Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
முகம் ஜொலி, ஜொலிக்க என்ன செய்யலாம்?

அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள். தற்போதுள்ள பெண்கள் பவுன்டேஷன், கிரீம், பவுடர், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஸ்டிக்கர் பொட்டு என்று எத்தனை பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அடேங்கப்பா அப்பா மற்றும் கணவன்மார்களின் காசெல்லாம் மேக்கப் பொருட்கள் வாங்கியே காலியாகிவிடும் போல.
அப்பா, கணவர் காசை மிச்சப்படுத்தி இயற்கையாகவே எப்படி அழகாகத் தோன்றலாம் என்பதைப் பார்ப்போம்.
இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்குங்கள். ஒழுங்காகத் தூங்கினாலே முகம் தெளிவாக இருக்கும். இல்லையென்றால் நீஙகள் என்னதான் மேக்கப் போட்டாலும் முகம் சோர்வாகவே காணப்படும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை முகத்தை குளி்ர்ந்த நீரால் கழுவுங்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை கழுவுங்கள்.
கண்டதை முகத்திற்குப் போடாமல் கடலை மாவை பேஸ்ட் போன்று செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவிப் பாருங்கள் முகம் ஜொலிக்கும். வீட்டில் இருக்கும் தேனை எடுத்து அதில் சிறிதளவு உப்பு கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் புதுப்பொலிவு பெறும். வீட்டில் ஆலிவ் எண்ணெய் இருக்கிறதா வாரத்தில் 2 முறையாவது முகம் மற்றும் உடலில் தடவி ஊற வைத்து குளியுங்கள். அது தோலுக்கு நல்லது.
உங்களுக்கு பாலாடை உண்ண பிடிக்காதா, சாப்பிடாதீர்கள். அதை எடுத்து கீழே போடாமல் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அழகுக் குறிப்பு கேட்பார்கள்.
இதையெல்லாம் விட எளிய வழி நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பதால் தோல் அவ்வளவு சீக்கிரம் சுருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இயற்கையாகவே கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் இருக்க கண்டதை போட்டு முகத்தை கெடுத்துக் கொள்வானேன்.



Click it and Unblock the Notifications