For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்களுக்கு அழகு தரும் மேக் அப்: கவர்ச்சியூட்டும் ஐ ஷேடோ

By Mayura Akilan
|

Eye Shadow
முகத்தின் முக்கிய அம்சம் கண்களும் உதடுகளும்தான். உள்ளத்தின் அழகை வெளிப்படுத்துபவை கண்கள். இந்த கண்களின் அழகுக்கு மெருகூட்டுபவை ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி கண்களுக்கு அழகு படுத்துவதே தனிகலை. எந்தெந்த கண்களுக்கு எப்படி மேக் அப்போடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

கவர்ச்சியூட்டும் ஐ ஷேடோ

ஐ ஷேடோவில் லைட், மீடியம், டார்க் என்ற மூன்று வகை உண்டு. ஐ ஷேடோ தரமானதாக இருக்கவேண்டும். காலை நேரங்களில் லைட்டான கலரிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மீடியம் மற்றும் டார்க் கலரிலும் ஷேடோவை தடவலாம். கறுப்பாக இருப்பவர்கள் கண்களுக்கான மேக்அப்பில் அதிக கவனம் செலுத்தலாம் ஐ ஷேடோவில் ப்ளூ, பச்சை கலர்களை தவிர்த்து, பிரவுன், மெரூன், சாக்லெட் ஷேடுகளை யூஸ் பண்ணலாம். பளபளா எஃபெக்ட்டுக்காக உபயோகிக்கிற ஷிம்மர்களை தவிர்க்கவேண்டும்.

ஐ லைனர் மஸ்காரா

கண் மேக் அப் பிற்கு அடுத்த கட்டம் ஐ லைனர். ஐ லைனர் திக்காக போடுவதுதான் இப்போது பேஷன். மூன்றாவது கட்டம் மஸ்காரா இந்த மூன்றுமே கண்களின் அழகை மேலும் அதிகரித்து காட்டும்

பெரிய இமைகளுக்கு அழகு

உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்...கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

சிறிய கண்களை எடுப்பாக்க

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.

உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு... கண்கள் மீது ஐ ஷடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.

English summary

How to make up beautiful eyes? | கவர்ச்சியூட்டும் ஐ ஷேடோ!

The eyes are the window to the soul and are the part of your makeup that will require the most time and patience to do. Knowing how to apply eye makeup is essential to look good and to have a good overall makeup style. When you are applying eye makeup you need various products varying from a few different eyeshadow tones, eyeliner, mascara and concealer.
Story first published: Tuesday, December 20, 2011, 15:16 [IST]
Desktop Bottom Promotion