For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...

அலோபிசியா என்பது தலை முடி அளவுக்கு அதிகமாக கொட்டி வழுக்கை உண்டாகும் நிலையை கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

அலோபிசியா என்பது தலை முடி அளவுக்கு அதிகமாக கொட்டி வழுக்கை உண்டாகும் நிலையாகும். ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் இந்த நிலை உண்டாகலாம். ஆனால் இதற்கு வெவ்வேறு காரணங்கள் உண்டு. ஆகவே முடி உதிர்வை கட்டுப்படுத்தும் பல்வேறு வழிகள் பற்றி அறிந்து கொள்வதால் இந்த பாதிப்பை குறைக்கலாம்.

 Fight Alopecia

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் 70 முதல் 100 முடிகளை இழக்க நேரலாம். இது சாதாரணமானது. ஆனால் 100 முடிக்கு மேல் ஒரு நாளில் உதிர நேரும் போது அது ஒரு அசாதாரண நிலையை எட்டுகிறது. இதனால் முடி வழுக்கை உண்டாகிறது. இந்த நிலை அலோபிசியா என்று அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதிப்புகள்

பாதிப்புகள்

பொதுவாக அலோபிசியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தலையில் உள்ள முடியை இழக்கின்றனர். மேலும் இது மற்ற சில இடங்களையும் பாதிக்கிறது,

அவை,

கண் புருவம்

கண் இமைகள்

தாடி

அக்குள் பகுதி

பிறப்புறுப்பு பகுதி

இந்த பதிவில் நாம் அலோபிசியா குறித்து அதன் அறிகுறிகள் மற்றும் அதனைத் தடுக்கும் விதங்கள் பற்றி அறிந்து கொள்வோம். இயற்கையான முறையில் முடி உதிர்வைத் தடுத்து வழுக்கை விழாமல் இருக்கும் வழிகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: காலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே?

காரணங்கள்

காரணங்கள்

அலோபிசியா என்னும் தலை முடி வழுக்கை உண்டாகக் காரணங்கள் நிறைய இருக்கின்றன. தலை முடி வழுக்கை உண்டாக சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாரம்பரியம்

மோசமான உணவுப்பழக்கம்

மன அழுத்தம்

தைராய்டு சுரப்பு குறை

தொற்று வியாதிகள்

மருந்துகளின் செயல்பாடு (குறிப்பாக கீமோதெரபி , தைராய்டு எதிர்ப்பு மருந்து, இரத்த உறைவு எதிர்ப்பு மருந்து , கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் சிகிச்சைக்கான மருந்து போன்றவை )

இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை

அலோபிசியா அறிகுறிகள்

அலோபிசியா அறிகுறிகள்

ஆண்களுக்கு பொதுவாக முன் முடி வழுக்கை முதலில் ஏற்படுகிறது. ஆனால் பெண்களுக்கு வேறு விதமாக இருக்கும். சில வகை அலோபிசியாவில் அரிப்பு மற்றும் உச்சந்தலையில் வலி போன்றவை உண்டாகலாம்.

காலையில் படுக்கையை விட்டு எழும்போது தலையணையில் உங்கள் முடி கொட்டி இருந்தால், அது தலை முடி அதிகமாக உதிர்வதற்கான அடையாளம் ஆகும். நீங்கள் தலைக்கு குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் மிக அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டால் அது அலோபிசியாவின் அறிகுறியாக இருக்கலாம். தலை சீவும் போதும் அளவுக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்படலாம். அதிகமாக பொடுகு இருப்பது மற்றும்அதிக எண்ணெய்ப் பசையால் பிசுபிசுப்பு போன்றவை கூட முடி உதிர்விற்கு காரணமாக இருக்கலாம்.

அலோபிசியாவை எப்படி தடுப்பது?

அலோபிசியாவை எப்படி தடுப்பது?

அலோபிசியா பாதிப்பு உண்டானவுடன் அதனை துரிதமாக கண்டறிவதும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான பழக்க வழக்கம் (புகை பிடிக்காமல் இருப்பது, போதுமான அளவு ஊட்டச்சத்து, அதிக சூரிய ஒளியை தவிர்ப்பது,) போன்றவை ஆரோக்கியமான தலை முடியைக் கொடுக்கும்.

அதிக அளவு தண்ணீர் பருகுவது. உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போல், தலை முடிக்கும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். இதனால் உங்கள் தலை முடி பளபளப்பாக, ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக தோன்றும். அதனால் தினமும் இரண்டு லிட்டர் அல்லது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் அலோபிசியாவை தடுக்க முடியும்.

MOST READ: தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...

எவ்வாறு பாதிக்கிறது?

எவ்வாறு பாதிக்கிறது?

இந்த அலோபிசியா பாதிப்பால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் மற்றும் ஒப்பனை முறையில் பாதிப்பு உண்டாகலாம்.

ஒப்பனை தொடர்பான உலகளாவிய தொந்தரவுகளில் தலை முடி வழுக்கையும் ஒன்றாகும். இந்த பாதிப்பு ஒரு மனிதனை உணர்வு ரீதியாக பாதிக்கிறது. இதனால் இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான அணுகுமுறையில் பின்னடைவு உண்டாகிறது.

ஆலோபிசியாவை போக்குவதற்கான இயற்கை சிகிச்சை

ஆலோபிசியாவை போக்குவதற்கான இயற்கை சிகிச்சை

கேரட் ஜூஸ் மற்றும் தேங்காய் பால்

கேரட்டில் வைடமின் பி 6, பி 12, மற்றும் அன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் தலை முடி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் மாறுகிறது. தேங்காய் பாலில் வைட்டமின்கள் , அமினோ அமிலம், அருந்தனிமம், கனிமம் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் உங்கள் தலை முடி ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாற உதவுகின்றன.

தேவையான பொருட்கள்

2 கேரட்

1 கப் தேங்காய் பால்(250மிலி )

செய்முறை

கேரட் மற்றும் தேங்காய் பாலை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை வடிகட்டாமல் உங்கள் தலை முடியில் தடவவும். அரை மணி நேரம் தலையில் ஊறியவுடன் குளிர்ந்த நீரால் தலையை அலசவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

தலையில் அதிகரித்த எண்ணெய் பசையால் உண்டாகும் முடி உதிர்வைத் தடுக்க வினிகர் ஒரு இயற்கை வழிமுறையாகும். இது தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

தேவையான பொருட்கள்

1 கப் ஆப்பிள் சிடர் வினிகர் (250மிலி)

செய்முறை

ஆப்பிள் சிடர் வினிகரை தலை முடியில் மற்றும் உச்சந்தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும்.

MOST READ: டயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா? இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...

முக்கிய குறிப்புகள்

முக்கிய குறிப்புகள்

அலோபிசியா பாதிப்பைத் தடுக்க சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

மன அழுத்தத்தைப் போக்கிடுங்கள். யோகா, சிரிப்பு சிகிச்சை, தாய் சி , உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் மூளையில் என்டோர்பின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

மனச்சோர்வு, பதட்டம், இரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்ளவும்.

இரும்பு சத்து, அன்டி ஆக்சிடென்ட், கொழுப்பு அமிலங்கள், வைடமின் ஏ, பி, சி , ஈ போன்றவை அதிகம் உள்ள சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் உங்கள் தலை முடியின் வேர்கால்களும் அதிக வலிமையுடன் விளங்குகிறது.

மென்மையான பிரஷ் அல்லது சீப்பு பயன்படுத்தி தலைமுடியை சீவுங்கள். இறுக்கமான சிகை அலங்காரங்களை தேர்வு செய்வதைத் தவிர்க்கவும்.

புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். இந்த பழக்கத்தால் தலை முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Fight Alopecia With Natural Solutions

These natural treatments may help restore healthy hair growth and treat to Fight Alopecia.
Desktop Bottom Promotion