Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
கம்பீரமாக தெரிய அழகா உடை உடுத்துங்க!

ஆடை அணிய சில டிப்ஸ்
தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால் சாதாரண காட்டன் துணிகளை உடுத்தினால் கூட நேர்த்தியாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது ரிச்சாக தெரியும். எனவே பேஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும்.
சீசனுக்கு ஏற்ற ஆடைகள்
ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் டிரஸ் அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.
ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், "பளிச்' வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வெள்ளிக்கிழமை உடை
வெள்ளிக்கிழமை என்றாலே சில ஸ்பெசல்தான் பெண்கள் என்றால் பட்டு வகையறாக்களில்தான் அலுவலகத்திற்கு கூட செல்வார்கள். வெள்ளிக்கிழமையன்று வெள்ளை நிற ஆடையில் செல்வது பாந்தமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பணியிடங்களுக்கு ஜீன்ஸ் ஆடை ஏற்றதல்ல என்பதே நிபுணர்களின் அறிவுரை.
சுய விமர்சனம்
எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா? இது பிட் ஆகிறதா? என்று கண்ணாடியின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுங்கள். சரியான உள்ளாடைகள் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
அளவான நகைகள்
அதேபோல் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நகைகள், அணியவேண்டும். இருக்கிறது என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டாம். அதிகமாக போட்டால் அழகு கூடாது ஆபத்துதான் அதிகமாகும். ஹேர்பேண்ட், காதணி, காலணி போன்றவை மேட்சாக இருந்தால் கூடுதல் அழகுதான். அதற்கேற்ப பொருட்களை நாம் தேர்வு செய்யவேண்டும்.
மதிப்பு அதிகரிக்கும்
ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்புடையது. ஏனோ தானோ என்று உடுத்துவதை விட நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அழகையும், மதிப்பையும் அதிகரிக்கும்.
விழாக்கால ஆடைகள்
காக்ரா - சோலி திருமணம், ரிசப்சன் போன்ற விசேஷங்களுக்கு ஏற்றது. வெளிர் நிறங்களில் வேலைப்பாடு செய்த காக்ரா சோலியில் நீங்கள் ஜொலிக்குப் போவது நிச்சயம்.
ஸ்ப்லிட் ட்ரெஸ் இந்த நீண்ட ட்ரெஸ்ஸில் உள்ள கட் நடக்கும் போது உங்கள் அழகான கால்களை தெரியவைக்கும். எடை அதிகம் உள்ளவர்களும் அணியலாம்.
ட்ரா ஸ்ட்ரிங் ஷார்ட்ஸ், ஸ்ட்ரெச் டாப்ஸ் போன்றவை உடல் அமைப்பு அழகாகக் கொண்டவர்கள் வாங்கி அணியலாம. தேவையான அளவுக்கு இறுக்கி கட்டக்கூடிய வசதி உள்ள ஷார்ட்ஸ்சும் இந்த வகையில் உண்டு. இது உடலோடு ஒட்டியபடி இருக்கும்.
பட்டன் ஜீன்ஸ், மல்டி கலர் ஷர்ட் போன்றவை காலேஜ், விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணியலாம். மார்டனாகவும் அதே நேரத்தில் அடக்கமாகவும் தோன்ற வைக்கும். உங்களுக்கு இந்தியத் தோற்றம் வேண்டுமானால், பாந்தினி வேலை பார்டரில் செய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து, சாதாரண கலர் சட்டை உடன் அணியலாம். பாந்தினி பெல்ட் மற்றும் ஸ்கார்ஃப் அணியலாம்.
டேனிம் துணியை மேலும் அழகு படுத்துவது இப்போது பேன்சி ஆகி விட்டது. கற்பனை வளம் மிக்கவர்கள் டெனிம் கடையில் லேஸ்வைத்து தைத்துக் கொள்ளலாம். அல்லது டெனிம்மில் தங்க, வெள்ளி நிற நூல் வேலைகள் வைத்து தைத்துக் கொள்ளலாம்.
மினி உடைகள்
கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சிலர் மினி ட்ரஸ் அணிந்து செல்வார்கள். உங்களுக்கு வேண்டுமானால் அது ஏற்றதாக இருக்கலாம். ஆனால் உங்களை பார்ப்பவர்களுக்கு அது உறுத்தலாக இருக்கும். ஸ்போர்ட்ஸ் மினி உடைகள் டென்னிஸ், பாஸ்கெட் பால், வாலி பால் போன்ற விளையாட்டுகளை விளையாடும் போது மட்டுமே அணிய ஏற்றது.



Click it and Unblock the Notifications