Latest Updates
-
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
காளை மாட்டாடோ விந்துவை தலைல தேய்ச்சா எப்பேர்ப்பட்ட வழுக்கையிலும் முடி வளருமாம்...
வழுக்கை தலையில் முடி வளரச் செய்வதற்காக அருவருக்கத்தக்க சில வழிமுறைகளை சில இடங்களில் மக்கள் பின்பற்றுகின்றனர். அதில் காளை மாட்டின் விந்துவும் முக்கியமான ஒன்று. அதுபற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு தான் இ
இன்று தலை முடி வழுக்கை என்பது ஆண்களைப் பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனைப் போக்க பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் பண்டைய கால எகிப்தியர்கள் மற்றும் பழங்கால மக்கள் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும்போது அதிர்ச்சியில் உறைந்து விடுவோம்.

நல்ல வேளையாக இந்த பழக்கங்கள் இப்போது நடைமுறையில் இல்லை. வழுக்கையைப் போக்க பின்பற்றப்பட்ட சில வித்தியாசமான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காளை மாட்டின் விந்து
முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை, காளை மாட்டின் விந்துக்கள் புரதத்தில் நம்பமுடியாத அளவிற்கு வளமானதாக நம்பப்படுகிறது, இது முடி வளர்ச்சியை ஊட்டி வளர்க்க உதவுகிறது என்று முடி சிகிச்சைக்கான நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதும் யு.எஸ் மற்றும் யு.கேவில் முடி திருத்தகங்களில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

புறாவின் எச்சம்
தலை முடி வழுக்கைக்கான சிகிச்சையில் புறாவின் எச்சம் பயன்படுத்தப்பட்டதை உங்களால் நம்ப முடிகிறதா? நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படுகின்ற ஹிப்போகிராட்ஸ் புறாவின் எச்சம், அபின், பீட்ரூட், குதிரைமுள்ளங்கி, மற்றும் மசாலாக்களின் கலவை ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்ட ஒரு மருந்தை வழுக்கைக்கான சிகிச்சையாக பரிந்துரைத்திருக்கின்றனர்.

பசுமாட்டு கோமியம்
பசுமாட்டின் சிறுநீர் கோமியம் என்று அழைக்கப்பட்டு இந்தியாவில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுநீர் தலை முடிக்கான சிகிச்சையில் மிகவும் பயனளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த வகை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறுநீர் கன்னி மாட்டின் சிறுநீராக இருக்க வேண்டும் என்பது நியதியாகும். இந்த சிறுநீரை எடுத்து, சூரிய உதயத்திற்கு முன் அருந்த வேண்டும். இந்த செயலை எளிதாக்க, ஒரு இந்திய நிறுவனம் ஒரு குளிர்பானத்தை அறிமுகம் செய்தது . இந்த பானத்தில் 5% பசுவின் சிறுநீர் சேர்க்கப்பட்டுள்ளது.

கொதிக்கும் சில்லி சாஸ்
கொரிய ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு 2003 கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மீது வேகமான விகிதத்தில் முடி வளர மிளகாயில் இருக்கும் காப்சைசின் என்னும் கூறு எப்படி உதவியது என்பதை விஞ்ஞானிகள் விவரித்தனர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த பரிசோதனை மனிதர்களுக்கு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேர்மறை பலனைக் கொடுக்கவில்லை.

மிருகங்களின் கொழுப்பை
வழுக்கையைப் போக்க பண்டைய கால எகிப்தியர்கள் ஒரு விசித்திர முறையைக் கையாண்டனர். சிங்கம், காண்டாமிருகம், முதலை, பூனை, பாம்பு, மலையாடு, ஆகிய மிருகங்களின் கொழுப்பை ஒன்றாகக் கலந்து ஒரு மருந்து தயாரித்து அதனை தடவுவதால் வழுக்கை குணமாகிறது என்று ஒரு வித்தியாசமான சிகிச்ச்சை முறையை கடைப்பிடித்து வந்தனர்.

குதிரை பல், சுண்டெலி
இந்த மிக விசித்திர முறையை பின்பற்றி வழுக்கையை போக்க நினைத்தது நம் அனைவருக்கும் தெரிந்த கிளியோபட்ரா . தன் காதலர் ஜூலியஸ் சீசரின் வழுக்கையைப் போக்க அவர் சுண்டெலியை அரைத்து அதனுடன் குதிரை பற்களை சேர்த்து ஒரு மருந்து தயாரித்தார். ஆனால் அந்த மருந்து தகுந்த பலனை அளிக்கவில்லை. அதனால் ஜூலியஸ் தனது வழுக்கையை மறைக்க இலைகளால் செய்த மாலையை தனது தலையில் கிரீடம் போல் வைத்துக் கொள்ளத் தொடங்கினார்..



Click it and Unblock the Notifications