Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்..
சீன ராஜாக்கள் இந்த பழத்த ராணிகளுக்கு பரிசா கொடுப்பாங்களாம்..! ஏன்னு தெரியுமா..?
ஒவ்வொரு நாட்டினருக்கு ஒரு பாரம்பரியம் எப்போதுமே இருக்கத்தான் செய்யும். இந்த பாரம்பரியம் அந்த நாட்டின் உயிர் மூச்சாகவே கருதப்படும். குறிப்பாக ராஜ வம்சத்தினர் அன்றைய காலகட்டத்தில் பாரம்பரியத்தை பெரிதும் மதித்து வந்தனர். மக்களையும் அதே போல செய்யும்படி அணையிட்டனர். கவிஞர்கள் அரசரை பற்றி புகழ்ந்து கவிதை எழுதி வந்தால் அதற்காக பொன்னும் பொருளும் அள்ளி அள்ளி கொடுப்பார்கள்.

இது போன்ற காட்சியை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். இதே போன்று பண்டைய காலத்தில் சீன ராஜாக்கள் ராணிகளுக்கு ஒரு பழத்தை பரிசாக கொடுப்பார்களாம். ராணியும் இதே பழத்தை பரிசாக பதிலுக்கு கொடுப்பார்களாம். அப்படி என்ன இந்த பழத்தில் இருக்குனு தெரிஞ்சிக்க இத படிங்க நண்பர்களே...

என்ன பழம் அது..?
சிறிய வகை பழங்களில் ஒன்றான பழம் தான் லிச்சி. இந்த பழம் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்தது. நமது உடலில் ஏற்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு இது தீர்வை தருமாம். இவ்வளவு குட்டி பழத்தில் பெரிய பெரிய அற்புதங்களெல்லாம் ஒளிந்துள்ளதாம்.

அப்படி என்ன இருக்கு..?
இந்த சீன ராஜ ராணிகள் இதை பரிசாக கொடுத்த, மகத்துவம் பெற்ற காதல் கதையை இறுதி பத்தியில் அறிவோம். அதற்கு முன் ஏன் இது இவ்வளவு போற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். சீனர்கள் தங்களது மருத்துவத்தில் இந்த பழத்தை பயன்படுத்துவார்களாம்.

வழுக்கை பிரச்சினைக்கு
இந்த லிச்சி பழத்தை முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வாகவும் பயன்படுத்துவார்களாம். காரணம் இதிலுள்ள எக்கசக்க வைட்டமின் சி தான். இவை மயிர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியை நன்கு வளர செய்யும்.

லிச்சி டீ
சீனர்கள் இந்த பழத்தை டீ போட்டும் குடிப்பார்களாம். இதில் டீ போட்டு குடித்தால் சரும நோய்கள் குணமாகுமாம். அத்துடன் வயிற்று போக்கு, வயிற்று வலி, குடல் பிரச்சினைகள் அனைத்துமே குணமடையுமாம்.

என்றும் இளமையாக இருக்க
சீனர்கள் இந்த அளவிற்கு இந்த பழத்தின் மீது கவனம் செலுத்த இவற்றின் அற்புதங்களும் காரணம். நீங்கள் இந்த பழத்தை இப்படி பயன்படுத்தினால் நீங்கள் என்றுமே இளமையாக இருப்பீர்களாம். அதற்கு தேவையானவை...
வாழைப்பழம் பாதி
லிச்சி பழம் 4

என்ன செய்யணும்..?
முதலில் லிச்சி மற்றும் வாழைப்பழத்தை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இந்த பேஸ்டை முகத்தில் எல்லா இடங்களிலும் பூசி மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் சீனர்களை போல நெனெடை ஆயுளுடன் வாழலாம்.

புற்றுநோயை தடுக்கும்
நீங்கள் லிச்சி பழத்தை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயத்தில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். ஏனெனில், இதில் புற்றநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது.

உடல் எடையை குறைக்க
உங்களின் உடல் எடையை குறைக்க இனி ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை. மாறாக இந்த லிச்சி பழத்தை உங்களின் உணவில் சேர்த்து கொண்டாலே போதும். இதில் உள்ள குறைந்த கலோரிகள் உங்களை உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும்.

முடி கொட்டுவதை நிறுத்த
முடி கொட்டும் பிரச்சினையை தீர்வுக்கு கூப்பிட வர இந்த குறிப்பு நன்கு உதவும். இதற்கு தேவையானவை..
லிச்சி 7
கற்றாழை ஜெல் 2 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் லிச்சியையும் கற்றாழையையும் நன்றாக அரிது கொள்ளவும். அடுத்து இதனை தலையில் ஒவ்வொரு அடுக்காக பிரித்து தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்வுக்கு வரும்.

ராணி ராஜா..?
சீனாவின் தங் மிஞ்காங் என்கிற அரசருக்கு யாங் என்கிற பெண்ணின் மீது அதிக காதல் பிறந்தது. அவரின் மீது அளவற்ற அன்பை இந்த ராஜா பொழிந்தார். இந்த ராணிக்கு லிச்சி பழம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் இந்த லிச்சி பழத்தை சாப்பிட வேண்டும் என ராணி விருப்பம் தெரிவிக்க, ராஜா தனது சேவகர்களை அந்த பழத்தை கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

லிச்சி கிடைக்கவில்லை..!
தனது ராஜாங்கம் முழுவதும் தேடிய சேவகர்கள் எங்கு தேடியும் லிச்சி பழம் கிடைக்கவில்லை என மன்னரிடம் கூறினர். மன்னரின் அளவற்ற அன்பிற்குரிய ராணிக்கு எப்படியாவது எந்த பழத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் எங்காவது சென்று கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

இறுதி காட்சிகள்..!
அதன் பின், வேறொரு ராஜாங்கத்தில் அந்த பழம் கிடைத்து விட்டது. சேவகர்கள் அதை ராஜாவிடம் கொண்டு சேர்த்து விட்டனர். இறுதியாக லிச்சியை தனது காதல்மிகு ராணிக்கு பரிசாக அளித்தார். அன்று முதல் சீனாவில் இந்த லிச்சி பழம் மூளை முடுக்கெங்கும் பிரபலமானதாம். பெரும்பாலும் அப்போதெல்லாம் உயரிய பழமாக இது கருதப்பட்டது.



Click it and Unblock the Notifications