For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழத்தோட தோலை தூக்கி வீசிடாதீங்க... அது உங்க முகத்த ரெண்டு மடங்கு கலராக்கும்

இங்கே நாங்கள் சருமப் பராமரிப்பு பற்றி சில குறிப்புகள் கொடுத்துள்ளோம். பழங்களுடைய தோலை நாம் வீணாக்குகிறோம். ஆனால் அந்த தோல் மூலம் நம்முடைய சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

|

பழங்களில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.
அது நமக்குப் புத்துணர்ச்சியையும் உடலுக்குத் தேவையான ஆற்றலும் உடலின் செயலியக்கம் சரியாக இயங்கவும் உதவி செய்கிறது.

fruit peels for skin brightning

இது வெறுமனே உடல் உறுப்புகளுக்கு மட்டுமே ஆரோக்கியம் என்பது கிடையாது. அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் கூட நன்மை தரக்கூடியது. நம்முடைய டயட்டில் பழங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் இயல்பாகவே நம்முடைய உடலுக்கும் சருமத்துக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அதனால் தான் நம்முடைய உணவில் பொதுவாக பழங்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்காக பரிந்துரை செய்யப்படுகிறது. குறைந்தது ஏதாவது ஒரு பழமாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழத்தோல்

பழத்தோல்

தினமும் நம்முடைய உணவில் பழங்கள் சேர்த்துக் கொள்வதினால் எவ்வளவு நன்மைகள் நமக்கு உருவாகின்றதோ அதே அளவுக்கு மட்டுமல்ல, அதைவிட அதிகமான சத்துக்கள் பழங்களின் தோல்களில் உண்டு. அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் நிறைந்த நன்மைகளைத் தரும். குறிப்பாக சில பழங்களுடைய தோல்களை சாப்பிட்டுவிட்டு, தூக்கிப் போட வேண்டாம். அது நம்முடைய சருமத்தை தூய்மைப்படுத்தும். அதேபோல், சருமத்தையும் முடியையும் மாய்ச்சரைஸராகவும் இருக்கும்.

5 பழத்தோல்

5 பழத்தோல்

எல்லா பழங்களையும் நீங்கள் தோலுடன் சேர்த்து சாப்பிட முடியாது. சில பழங்களின் தோல் நாம் வேண்டுமென்றே சீவி வீசி விடுவோம். ஆனால் உறித்து சாப்பிடுகின்ற சில பழங்களுடைய தோல்களை நம்மால் சாப்பிட முடியாதது தான். அதற்காக அந்த பழத்தின் தோலினைத் தூக்கி வீசிவிட வேண்டாம். குறிப்பாக கீழ்வரும் ஐந்து பழங்களுடைய தோல்கள் நம்முடைய சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்தும்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்

உடலில் இருக்கின்ற சில காயங்களைச் சரிசெய்ய காயங்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை வைத்து, 5 நிமிடங்கள் வரை, தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அதைக் கழுவிவிட வேண்டும். ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து, இதைச் செய்து வந்தால் விரைவிலேயே அடிபட்ட காயங்கள், தழும்புகள் மறையும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழத் தோல் என்பது சருமத்தினுடைய மிகச்சிறந்த கிளன்சராக இருக்கிறது. வெயிலில் எலுமிச்சைத் தோலை நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அதை உங்களுடைய பேஸ் பேக்குகளிலோ அல்லது குளிக்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். எலுமிச்சைத் தோலில் அதிக அளவில் அமிலம் இருப்பதால் சருமத்துக்குக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் முகத்தில் இதை நேரடியாகப் பயன்படுத்தும் முன், முகத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில், தடவி பரிசோதனை செய்து பாருங்கள். அதனால் பாலில் கலந்து தேய்த்தால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் சரியாகும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சுப் பழத் தோலினை வெயிலில் உலர்த்தி, அதைப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, அந்த தோலை வெறுமனே சருமத்தில் அப்படியே வைத்துத் தேய்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயற்கையான ஆரஞ்சுத் தோல், சருமத்துக்கு நல்ல ஸ்கிரப்பராக இருக்கும். இந்த ஆரஞ்சுத் தோல் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். ஆரஞ்சு தோலுக்குள் இருக்கும் பிளீச்சிங் ஏஜெண்ட் உங்களுடைய முகத்தை பளிச்சென பொலிவுடன் காட்டும் தன்மை கொண்டது.

பப்பாளி தோல்

பப்பாளி தோல்

பப்பாளியின் தோல் இயற்கையானவே மிக அற்புதமான நிறப்பொலிவை உங்களுக்குக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவதிலும் பப்பாளி மிகச்சிறப்பாக வேலை செய்கிறது. இந்த பப்பாளியின் தோலின் உள்பக்கத்தை முகத்தில் நேரடியாக அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டுவிடுங்கள். பின் அதை சுத்தம் செய்தால் போதும். சரும வறட்சி நீங்கி, பளபளப்பும் நிறப்பொலிவும் அதிகரிக்கும். பிறகு என்ன நீங்கள் அப்படி ஜொலிப்பீர்கள்.

தர்பூசணி தோல்

தர்பூசணி தோல்

தர்பூசணி பழத்தில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி உங்களுடைய சருமத் துளைகளுக்குள் சென்று, உள்ளுக்குள் இருக்கின்ற அழுக்குகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் உள்புறம் வரைக்கும் ஊருவிச் சென்று சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

அதனால் இனிமேல் இந்த பழத்துடைய தோல்களையும் தூக்கி வீசாமல் இப்படி பயன்படுத்துங்கள். அழகுல ஜொலிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 fruit peels that will make your skin glow

here we suggest some skin and hair care tips. we are wasting the fruit peels. but that fruit peels can give a bright color for your skin.
Story first published: Friday, September 14, 2018, 15:48 [IST]
Desktop Bottom Promotion