கொரிய நாட்டுப் பெண்கள் தங்கள் அழகுக்காக இதெல்லாமா செய்வார்கள்!

Posted By:
Subscribe to Boldsky

டிவி சீரியல் காலங்காலமாக தொடர்வது. அழுவாச்சி சீன் என்பதெல்லாம் அந்தக்காலம். இப்போதெல்லாம் இளைஞர்களை கவரும் ட்ரண்டியான சீரிஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது.

இன்றைக்கு பலரும் விரும்பி பார்க்கும் விஷயங்களில் ஒன்றாக கொரியன் சீரியல் இருக்கிறது. கதையில் இன்றைய நவீனம் மற்றும் இளைஞர்கள் விரும்பும் கேலி,கிண்டல் எல்லாம் கலந்திருந்தாலும் அவர்களை ரசிக்க வைத்திடும் இன்னொரு விஷயம் என்ன தெரியுமா?

Amazing Korean beauty secrets you should follow

Image Courtesy

'அழகு' என்ற விஷயம் தான். ஆம், அந்த சீரியலில் நடிக்கும் எல்லாருக்கும் வலுவலுப்பான சருமம் எந்த ஒரு மாசு மருவற்று மின்னும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் தங்கள் சருமத்தை பராமரிக்க என்னென்ன மெனக்கெடல்கள் எல்லாம் மேற்கொள்கிறார்கள் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ளன்சிங் :

க்ளன்சிங் :

கொரியாவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சருமத்தை முறையாக பரமாரிக்கிறார்கள் . அடுத்ததாக எப்போதும் சருமத்தை ஈரப்பதத்துடனேயே பராமரிக்கிறார்கள். எண்ணெய் பசையுள்ள க்ளன்சர்களை பயன்படுத்துகிறார்கள்.முகத்திற்கு சோப்புக்கு பதிலாக ஃபேஷ் வாஷ் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இது சருமத்தில் இருக்கும் செல்களை உடனடியாக குளிர்விக்கிறது.தண்ணீர் சத்த இருக்கச் செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அதிகம் பாதிப்படையமால் முகம் பளீச்சென்று இருக்கிறது.

பழங்கள் :

பழங்கள் :

கெமிக்கல்கள் கலந்த ஃபேஷ் வாஷினை விட பழங்கள் நிறைந்த ஃபேஷ் வாஷினைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஸ்ட்ராபெர்ரீயை பயன்படுத்துகிறார்கள். அதிலிருக்கும் பிங்க் டிண்ட் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழத்தை குழைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக்காக தடவி பத்து நிமிடங்களில் கழுவி விடலாம்.

ஐஸ் :

ஐஸ் :

ஒவ்வொரு பதினைந்து நாளைக்கு ஒரு முறை இதனை செய்கிறார்கள். சருமத்தில் இருக்கும் பிஎச் அளவினை மெயிண்டெயின் செய்வதை முறையாக கவனிக்கிறார்கள்.தினமும் காலையும் மாலையும் முகத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கிறார்கள். இப்படிச் செய்வதால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதோடு பி எச் அளவும் குறையாது.

ஸ்க்ரப் :

ஸ்க்ரப் :

கொரியப் பெண்கள் எண்ணெய் பசையுள்ள ஸ்க்ரப்பைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது சருமத் துளைகளில் இருக்கும் அழுக்கை அகற்றுவதோடு சருமத்தில் எண்ணெய்ப் பசையை பராமரிக்கிறது. அதிக வறட்சியடையாமல் வைத்திருக்க உதவுகிறது.

டோனர் :

டோனர் :

குளித்த பிறகோ அல்லது முகத்தை கழுவிய பிறகு நாம் மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் கொரியாவை சேர்ந்த பெண்கள் மாய்சரைசருக்கு முன்பாக டோனரை பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்வதால் சருமத் துளைகள் விரிவாகமல் இருக்கும். சருமத்தின் டெக்ஸ்சர் மிருதுவாக இருந்திடும்.

கரும்புள்ளி :

கரும்புள்ளி :

சருமத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. கரும்புள்ளி, சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசினால் முகத்தில் கரும்புள்ளி தோன்றிடும். அதனை நீக்க அவர்கள், அடிக்கடி ஸ்க்ரப் மட்டும் பயன்படுத்துவதில்லை.அதற்கு மாறாக சாஃப்ட் பிளாக் ஹெட்ஸ் ஸ்ட்ரிப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இது முகத்தில் சேர்ந்திடும் நுண்ணிய அழுக்குகளை கூட நீக்கிடுகிறது.

சன் ஸ்கிரீன் :

சன் ஸ்கிரீன் :

கண்டிப்பான முறையில் தினமும் வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துகிறார்கள். அதனை தவறாது பின்பற்றுகிறார்கள். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து காப்பாற்றிடும்.

பியர்ல் :

பியர்ல் :

முத்துக்கள்.கொரியப் பெண்களின் அழகுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஒற்றை ரகசியம் இது தான். சந்தையில் கிடைப்பவற்றை எல்லாம் பயன்படுத்துவதை விட முத்து சேர்த்த அந்த அழகுப் பொருளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

ஹைட்ரேட்டிங் :

ஹைட்ரேட்டிங் :

ஸ்ப்ரே எசன்சஸ் பயன்படுத்தாது அவர்களது மேக்கப் முடிவதில்லை. அந்த எசன்ஸில் நிரம்பியிருக்கும் ப்ரோட்டீன் சருமத்தில் இருக்கும் கொலாஜன்னை சரியாக பராமரிக்க உதவுகிறது. இது சருமம் வயதான தோற்றன் ஏற்படுவதை தடுத்திடும்.

கொலாஜன் பூஸ்டிங் மாஸ்க் :

கொலாஜன் பூஸ்டிங் மாஸ்க் :

தினமும் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டுமா? என்று நாம் யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் தங்கள் சருமத்தை பராமரிக்க தினமும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் தெரியுமா?

கொலஜன் உற்பத்தியை துரிதப்படுத்தும் ஃபேஸ் மாஸ்க்குகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது சருமத்தை ஆரோக்கியமாகவும் , அழகாகவும் பராமரிக்க உதவுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் இருக்க இதுவும் ஒரு காரணம்.

லிப் மாஸ்க் :

லிப் மாஸ்க் :

அவர்கள் முகத்தை மட்டுமல்ல உதட்டினைக்கூட அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்கிறார்கள். வெயிலினால் தங்கள் உதடு நிறமாறிவிடக்கூடாது என்பதற்காக லிப் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள். இது உதடு வறண்டிடாமல் பாதுகாக்கிறது.

 மேக்கப் ரிமூவர் :

மேக்கப் ரிமூவர் :

என்ன தான் மேக்கப் போட அத்தனை முக்கியத்துவம் கொடுத்தாலும் அதேயளவு முக்கியத்தவம் அதனை கலைப்பதற்கும் கொடுக்கிறார்கள். முறையாக மேக்கப் ரிமூவரை பயன்படுத்துகிறார்கள்.

வெயிலில் செல்லும் போது போடப்படும் சன்ஸ்கிரீன்,மாய்சரைசர் போன்றவற்றினை தூங்கச் செல்வதற்கு முன்னால் சுத்தமாக்கிட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தனித்தனி சீரம் :

தனித்தனி சீரம் :

நமக்கெல்லாம் ஒரே சீரம் தான். அதுவும் பலரும் சீரம் பயன்படுத்துவதேயில்லை. ஆனால் கோரியப் பெண்கள் பகல் நேரத்திற்கு ஒன்று இரவு நேரத்திற்கு ஒன்று என தனித்தனியாக பயன்படுத்துகிறார்கள். ஃபேர்னஸ் சீரம் பகல் நேரத்திலும் ரீஜெனுவேட்டிங் சீரம் இரவிலும் பயன்படுத்துகிறார்கள்.

மாய்சரைசர் :

மாய்சரைசர் :

நாம் ஒரு மாய்சரைசர் வாங்கி விட்டால் காலம் காலமாக அதை மட்டும பயன்படுத்துவோம். ஆனால் அவர்கள் தங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ப, சீசனுக்கு ஏற்ப பயன்படுத்தும் மாய்சரைசரை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். வெயில்,மழை,குளிர் என எந்த காலம் மாறினாலும் தங்கள் சருமத்தை முறையாக பராமரிக்கிறார்கள்.

கண்கள் :

கண்கள் :

கொரியப் பெண்களின் அழகை தூக்கி காட்டுவது அவர்களது கண்கள் தான். அந்த கண்களை அழகாக காட்ட இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஐ சீரம் பயன்படுத்துகிறார்கள்.

ஜெல் பேஸ்டு ஐ சீரம் அதற்காக பயன்படுத்துகிறார்கள் . இது கண்களைச் சுற்றியிருக்கும் சருமத்தை புத்துணர்வாக்கும். அதோடு அதீத களைப்பு இருந்தாலும் இதனை பயன்படுத்தினால் அது மறைந்திடும்.

 எமுல்ஷன் :

எமுல்ஷன் :

பகல் நேரத்தில் பயன்படுத்துகிற மாய்சரைசரை விட எமுல்சன் திக்காக இருக்கும். அதனையே இரவு நேரத்தில் சருமத்தில் தடவிக் கொள்கிறார்கள். இது சருமத்தில் இருக்கும் லேயர்களை சுத்தமாக்குகிறது. சிபாசியஸ் க்ளாண்ட் அதிகமாக சுரப்பதை கட்டுப்படுத்துகிறது.

இதனால் அதிக எண்ணெய் சுரப்பு கட்டுப்படும். அதே சமயம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இவற்றையெல்லாம் அவர்கள் தொடர்ந்து செய்வதால் மட்டுமே எல்லாரும் ஆச்சரியப்படும் மிளிரும் அழகுடன் அவர்கள் ஜொலிக்கிறார்கள். ஒரு நாள் மட்டும் பயன்படுத்திவிட்டு ஒரே நாளில் எல்லாமே மாற வேண்டும் என்றால் அது முட்டாள்தனத்தின் உச்சம் என்பதை உணர்ந்து உங்கள் சருமத்தை முறையாக தொடர்ந்து பராமரியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Korean beauty secrets you should follow

Amazing Korean beauty secrets you should follow
Subscribe Newsletter