For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் உங்கள் முகங்களை எவ்வாறு பாதுகாப்பது?

மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்று. மழை வருவது நல்ல விஷயமாக இருந்தாலும் மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது சாதாரண விஷயம் இல்லை. மழைக்காலத்தில் சில தொற்று நோய்கள்

|

மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்று. மழை வருவது நல்ல விசயமாக இருந்தாலும் மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது சாதாரண விசயம் இல்லை. மழைக்காலத்தில் சில தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் முகப்பரு, விளையாட்டு வீரர்களின் கால்களில் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்கள் சருமத்தை பராமரிக்க சில எளிய வழிகள் உள்ளன.

Tips to Skin Care in Rainy Season

மழைக்காலம் உங்கள் முகத்தை ஏற்கனவே இருப்பதை விட அதிகமாக எண்ணெய் வடிய செய்கிறது. இந்த எண்ணெய்களை அகற்ற மற்றும் தொற்றுகளில் இருந்து விடுபட சில எளிய முறைகளை கடைபிடிப்பதன் மூலம் தவிர்க்கலாம். நீங்கள் பணத்தை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளி உண்மையில் உங்கள் சருமத்தை பளபளக்கச் செய்யும். தாக்களில் உள்ள சாறை உங்கள் முகத்தில் தடவி அரைமணி நேரம் அல்லது அது காய்ந்த பிறகு கழுவும் போது உங்கள் முகம் புத்துணர்ச்சியாகவும், நீரேற்றத்துடன் மாறும். மேலும் உங்கள் சமையலறையில் உள்ள பழங்களை கொண்டு உங்கள் சருமத்தை பளபளப்பு ஆக்கலாம். இதற்கு பப்பாளி, ஆப்பிள், மற்றும் அன்னாசிப்பழம் எடுத்துக் கொண்டு நன்றாக மூன்றையும் கலந்து உங்கள் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை காய விட்டு கழுவுங்கள்.

தண்ணீர் அருந்துதல்

தண்ணீர் அருந்துதல்

மழைக்காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நீரிழப்பு. உங்களது சருமத்திற்கு தேவையான நீர் இல்லையெனில் இது தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வரும். உங்கள் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து இருக்க நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதிகமான தண்ணீர் குடிப்பது சிறுநீர் கழிக்க வழிவகுக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். இதனால் எந்த பிரச்சனையும் வராது.

இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை அகற்ற உதவும். உங்களுக்கு தாகம் ஏற்படும் வரை குடிநீருக்காக காத்து இருக்க வேண்டாம். உங்களுக்கு தாகம் இல்லை என்றாலும் நீங்கள் குடிநீர் பருகலாம். ஒரு நாளைக்கு நீங்கள் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் நீர் அருந்த வேண்டும். நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ அதே அளவுக்கு உங்கள் சருமத்திற்கு நல்லது. நீங்கள் அருந்தும் தண்ணீர் உங்கள் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உங்களை இளமையாக வைத்து இருக்க உதவுகிறது.

ஜொஜோபா எண்ணெய்

ஜொஜோபா எண்ணெய்

இந்த எண்ணெய் மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஜொஜோபா எண்ணெய், தேன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் மாஸ்க் போன்று போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து வறண்ட சருமத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் தேன் கலந்து பேஷ் பேக் போட்டுக்கொள்ளலாம். மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எண்ணையுடன் சேர்த்து ரோஸ் வாட்டர் கலவையை பயன்படுத்தலாம்.

மேக்கப் தவிர்த்தல்

மேக்கப் தவிர்த்தல்

மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை சுவாசிக்க விடுங்கள். மிக கடினமான பௌண்டேசன்களை உபயோகிக்க வேண்டாம். நீங்கள் சில மாய்ஸ்சரைஸர்களை பயன்படுத்த விரும்பினால் அது எண்ணெய் அற்றதா இல்லையா என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள். மேலும் மழைக்காலங்களில் அதிக மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் சருமம் சுவாசிப்பதை நிறுத்தி சருமத்தின் துளைகளை பெரிதாக்குகிறது. அத்துடன் முகப்பருக்களுக்கும் வழிவகுக்கிறது.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு

நீங்கள் சாப்பிடும் உணவு தான் உங்கள் சருமத்தின் பிரதிபலிப்பு. எனவே நீங்கள் முறையான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண வேண்டும். நீங்கள் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உங்கள் சருமத்தை அதிக ஆரோக்கியத்துடன் வைக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவை உண்ணும் பழக்கத்தை கடைபிடித்து உங்கள் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் எல்லா நேரத்திலும் கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகும். அதனால் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உங்கள் சருமத்தில் உள்ள அதிகபடியான நீரை உறிஞ்சும். இது உங்கள் சருமத்தை விரைவில் மந்தமாகவும் மற்றும் சுருக்கமாகவும் மாற்றும். எனவே புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

பூஞ்சை தொற்றுநோய்கள்

பூஞ்சை தொற்றுநோய்கள்

மழைக்காலம் என்பது பூஞ்சை தொற்றுகளின் காலம். எனவே நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் தலை முடியோ அல்லது உடலையோ ஒரு போதும் ஈரத்துடன் வைத்து விடாதீர்கள். இது பூஞ்சை தொற்றுகளுக்கு வழி வகுக்கும். எப்போதும் உடலை உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

உங்கள் முகத்தை தினமும் சுத்தம் செய்யுங்கள். தினமும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அல்லது சிறிது பஞ்சை கொண்டு துடைத்து விடுங்கள். துடைத்த பிறகு டோனர் பயன்படுத்துவது நல்லது. உங்கள் சருமத்தில் உள்ள பி.எச் அளவை சீராக வைக்க ஒரு நல்ல டோனரை பயன்படுத்துங்கள். மேலும் இந்த டோனர் முகப்பரு

வராமல் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to Skin Care in Rainy Season

The skin care in rainy season can be a particularly difficult. Rain drops does bring a sense of relief for you, but along with that the monsoons also bring with them a lot many infections. These infections affect your skin adversely and lead to problems like acne, athlete’s foot, ringworm, etc.
Story first published: Tuesday, July 30, 2019, 11:38 [IST]
Desktop Bottom Promotion