Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
அட்ட கருப்பா இருக்கீங்களா?... அட இது உங்களுக்குதாங்க... ட்ரை பண்ணுங்க... ஜொலிப்பீங்க...
இயற்கையான வழியில் வீட்டிலிருந்த படியே எப்படி பளபளக்கும் சிகப்பழகை பெறுவது என்பது பற்றி சில அழகுக் குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.
நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அந்த புலம்பல் அதிகமானால் அதுவே தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடுகிறது.

இதெல்லாற்றையும் தூக்கிப் போடுங்கள். அதேபோல வெட்டியாக பார்லருக்கு செலவிடுவதை விட, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது சில குட்டி குட்டி விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும்.

பளபள சருமம்
தேவையான பொருள்
தயிர் - தயிர் அரை ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்,
ஆரஞ்சு பழச்சாறு - ஒரு ஸ்பூன்
காரட்சாறு - ஒரு ஸ்பூன்,
ரோஸ் வாட்டர் - ஒரு ஸ்பூன்,
ஈஸ்ட் பவுடர் - அரை ஸ்பூன்,
மேற்சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாகசக் சேர்த்துகுழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின் கழுவி விடவும். முகம் உடனே பளப்பளப்பாக மாறிவிடும். எங்காவது பார்ட்டிக்கு போகும் முன் இப்படி செய்து பாருங்கள். நீங்களே அசந்து போயிடுவீங்க.

கருப்பு நீங்க
தேவையான பொருள்கள்
தயிர் ஏடு (அ) பாலேடு
மஞ்சள் தூள் - சிறிது
தயிர் ஏடு அல்லது பால் ஏடு சிறிதளவு எடுத்துக்கொண்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து நன்கு நைசாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும். இதை தினமும் செய்து வந்தாலே போதும் எப்படிப்பட்ட கருமையும் நீங்கி விடும்.

கரும்புள்ளிகள்
தேவையான பொருள்கள்
ரோஸ் வாட்டர் - ஒரு ஸ்பூன்
கிளிசரின் - ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்
பாதாம் ஆயில் - ஒரு ஸ்பூன்
ரோஸ் வாட்டர், கிளிசரின், எலுமிச்சம் பழச்சாறு, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

மிருதுவான சருமம்
தேவையான பொருள்கள்
வாழைப்பழம்
ரோஸ்வாட்டர்
நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரைக் கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு பின் தண்ணீர் தொட்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

முக சுருக்கம்
தேவையான பொருள்கள்
கிளிசரின் - ஒரு ஸ்பூன்
தேன் - சில துளிகள்
சிலருக்கு கண்ட கண்ட க்ரீம்களையும் போட்டு நெற்றி, கண்ணுக்கு கீழ்ப்பகுதி, தாடை, கன்னப்பகுதிகளில் தோல் சுருங்கியிருக்கும். சிலருக்கு இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் உண்டாகியிருக்கும். அப்படி சுருக்கம் உள்ளவர்கள் கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டு விட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். முகம் இளமையும், வசீகரமும் பெறும்.

பருக்கள்
தேவையான பொருள்கள்
சாத்துக்குடி பழச்சாறு
தேன்
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். முகம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால் அந்த சாறுடன் சில துளிகள் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளுங்கள். முகத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.

பொலிவான சருமம்
தேவையான பொருள்கள்
பப்பாளி
தயிர் ஆடை
பப்பாளிப்பழ சாறுடன் காய்ச்சாத பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

எண்ணெய் சருமத்துக்கு
தேவையான பொருள்கள்
வெள்ளரிக்காய்
கேரட்
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

சிவப்பழகு பெற
தேவையான பொருள்கள்
ஆரஞ்சு தோல் பொடி
பால்
சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் அந்த தோலை நன்கு உலர்த்தி ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.



Click it and Unblock the Notifications