ஏற்படுத்தும் எண்ணமே குறிப்பாக கவர்ச்சி அம்சம்தான். இளம்பெண்கள் இந்த வண்ண உடையை அணியும் போது தனிக் கவர்ச்சியான அழகை அதிகரித்துக் காட்டும். இது மாநிறத்தவர்க்கும் ஏற்ற உடையாகும். சிவந்த மேனியுடையோரும் இதைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல இரத்த சிவப்பு எனும் ப்ளெட் ரெட்தான் அழகை எடுப்பாகக் காட்டும்.

உணர்வை தூண்டும் நிறம்

சிவந்த மேனியர், இதை உடுத்தியிருக்கும் போது ஒரு செக்ஸியான எண்ணத்தை ஏற்படுத்தும் நிறம். பார்ப்பவரின் உணர்வைத் தூண்டும், மோகம் கொள்ளவைக்கும் திறனுடைய வலிமையான சக்தி உள்ள நிறம் சிவப்பு என்கின்றனர் ஆடை வடிவமைப்பாளர்கள். அதனால்தான் திரைப்படங்களில் சினிமாக் கதாநாயகிகள் இதை உடுத்தி வரும்போது இந்த எண்ணம் ஏற்படத்தான் கதையின் காட்சி அமைப்புகளை அமைக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.

கருஞ்சிவப்பு நிறமும், சிவந்த மேனியருக்குக் கவர்ச்சியாக இருக்கும், நளினமாகத் தெரிவார்கள். பருமனான பெண்களை இந்த வண்ணம் ஒல்லியாகக் காட்டும்.

இளம் சிவப்பு நிறம்

நிறம் குறைவானவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் ஏற்ற கலர். இந்த நிறமுடையவர்களுக்கு ரோஸ் தனியான ஒரு அழகை கொடுக்கவல்லது. ஒரே நிறத்தில் சேலையும் அணிவது பொருத்தமாக இருக்கும். சுடிதார் அணிபவர்களும் இது பொருந்தி வரும் இளவயதுக்காரர்கள் டிசைன் ஜாக்கெட்டோடு பிளெயின் புடவையும் அல்லது பார்டர் மட்டும் உள்ள புடவையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

உடல் சூட்டை அதிகரிக்கும்

சிவப்பு நிற ஆடைகளில் அதிக பூக்களில்லாமல் டிசைன் இல்லாமல் உடுத்தினால் சிறப்பாக இருக்கும். இரத்தச் சிவப்பு நிற உடைகளை முடிந்தமட்டும் பார்டர் மட்டுமே இருக்குமாறு தேர்ந்தெடுத்து உடுத்தினால் சிறப்பானதொரு அழகைக் கொடுக்கும், பொருத்தமாகவும் இருக்கும். பகல் நேரத்தில் சிவப்பை அணிந்து சென்றால் உடல் சூட்டை அதிகரித்து வெப்பம் கொள்ளவைக்கும். ஆனால் சூரிய ஒளியால் அழகை அதிகப்படுத்தி காண்பிக்கும் என்பதும் உண்மை. அதனால் காட்டன் சிவப்புப் புடவைகளை பகலில் உடுத்திச் செல்வது நலம்.இரவு நேரத்திற்கு மிக பொருந்தி வரும் நிறம் சிவப்பு. விழாக்கள், மேடைகள் முதலியவற்றில் பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டும்.

மணப்பெண் உடைகள்

நம் நாட்டில் பெரும்பான்மையான இளம்பெண்கள் திருமண முகூர்த்தத்திற்கு சிவப்பு நிறத்தில் ஜரிகை நிறைய உள்ள பட்டுப் புடவைகளையே தேர்ந்தெடுப்பதாக கூறுகிறார்கள். சிவப்பு நிற உடையும், மாநிறத்தவரும் சிவந்த மேனியுடையோரும் பகல் இரவு எந்த நேரத்திலும் அணிய ஏற்றது. இரவு விழாக்களுக்குமட்டும் ஜரிகை பட்டு புடவைகளையே தேர்ந்தெடுங்கள், சிறப்பாக இருக்கும்.

மணப்பெண்ணிற்கு திருமண வைபவத்தில் சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடமைந்த புடவை பாந்தமாக இருக்கும். பெண்ணின் நகையின் அலங்காரத்திற்கு அவளை ஒரு தேவதையாக அனைவரின் கண்களுக்கும் காட்டும். திருமண வைபவத்திற்கு இது ஒரு பொருத்தமான வண்ணம். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடியது.

பெரும்பாலும் இளவயதுப் பெண்கள் சிவப்பு பட்டுப் புடவையையே விரும்புவது ஒரு கலை அம்சம் என்றே கூறலாம். ஒல்லியான பெண்கள் சிவப்பை உடுத்துவதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில், இது அதிக ஒல்லியாக காட்டும்.

ஜரிகை வைத்த ஜாக்கெட்டும், சிறிய பார்டர் வைத்த ஜரிகை வேலைபாடமைந்த புடவையும் திருமண விழாக்களில் உடுத்திக்கொள்லலாம். பெரிய பார்டர் வைத்த புடவைக்கு ப்ளெய்ன் ஜாக்கெட் ஏற்றது.

பிரியம் அதிகரிக்கும்

கணவருடன் வெளியே செல்லும்போது சிவப்பை உடுத்திச் செல்லுங்கள். இது, அவருக்கு உங்கள் மேல் பிரியம் அதிகம் வரச்செய்யும். அதுவும் இரவு நேரங்களில் நேரம் காலமறிந்து சிவப்பை உடுத்துங்கள்.சிவப்பின் அபாயத்தையும், ஆதிக்கத்தையும் புரிந்து நடந்து கொள்வது புத்திசாலித்தனம்.

English summary

How To Wear Red – Look Gorgeous With Red | அழகிற்கு மெருகூட்டும் செந்நிற ஆடைகள்!

Red is one of the very hot and appealing colours. Red attracts the attention and has many Positive effects like it helps you to increase zeal, stimulates energy, also boost the action and confidence and also a feeling of protection from fears and anger.
Story first published: Friday, March 9, 2012, 10:44 [IST]
Desktop Bottom Promotion