For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?

உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?

By Lakshmi
|

அடத்தியான புருவங்களும், அடத்தியான இமைகளும் தான் கண்ணுக்கும் பெண்ணுக்கும் அழகு.. ஆனால் ஒரு பலருக்கு புருவங்கள் அடர்த்தியாக இருப்பதில்லை. இதனால் இவர்களுடைய அழகே குறைந்து விடுகிறது. புருவங்களின் வளர்ச்சியை நீங்கள் முயற்சி செய்தால் அதிகரிக்க முடியும்.

புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்க முக்கியமாக உதவுவது ஆயில் மசாஜ் தான்... மேலும் நீங்கள் புருவம் வளர வேண்டும் என்று ஒரு சில கூடாத செயல்களை செய்து புருவங்களின் அழகை முற்றிலும் கெடுத்து விடவும் கூடாது. எதையுமே முறையாக செய்தீர்கள் என்றால் உங்களுக்கான பலன் கிடைப்பது உறுதி... இந்த பகுதியில் புருவங்களின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.. படித்து பயன் பெருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதம் எண்ணெய்

பாதம் எண்ணெய்

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் துணையாக இருக்குகிறது. அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து, சில துளிகள் அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் ரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மசாஜ்

மசாஜ்

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பு, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாக கிள்ளி விட்டால், புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வழி செய்கிறது. தினசரி குளிப்பதற்கு முன்பாக, புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை தடவி, மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம்.

திரெட்டிங்

திரெட்டிங்

புருவங்களை எப்போதும், திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும். பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம்.அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது, அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் அடர்த்தியாக, கன்னாபின்னாவென வளரும்.

குளிர்ச்சிக்கு

குளிர்ச்சிக்கு

கண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிக சிறந்தவை.

விட்டமின் இ

விட்டமின் இ

விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் தேய்க்க வேண்டும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.

விளக்கெண்ணை

விளக்கெண்ணை

விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை தினமும் இரவில் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.

கிரீன் டீ:

கிரீன் டீ:

சூடான நீரில் பச்சை தேயிலையை சேர்த்து உங்கள் கண் இமைகளிள் அதை தடவலாம். இது இமைகளுக்கு ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நீண்ட, தடிமனான, வலுவானதாகவும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get thick eye brows easily

How to get thick eye brows easily
Story first published: Wednesday, November 22, 2017, 18:15 [IST]
Desktop Bottom Promotion