பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க இத டிரை பண்ணுங்க!

Written By:
Subscribe to Boldsky

முகத்திற்கு அழகை தருவது சிரித்த முகம். அந்த சிரிப்பிற்கு அழகை தருவது வெண்மையான ஆரோக்கியமான பற்கள் தான். பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றது. உடலின் ஆரோக்கியத்தை பற்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என மருத்துவம் கூறுகின்றது. எனவே நீங்கள் பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். இந்த பகுதியில் உங்களது பற்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயற்கை பல்

செயற்கை பல்

இரண்டு பற்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை அடைக்க நீங்கள் செயற்கை முறையிலான பல் போன்ற ஒன்றை இரண்டு பற்களுக்கு இடையே வைக்க கூடிய சிகிச்சையை பல் மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். இது சிறிய பற்கள் உள்ளவர்களுக்கு பொருந்தும். ஆனால் எல்லா பற்களிடையேயும் இடைவெளி இருந்தால் அவற்றை அடைப்பது தவறு. அப்படி அடைக்க முயன்றால், பற்களின் ஈறுகள் பாதிக்கப்படலாம். பற்கள் அளவு பெரிதாகவும் செயற்கையாகவும், தோற்றமளிக்கும்.

பிரஸ்

பிரஸ்

ஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன. பொதுவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்களை பரிந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போதுதான் பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.

இரண்டு முறை

இரண்டு முறை

தினமும் பற்களை காலை, இரவு என தினமும் இரண்டு முறை துலக்க வேண்டியது அவசியமாகும். மேலும் சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் வாய் கொப்பளிக்க வேண்டியது அவசியமாகும். இதனால் பற்களில் உணவு துணுக்குகள் தங்காமல் இருக்கும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

தினமும் காலையில் சுத்தமான நல்லெண்ணெய்யில் பல் துலக்காமல் கொப்பளிப்பது என்பது பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. ஆயில் புல்லிங் செய்வதால் பற்களின் ஆரோக்கியம் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை. உடலில் சில நல்ல ஆரோக்கிய மாற்றங்களும் உருவாகின்றது.

ஃபிளாக்ஸிங்

ஃபிளாக்ஸிங்

பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக்கொள்கின்றன. தினமும் ஃபிளாஸ்ஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃபிளாஸ்ஸிங் கயிறுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

இயற்கை சுத்தம்

இயற்கை சுத்தம்

காபி, தேநீர் போன்றவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பைக்கு மேல் குடிக்கக் கூடாது. புகைத்தல், மது அருந்துதல், கோலா கலந்த குளிர்பானங்கள் அருந்துவது, பாக்கு போடுதல் போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுடன், பல்லின் ஆரோக்கியத்துக்கும் கெடுதலை விளைவிக்க கூடியதாகும்.

பற்கள் உடையாமல் இருக்க

பற்கள் உடையாமல் இருக்க

ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, கால்பந்து விளையாட்டுக்களில் குழந்தைகளுக்கு முகத்தில் அடிபட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் "மவுத் கார்டு' உபகரணத்தை வாயினுள் பொருத்தி விளையாடலாம். இது ரப்பர் போன்று வளையும் தன்மை உடையது.

குழந்தைகள் தாடை அளவுக்கு ஏற்றாற்போல செய்யலாம். இதனால் விளையாடும்போது நேரடியாக பற்களுக்கு வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.

உப்பு

உப்பு

பற்களை வெண்மையாக்க உப்பு மிகவும் சிறந்த பலனை தருகின்றது. தினமும் உப்பு கலந்த நீரில் வாய்க்கொப்பளிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

பழங்கள்

பழங்கள்

கரும்பு, அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களுக்கு இடையே உள்ள

கிளிப் அணிதல்

கிளிப் அணிதல்

"கிளிப்' அணிவது சிறந்த வழி. இதன் மூலம் பற்கள் தாடை எலும்பினுள் நகர்ந்து நெருங்குவதால், நிரந்தர சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. "கிளிப்' அணிய தயக்கமாக இருந்தால், தற்போது பற்களின் மேல் பொருந்தக் கூடிய நிறமில்லாத, கவர் போன்ற உபகரணங்கள் வந்துள்ளன. அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அணிய வேண்டும். பற்கள் நகரத் துவங்கும்போது, வேறு, "செட்' வழங்கப்படும். பல்சீரமைப்பு நிபுணரை கலந்து ஆலோசனை பெற்று, தொடர் சிகிச்சையாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலம் இவற்றை அணிந்தால் பற்களை சீராக்கலாம்.

கிளிப் வகைகள்

கிளிப் வகைகள்

பற்களுக்கு இடையே இருக்கும் இடைவெளிகளை சரி செய்யவும், பற்கள்களை சீரமைக்கவும் க்ளிப் போடுவது ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும். இந்த கிளிப்களை டெம்ரவரியாகவும், அல்லது பர்மனட்டாகவும் அணியலாம். ஆனால் க்ளிப் போட்டு இருக்கும் போது பற்களில் சேரும் அழுக்குகள், கரைகளை அடிக்கடி க்ளீன் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to get rid of gab between tooth

gab between tooth
Please Wait while comments are loading...
Subscribe Newsletter