Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பெற்றோர்களே! உங்க குழந்தைங்க பேசும் போது தவறான வார்த்தைகள யூஸ் பண்ணுறாங்களா? அப்ப இத பண்ணுங்க!
குழந்தைகளின் பேச்சு கிளிப்பேச்சு என்று சொல்வார்கள். குழந்தைகளின் மழலை மொழி என்பது இனிமையான ஒன்றாகும். வளரும் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய மொழித்திறனை வளர்க்க ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் கூறும் சொற்கள், அவர்களைச் சுற்றி கேட்கும் சொற்கள் இவற்றையெல்லாம் நன்கு கவனித்து ஒவ்வொன்றாக பேச ஆரம்பிப்பார்கள்.
இருப்பினும் பல குழந்தைகள் தாங்கள் பேசும் சொற்களை தவறாக உச்சரிப்பது வழக்கம் தான். குழந்தைகள் தாங்கள் சொல்லும் சொற்களை சரியான முறையில் சொல்வதில் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு வயதிலும் சில ஒலிகள் மற்றும் வார்த்தைகளில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

ஒரு 8 வயதிற்குள் பெரும்பாலான குழந்தைகள் அனைத்து வார்த்தை ஒலிகளிலும் தேர்ச்சி பெற கற்றுக் கொள்கின்றனர். ஆனால் சில குழந்தைகள் பேச்சு ஒலி குறைபாடுகளை சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு 8 வயதுக்கு மேல் ஆகியும் சில சொற்களை சொல்வதில் சிக்கல்களை சந்திக்கின்றனர். இதனால் குழந்தை என்ன சொல்ல முயல்கிறது என்பது கடினமாக அமைகிறது.
பேச்சு ஒலி உச்சரிப்பு பிரச்சினை
சில குழந்தைகளுக்கு 'ஷ்' என்ற வார்த்தையை உச்சரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த கோளாறு என்பது ஒலி தவறுகளில் ஏற்படும் தவறாகும்.
குழந்தைகளின் பேச்சு ஒலி கோளாறுகளுக்கு என்ன காரணம்?
குழந்தைகளின் பேச்சு ஒலிப் பிழைகளுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் காரணமாக அமையலாம்.
- குழந்தைக்கு மூளையில் ஏற்படும் காயம்
- சிந்தனை அல்லது வளர்ச்சி குறைபாடு
- செவித்திறன் குறைபாடு, காது தொற்று போன்ற பிரச்சினைகள்
- குழந்தைகளின் பேச்சை பாதிக்கும் கோளாறுகள், பிளவு அண்ணம் அல்லது பிளவு உதடு
- தாடை, நாக்கு மற்றும் உதடுகளை நகர்த்துவதில் சிக்கல்
- மற்ற குழந்தைகள் போல் வயதுக்கு ஏற்ப பேச முடியாமல் போதல்
- மற்றவர்களுக்கு புரியும் படி தெளிவாக பேசுவதில்லை
- கரகரப்பான நாசி குரல் பேச்சு
- மெல்லுதல், மூக்கை ஊதுதல் அல்லது முகத்தில் தசைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் சிரமப்படுதல்
- பேச்சுக்கு பயன்படும் நரம்புகளில் ஏற்படும் கோளாறுகள் போன்ற விஷயங்கள் காரணமாக அமைகிறது.
பேச்சு ஒலி கோளாறை எப்படி கண்டறிவது?
உங்கள் குழந்தைக்கு பேச்சு ஒலி கோளாறு இருந்தால் முதலில் குழந்தையின் செவித்திறனை கண்டறிய வேண்டும். ஏனெனில் குழந்தைகள் வார்த்தைகளை தவறாக கேட்கும் போது இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைக்கு தேவைப்பட்டால் பேச்சு மொழி நோயியல் நிபுணரிடம் இது குறித்து பேசலாம்.
உங்கள் குழந்தைகளின் பேச்சு மற்றும் உச்சரிப்பு இவற்றை அவர் சரிபார்த்து அதற்கான சிகிச்சை முறைகளை அவர் உங்களுக்கு வழங்குவார்.
பேச்சு ஒலிக் கோளாறுகளுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிப்பது அவசியம்.
பேச்சு ஒலிக் கோளாறுக்கான சிகிச்சை முறைகள் :
- குழந்தைகள் அவ்வப்போது தவறாக பேசும் ஒலிகளை கவனித்து சரி செய்ய வேண்டும்.
- சில வார்த்தைகளை உருவாக்கவும், சில ஒலிகளை உருவாக்கவும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
- குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை சுகாதார வழங்குநரிடம் அல்லது தேவைப்பட்டால் ஆர்த்தடான்டிஸ்ட்டிடம் அவர்களை கூட்டிச் செல்லலாம்.
குழந்தை பேச்சு ஒலி பிரச்சினைகளை எப்படி சரி செய்யலாம்
நிதானமாக உறுதியளியுங்கள்
குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கும் போது வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் அவர்கள் தவறுதலாக வார்த்தைகளை பயன்படுத்த நேரிடலாம். எனவே குழந்தைகள் பதிலளிப்பதற்கு நிறைய நேரம் கொடுங்கள். நன்றாக யோசித்து பதிலளிக்கலாம்.
நிகரான வார்த்தையை கண்டறியுங்கள்
நீங்கள் நினைக்கும் வார்த்தைக்கு நிகரான மற்றொரு வார்த்தையை எடுத்துக் கூறுங்கள். அந்த வார்த்தை உங்கள் குழந்தைக்கு எளிதாக இருந்தால் அதை பயன்படுத்தலாம்.
வார்த்தைக்கான விளக்கங்களை எடுத்துக் கூறுங்கள்
குழந்தைகள் கூறும் வார்த்தைகளுக்கு விளக்கங்களை எடுத்துக் கூறி புரிய வையுங்கள். இதனால் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்வதோடு அந்த வார்த்தைகளை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
பேச்சு ஒலி கோளாறு பிரச்சனை யாருக்கு ஏற்படலாம்?
- மன இறுக்கம் போன்ற வளர்ச்சிக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
- டவுண் சின்ட்ரோம் போன்ற மரபணு கோளாறு குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
- காது கேளாமை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
- பெருமூளை வாதம் போன்ற நரம்பு மண்டல கோளாறு குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
- வீட்டில் பேச்சு சொல்லிக் கொடுக்க ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications
