For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...

|

நாம் நமது பற்களையும் ஈறுகளையும் வலுவாக வைத்திருப்பது அவசியம். இப்பொழுது வரும் டூத் பேஸ்ட்கள் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளது. இதற்கு பெரு எளிய மாற்றாக தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் இருக்கிறது. இதை வேறு விதமான பல நமைகள் உள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூத் பேஸ்ட்டின் விளைவுகள்

டூத் பேஸ்ட்டின் விளைவுகள்

 • ட்ரைக்ளோசன் உடற்கூறியல்(எண்டோகிரைன்) செயல்பாட்டை சீர்குலைப்பதோடு உடலின் ஆண்டிபயாடிக் எதிர்ப்புகளையும் குறைக்கும்.
 • சோடியம் லாரில் சல்பேட் (SLS) ஸ்கின் எரிச்சல் மற்றும் புண்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. மேலும் இதில் புற்று நோய்களின் கலவைகள் உள்ளன.
 • ஃப்ளுரைடு உங்கள் திசுக்களில் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் தீவிர நரம்பியல் மற்றும் சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
 • நுண்ணுயிர்கள் (மைக்ரோபீட்ஸ்)ஈறுகளில் குவிந்து பாக்டீரியா மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறலாம்.
 • செயற்கை இனிப்புகளில் உள்ள சில ரசாயனங்கள் உடலில் மெத்தனால் உருவாக்க உதவுகிறது. மேலும் இது இரத்த நாளங்கள் மூலம் பயணம் செய்து உடலுக்கு நிறைய சுகாதார பிரச்சன்னைகளை உருவாக்குகிறது. இதனால் நரம்பு தளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளில் தொந்தரவு ஏற்படலாம்.
 • ப்ரோபிலீன் கிளைக்கால் ஈறுகளுக்கு ஒரு சுர்ப்ஆக்டன்ட் ஆக விளங்குகிறது. இது நம் உடல் உறுப்பிற்கு நச்சுத்தன்மையாக இருக்கலாம். குறிப்பாக கண், ஸ்கின், மற்றும் நுரையீரலுக்கு.
 • ப்ரோபிலீன் கிளைக்கால் போன்று டியதனோலமைன்னும் ஒரு சுர்ப்ஆக்டன்ட் ஆக விளங்குகிறது.
 • இது உங்கள் ஹார்மோன் செயல்பாடுகளை சீர்குலைப்பதோடு உங்கள் வயிறு, உணவுக்குழாய், கல்லீரல், மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றுடன் தொடர்புடையது.

  இவை அனைத்தும் மிகவும் ஆபத்தானவை. மேலும் இது உங்கள் உயிருக்கு ஆபத்தான நோய்கள் கொடுக்கும் ஆற்றல் கொண்டது. அவற்றை தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் இதனை டூத் பேஸ்ட்டில் பயன்படுத்துகின்றனர்.

  இது போன்ற செயற்கை டூத் பேஸ்ட்டை தவிர்த்து வீட்டில் தயாரிக்கும் இயற்கை பேஸ்ட்டை உபயோகிப்பது நல்லது.

  தேங்காய் எண்ணெய்

  தேங்காய் எண்ணெய்

  தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்டை விட சிறந்ததா? என்று கேட்டால் நிச்சயம் ஆமாம், தேங்காய் எண்ணெய் நீங்கள் பயன்படுத்தும் வணிக பேஸ்ட்டை விட சிறந்தது தான்.

  டூத் பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் சிறந்தது என்பதற்கான சில காரணங்கள் இதோ உங்களுக்காக:

  • தேங்காய் எண்ணெய் இயற்கையானது என்பதால் அதில் எந்த பக்க விளைவும் இருக்காது. மற்ற டூத் பேஸ்ட்டில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஃப்ளுரைடு மற்றும் ட்ரைக்ளோசன் ரசாயனங்கள் உள்ளன.
  • டிரிக்ளோசன் நமது எண்டோகிரைன் செயல்பாட்டை சீர்குலைக்க வாய்ப்பிருக்கிறது என்று அறியப்படுகிறது.
  • இது மார்பக, மற்றும் கருப்பை புற்றுநோயிற்கு வழிவகுக்குகிறது .

   மேலும் இது பெண்களுக்கு இளம் பருவத்திலே பருவநிலையை அடைய வழிவகுக்குகிறது.

   • ஃப்ளுரைடு நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சு கழிவுப் பொருள். இவைதான் டூத் பேஸ்ட்டில் உபயோகிக்கக்கூடிய இரெண்டு பொதுவான பொருள்கள்.
   • இதில் எந்த விதமான போம்மிங் ஏஜென்ட் இல்லாததால் இது நமது நாவின் சுவையை தடுக்காது.
   • வணிக டூத் பேஸ்ட்டில் உள்ள SLS கெமிக்கல் நம் நாக்கின் பாஸ்போலிப்பிடுகளை உடைத்து நாக்கின் சுவையை சுவையுடன் குறுக்கிடுகிறது.

    இது உங்களுக்கு கசப்பான சுவையை தருவதோடு நீங்கள் பல் தேய்த்தும் உங்கள் வாயில் ஒரு கெட்ட சுவையை உண்டாக்குகிறது.

    • தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் பற்களின் மீது தகடை நீக்கி வெள்ளை நிறமாக மாற்றுகிறது. இதை வழக்கமாக பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கலாம்.
    • தேங்காய் எண்ணெய் பல் சிதைவை நிறுத்தக்கூடியது. தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர கொழுப்பு அமிலம் பாக்டீரியாவை சமாளிக்க உதவுகிறது. இதுவே தகடு/பிளேக் உருவாவதற்கு காரணமாகிறது. மேலும் இது பல் சிதைவை ஏற்படுத்துகிறது.
    • பற்களில் குழிகள்/ஜின்ஜிவைட்டிஸ் ஏற்பட காரணம் தகடு/பிளேக் உருவாக்கமே
    • பற்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடம் அப்படியே விடவும். இவ்வாறு செய்ய பற்களில் ஏற்படும் குழிகளையும் தகடையும் போக்கும்.
    • வீட்டிலேயே எளிதாக தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம். இது மலிவானது மட்டுமின்றி இதற்கு பயன்படுத்தும் அனைத்து பொருளும் எளிதில் கிடைக்கக் கூடியவை. இதை நீங்கள் செய்து வைத்து தேவைப்படும் பொழுது பயன்படுத்தலாம். கெட்டு போய்விடுமோ என்ற பயம் தேவையில்லை.
    • இது நாய்களுக்கும் மற்ற செல்லப்பிராணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் உபயோகிக்கும் அதே சாதாரண பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது அவைகளுக்கு தீங்கை விளைவிக்கும். தேங்காய் எண்ணெய் மனிதர்களாகிய நம்மளை போல செல்லப்பிராணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். செல்லப்பிராணிகளுக்கு தேங்காய் எண்ணெயை சாதாரணமாக பயன்படுத்தினால் மட்டும் போதும்.
    • தேங்காய் எண்ணெய் மௌத்வாஷ் போல பயனுள்ளதாக இருக்கும். இது கெட்ட மூச்சு காற்று மற்றும் நுண்ணுயிரிகளை தடுக்கும். சில நிமிடங்களுக்கு வாயில் உள்ள எண்ணெயை கொண்டு கொப்புளிக்க, பாக்டீரியா மற்றும் பற்களில் ஏற்படும் தகடை அகற்றுகிறது. மேலும் இது உங்கள் பற்களை வெண்மை படுத்தும்.
    • தேங்காய் எண்ணெய் உங்கள் நாக்கில் கொழுப்புச்சத்துக்களின் இயற்கை சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சில டூத் பேஸ்ட் இந்த சமநிலையைத் தொந்தரவு செய்து வாயில் கசப்பு சுவையை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெய் பற்பசை அந்த பாக்டீரியாவை கவனித்து, நாக்கின் கொழுப்பு அமிலங்களின் இயற்கை சமநிலையை பராமரிக்கிறது.

     தேங்காய் எண்ணெய் பயன்படுத்த சிறந்த வழி, பேஸ்ட்டாக பயன்படுத்துவது அல்லது 'ஆயில் புல்லிங்' முறை. இந்த இரண்டு முறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

     முதலில் தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் பற்றி பார்ப்போம்.

     தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் செய்முறை:

     தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் செய்முறை:

     1. பேக்கிங் சோடா இல்லாத தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்

     தேங்காய் எண்ணெயில் பேக்கிங் சோடா சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் நமக்கு நல்ல பயனை தருகிறது.

     பேக்கிங் சோடா பற்களில் ஏற்படும் கரைகளையும் பற்களின் மேல் படியும் தகடையும் நீக்க க் கூடியது.

     அனால் இதை தினமும் பயன்படுத்தினால் பற்கள் மிகவும் கடினமானதாக மாறிவிடும்.

     நீங்கள் தேங்காய் எண்ணெயுடன், சய்லிடோல் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெயையும் சேர்க்கலாம்.

     தேவையானவை:

     1/2 கப் தேங்காய் எண்ணெய்

     10 - 15 ட்ரோப் அத்தியாவசிய எண்ணெய்

     2-4 ஸ்பூன் சய்லிடோல்

     செய்முறை:

     • தூய்மையான பாட்டலில் வைக்கவும்
     • உபயோகிக்கும் போது பிரஷை நன்றாக எண்ணெயில் நனைத்து பயன்படுத்தவும்
     • ஈரமான பிரஷை பயன்படுத்த வேண்டாம்
     • வீட்டில் தயாரித்த டூத் பேஸ்ட்

      வீட்டில் தயாரித்த டூத் பேஸ்ட்

      தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா, சீ சால்ட்/கடல் உப்பு பற்களை வெண்மையாக்க பிற பொருட்களை விட பேக்கிங் சோடா நன்கு பயன்தரக்கூடியது.

      பேக்கிங் சோடாவுடன் கடல் உப்பு சேர்த்து உபயோகிக்கும் போது அது அதிக பலனை கொடுக்கும். இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை பற்களின் ஈறுகளை வலுவாக்க உதவுகிறது.

      கடல் உப்பு வாயில் உள்ள அசிடை நிலைப்படுத்தி வாயில் கசப்புத்தன்மையோ கெட்ட வாடையோ இல்லாமல் தடுக்கிறது.

      பயன்படுத்தும் முறை

      • 1/2 கப் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் கடல் உப்பு சேர்க்கவும்
      • 3 டீஸ்பூன் சய்லிடோல் அல்லது 1 டீஸ்பூன் ஸ்டிவியா சேர்க்கவும்
      • 1/2 கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 10 ட்ரோப் அத்தியாவசிய எண்ணெய்

      3. காஸ்ட்டில் சோப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்

      பயன்படுத்தும் முறை:

      • 1/2 கப் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் காஸ்ட்டில் சோப்பு சேர்த்து கலக்கவும்.
      • 3 டீஸ்பூன் சய்லிடோல் அல்லது 1 டீஸ்பூன் ஸ்டிவியா சேர்க்கவும்
      தேங்காய் எண்ணெய், கடல் உப்பு, அத்தியாவசிய எண்ணெய், வடிகட்டின தண்ணீர், பென்டோநைட் கிலே

      தேங்காய் எண்ணெய், கடல் உப்பு, அத்தியாவசிய எண்ணெய், வடிகட்டின தண்ணீர், பென்டோநைட் கிலே

      பயன்படுத்தும் முறை

      • 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 4 டேபிள்ஸ்பூன் பென்டோநைட் கிலே சேர்க்கவும்
      • 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் வடிகட்டின தண்ணீர்
      • 1/2 டீஸ்பூன் சீ சால்ட்/கடல் உப்பு மற்றும் 10-15 ட்ராப்ஸ் பெப்பர்மின்ட் எண்ணெய்
      • பென்டோநைட் கிலே ஒரு மென்மையான சிராய்ப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது அத்தியாவசிய மினெரல்ஸ் கொண்டது மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

       பேக்கிங் சோடா, பென்டோநைட் கிலே, தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்

       பேக்கிங் சோடா, பென்டோநைட் கிலே, தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்

       • 1/2 கப் பேக்கிங் சோடாவுடன் 1 டேபிள்ஸ்பூன் பென்டோநைட் கிலே சேர்க்கவும்.
       • 3 டீஸ்பூன் சய்லிடோல் அல்லது 1 டீஸ்பூன் ஸ்டிவியா சேர்க்கவும்
       • 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் 10-15 ட்ராப்ஸ் அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கவும்
       • பல் துலக்குதல்:

        பல் துலக்குதல்:

        பல் துலக்க தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

        அதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை பற்களின் மேல் இருக்கும் எனாமலை அரிக்காமல் இருக்க உதவும். மேலும் இது பல் சிதைவை தடுக்கும்

        தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் பாட்/கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

        இந்த கொழுப்பில் 50% லௌரிக் ஆசிட் உள்ளது. தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெயை நமது உடல் மோனோலாரினாக உடைக்கப்படுகிறது.

        லௌரிக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்றவற்றை கோலா பயன்படுவதாக அறியப்படுகிறது.

        ஆய்வின் படி, லாரிக் ஆசிட் தேங்காய் எண்ணெய் தொடர்புடைய சுகாதார நலன்களுக்கு முக்கிய பங்களிக்கிறது.

        லாரிக் ஆசிட் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் மற்றும் லக்டோபஸில்லஸ் பாக்டீரியாவைக் கொல்ல பயன்படுவதாக அறியப்படுகிறது. ஏனெனில் இது பல் சிதைவை ஏற்படுத்துகிறது.

        இது ஜிஞ்சிவிட்டீஸ் என அறியப்படும் கம் டிசீஸ் மற்றும் கெட்ட மூச்சு காற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்கொள்ள உதவுகிறது.

        பல் துலக்க முடியுமா ?

        பல் துலக்க முடியுமா ?

        கண்டிப்பாக நாம் தேங்காய் எண்ணெய் கொண்டு பல் துலக்குவது நமக்கு நன்மையை தரும்.

        ஏனெனில் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்க படுவதில்லை. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் உலர்ந்த தேங்காய் அல்லது கொப்பரை தேங்காய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

        சுத்திகரிக்கப்படும் போது அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சிலவற்றை இழக்கிறது.

        தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட போது சில குறைக்கப்படாத கொழுப்புகள் ஹைட்ரஜனேற்றமடைகின்றன. மேலும், இதய நோய்களுக்கு தீங்கு தருகிற டிரான்ஸ் கொழுப்புக்களை உருவாக்குகின்றன.

        நன்மைகள்

        நன்மைகள்

        தேங்காய் எண்ணெய் பயன்படுவதால் மூலம் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அவற்றுள் சில கீழே உங்களுக்காக,

        1. ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் உங்கள் ஸ்கின்னை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

        2. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து புதிய செல்கள் விரைவாக மீளுருவாக்க உதவுகிறது.

        3. இதில் ஆன்டி-வைரஸ், ஆன்டி-பாக்டீரியல், மற்றும் ஆன்டி-ஃப்ங்கள் உள்ளது. இது பூஞ்சை, பாக்டீரியா மற்றும் நோய்களை உண்டாக்கும் பிற வைரஸ்ஸை குறைக்கக்கூடம்.

        4. ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் செல் சேதமடைவதிலிருந்து உங்கள் உடலை காக்கிறது.

        தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்டை பயன்படுத்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

        சில பக்க விளைவுகள்

        சில பக்க விளைவுகள்

        • ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்
        • ஆயில் புல்லிங் முறையை நீங்கள் பயன்படுத்தினால், எண்ணெய் விழுங்குவதை தவிர்க்கவும். இதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, டெட் ஸ்கின், தகடு மற்றும் பிற கழிவுப்பொருட்கள் உள்ளன.
        • தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்களுக்கு அல்ர்ஜி ஏற்படாது என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
        • மிதமான அளவில் பயன்படுத்தவும்.
        • தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்டை உட்கொள்வதை தவிர்க்கவும்.
        • சாச்சுரேட்டட் கொழுப்பு, எல்.டி.எல் கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் ஏற்பட ஒரு காரணமாக அமையும்.

         அது பாதிப்புக்குரியது அல்ல என்றாலும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

         தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் - வெண்மை தர

         தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் - வெண்மை தர

         தேங்காய் எண்ணெய் பற்களை ப்ளீச் செய்வதால் வெண்மை தராது. இது லாரிக் ஆசிடை பயன்படுத்துகிறது.

         இந்த கொழுப்பு அமிலம் தகடு மற்றும் பாக்டீரியாவை அகற்றுவதில் உதவுகிறது. இவை உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாவதற்கு முக்கிய பங்களிக்கிறது.

         தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்புளித்தல் என்பது உங்கள் பற்களை வெளுக்க ஒரு பண்டைய முறையாக கருதப்படுகிறது. இது ஒரு ஆயுர்வேத நுட்பமாகவும், நச்சுப்பொருளாகவும் அறியப்படுகிறது.

         ஆயில் புல்லிங் வாய்வழி குழிகளை அழிக்கும். சில பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவைதான் மெல்லிய மஞ்சள் நிற அடுக்குகளாகிய தகடு என்பதை ஏற்படுத்துகின்றன.

         ஒரு சிறிய தகடு சாதாரணமானது ஆனால் மிகவும் அதிகமாக இருக்கும் போது, ​​இது ஈறுகளுக்கு அழுற்சியை ஏற்படுத்தும்.

         மேலும் தேங்காய் எண்ணெயை பேக்கிங் சோடாவுடன் கலந்து பயன்படுத்தும் பொழுது உங்கள் பற்கள் வெண்மையாக்க உதவுகிறது.

         தேங்காய் எண்ணெய் மௌத்வாஷ்

         தேங்காய் எண்ணெய் மௌத்வாஷ்

         15-20 நிமிடங்களுக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்புளித்தல் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

         இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் இருந்து பிளேக் மற்றும் நச்சுகள் நீக்க கூடியது.

         ஆயில் புல்லிங் நன்மைகள்

         • கெட்ட சுவாசத்தை போக்கும்
         • பிளேக் மற்றும் ஜிஞ்சிவிட்டீஸ்ஸை போக்கும்
         • உங்கள் பற்கள் வெண்மையாகும்
         • ஈறுகளில் ஏற்படும் இரத்தத்தை போக்கும்
         • வீக்கத்தை ககுறைக்கும்
         • பல் சிதைவை அகற்றும்
         • குழிவுகளைத் தடுக்கும்
         • நோய் எதிர்ப்பை அமைப்பை அதிகரிக்கும்
         • தாடை மற்றும் ஈறுகளை வலுப்படுத்துதல்.
         • ஆயில் புல்லிங் முறை

          ஆயில் புல்லிங் முறை

          • 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உங்கள் வாயை கொப்புளியுங்கள். இது பிளேக் மற்றும் பாக்டீரியாவை விரைவில் நீக்கும்.
          • இதில் நச்சுப்பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதால் இதை விழுங்க கூடாது
          • கொப்புளித்த பிறகு வாயை நன்கு கழுவவேண்டும்
          • முன்னெச்சரிக்கை

           முன்னெச்சரிக்கை

           • குழந்தைகளுக்கு ஆயில் புல்லிங் செய்ய சொல்வதை தவிர்க்கவும் ஏன்னெனில் அவர்கள் அதை விழுங்க வாய்ப்பு உள்ளது.
           • கார்கள் செய்ய வேண்டாம்.
           • வாயை கழுவிய பிறகு பல் துலக்குவது நல்லது.
           • ஒட்டுமொத்தத்தில், தேங்காய் எண்ணெயில் நிறைய நன்மைகள் உள்ளன. இதை நீங்கள் பல் துலக்குவதற்கும் வாயை கழுவுவதற்கு பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் பயன்படுத்த மிக முக்கிய காரணம் இது முற்றிலும் இயற்கையான ஒன்று. மற்றும் மலிவானதும் கூட.

            இது விஞ்ஞானத்தால் ஆதரிக்கப்பட்டு, மற்ற பேஸ்ட்டை விட நல்லது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Coconut Oil Better Than Toothpaste?

It is essential for us to keep our teeth and gums strong. Toothpaste, nowadays, contain some dangerous and harmful chemical. But there is a simple substitute for this- coconut oil toothpaste.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more