For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேக்கப் சாதனங்களை பரிமாற வேண்டாம்!

By Mayura Akilan
|

Make Up
மேக்அப் இல்லாமல் இன்றைக்கு யாரும் வெளியில் செல்வதில்லை. விருந்து உள்ளிட்ட விழாக்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ எங்கு சென்றாலும் மேக் அப் என்பது அவசியமானதாகிவிட்டது.

ரெடிமேடாக மேக் அப் சாதனங்களை பைகளில் வைத்திருக்கும் மங்கையர்கள் ஒருவருக்கொருவர் மேக் அப் சாதனங்களை பரிமாறிக்கொள்வதில் ஆபத்து அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் தோலியல் நிபுணர்கள்.

காம்பாக்ட் ஸ்பான்ச், ஐ லைனர், மஸ்கரா ப்ரஸ், போன்றவற்றை ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் பயன்படுத்துவது முகத்தில் உள்ள தோலை பாதிக்கும் என்று நிமிஷா திவாரி என்பவர் எழுதிய நூலில் தெரிவித்துள்ளார்

நுண்கிருமிகள் பாதிப்பு

மும்பை போன்ற பணிச்சூழல் நிறைந்த வாழ்க்கையில் மேக்அப் என்பவது அவசியமானதாக உள்ளது. அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் மேக் அப் பொருட்களை லிப்ஸ்டிக், கண்மை பென்சில், உள்ளிட்டவற்றை ஒருவருக்கொருவர் உபயோகித்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அது தவறு என்கின்றனர். இதன் மூலம் கண்ணுக்குப்புலப்படாத நுண்கிருமிகள் பரவி தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நிமிஷாதிவாரி.

அலர்ஜியை தவிர்ப்போம்

மேக் அப் ப்ரஸ் மூலம் தோலை பாதிக்கும் பாக்டீரியா ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் என்கிறார் பிரபல தோலியல் நிபுணர் ரஷ்மி ஷெட்டி. ஏனெனில் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மேக் அப் சாதனங்கள் அனைத்திலும் எளிதில் கிருமிகள் புகுந்த நன்கு வளரவாய்ப்புதாக ரஷ்மி தெரிவிக்கின்றார்.

மிகவும் இலேசான தோலை உடைய முகத்திற்கு முகப்பூச்சுக்களை பயன்படுத்தும் போது இந்த பாக்டீரியாக்கள் முகத்தை பாதித்து பருக்கள் மற்றும் அலர்ஜி ஏற்பட காரணமாகின்றன. எனவே ஒருவருடைய பொருளை மற்றொருவர் உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். கூடுமானவரை லிப்ஸ்டிக், ஐ லைனர் போன்றவைகளை தரமானவையாக வாங்கி உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் தோலியல் நிபுணர்கள். அதற்கென உள்ள பிரத்யேக கடைகளில் மட்டுமே அவற்றை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

காலாவதி சாதனங்கள்

மேக்அப் சாதனங்களை வாங்கும் போது உபயோகிக்கும் தேதி பார்த்து வாங்குவது அவசியம். ஏனெனில் காலாவதியான மேக்அப் சாதனங்கள் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றார் மருத்துவர் விதுலா படீல். காலாவதியான கண்மையினை உபயோகிக்கும் போது கண்ணுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர். அதுபோல மேக் அப் சாதனங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் உதடு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார் விதுலா.

தினந்தோறும் மேக் அப் சாதனங்களை உபயோகிப்பவர்கள் அதனை எளிதில் காற்றுப்புகாத நன்றாக மூடப்பட்ட பாக்ஸ்களில் மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் அதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் புகுவதை தடுப்பதோடு முகத்திற்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்கின்றனர் தோலியல் நிபுணர்கள். எனவே முகத்திற்கு பயன்படுத்தும் மேக் சாதனங்களை ஒருவர் கைப்பட உபயோகித்து பாதுகாப்பாக வைப்பதில்தான் முகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary

Don't share your cosmetics with others! | மேக்கப் சாதனங்களை பரிமாற வேண்டாம்!

Your skin could be at maximum risk by using shared compact sponges, kohl liner and mascara brushes, writes Nimisha Tiwari. Skin experts caution that no make-up ingredients, including lipsticks, mascara brushes, compact sponges and kajal pencils should be shared, as it carries across germs and causes skin infection .
Story first published: Sunday, September 4, 2011, 13:01 [IST]
Desktop Bottom Promotion