For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்!

பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சில வீட்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

பற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையானது, மினரல் உப்புகள், சாப்பிட்ட உணவின் மீதி மற்றும் சில பொருட்களால் உண்டாகிறது. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இது மிக கடுமையான கரையாக இருக்கும்.

இந்த கரையானது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது. முதலில் இதனை நீக்குவது மிக கடினமானதாக இருக்கும். மேலும், இதனை வராமல் பார்த்துக்கொள்வது கடினமான ஒரு செயல் தான். இது பற்களை சொத்தையாக்குவது மட்டுமில்லாமல், சிலவகையான தொற்றுக்களுக்கும் காரணமாக அமைகிறது.

Simple home remedies for Plaque on Your Teeth

நீங்கள் இந்த கரைகளுக்கு மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகமிக அவசியம். ஏனென்றால், இது வாய் பாதுகாப்பிற்கு மிகமிக அவசியம். அதிஷ்டவசமாக உங்களுக்கென சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை பற்களுக்கு பின்னால் உள்ள கரைகளை எளிதில் போக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கிராம்பு

1. கிராம்பு

கிராம்பில் உள்ள இயற்கை எண்ணைகளில் ஆன்டி பாக்டீரியல் முலக்கூறுகள் உள்ளன. இது உங்களது வாய் துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

அரை டீஸ்பூன் கிராம்பு

1 கப் தண்ணீர்

செய்முறை :

முதலில் கிராம்பை தண்ணீரில் போட்டு இருபது நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். இந்த நீரை கொண்டு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

MOST READ: அவனுக்கு எல்லாம் ஆண்மை உணர்ச்சி இழப்பு ஆப்ரேஷன் பண்ணிடனும்...

2. கடுகு எண்ணெய்

2. கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்யில் ஆண்டி பாக்டீரியல் தன்மை உள்ளது இது வாய்துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை நீக்க கூடிய தன்மை உள்ளது.

இந்த கடுகு எண்ணெய்யானது, ஈறுகளை வலியாக்கவும், பற்களை சுத்தம் செய்யவும் உதவுகிறது. மேலும் இது உணவு துகள்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்

அரை கப் தண்ணீர்

செய்முறை:

கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் இட வேண்டும். இந்த கலவையை கொண்டு வாயை நனைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பஞ்சினால், இந்த நீரை தொட்டு, ஈறுகளை துடைக்கலாம்.

3. கற்றாளை, எலுமிச்சை

3. கற்றாளை, எலுமிச்சை

பற்களில் இருக்கும் கரைகளை போக்க, கற்றாளை, எலுமிச்சை மற்றும் க்ளிசரின் ஆகியவை கலந்த பேஸ்ட் உதவியாக இருக்கும். இதனை பற்களின் மீது நேரடியாக வைத்தாலே துர்நாற்றம் மற்றும் பற்களில் உள்ள கரைகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

கற்றாளை - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1 டேபிள் ஸ்பூன்

வெஜிடபிள் கிளிசரின் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை டூத் பிரஸை கொண்டு டூத் பேஸ்டை போல பயன்படுத்த வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை அல்லது குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ: தாடி மற்றும் மீசையில் உள்ள வெள்ளை முடிகளை கருமையாக்கும் வீட்டில் உள்ள மூலிகைகள் என்னென்ன..?

4. உப்பு

4. உப்பு

உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளிப்பது பல காலமாக நாம் கடைப்பிடித்து வரும் ஒரு முறையாகும். இது பற்களின் பின்புற கரைகள், பாக்டிரியா, வாய்துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கும். இது தொற்றுகளை தடுக்கிறது.

5. எலுமிச்சை சாறு

5. எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது பற்களில் உள்ள மஞ்சள் கரைகளை வெண்மையாக்கவும், துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது

தேவையானவை

தேவையானவை

தண்ணீர் - கால் கப்

எலுமிச்சை - பாதி எலுமிச்சை

செய்முறை

தண்ணீரை சூடு செய்து, எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரால் ஒரு நிமிடம் வரை ஒருநாளைக்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple home remedies for Plaque on Your Teeth

Simple home remedies for Plaque on Your Teeth
Desktop Bottom Promotion