Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனிங் செய்வது எப்படி?
பலர் குளிக்கும் பொழுது தலைமுடியை சரியாக அலசாமல், தவறான முறைகளிலேயே அலசிக் குளிக்கிறார்கள். அதனால் கூந்தலானது ஆரோக்கியமின்றி, பொடுகு, கூந்தல் உதிர்தல், பொலிவிழந்து காணப்படுதல் என்று இருக்கிறது. எனவே இத்தகைய நிலை மாறி, நல்ல சுத்தமான மற்றும் பளபளப்பான முடியை எப்படி பெறுவது என்று காணலாம்.

வழிமுறைகள்
1. முதலில் தேவைப்படும் ஷாம்பு, கண்டிஷனர் (முடியை நன்கு பராமரிக்க ஷாம்பு போட்ட பிறகு முடியில் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் பொருள்) மற்றும் சீப்பை எடுத்துக் கொள்ளவும்.
2. முடி சிக்காவதைத் தடுக்க குளிக்கப் போவதற்கு முன்பே, நன்றாக பிரஷ் வைத்து சீவி சிக்கை நீக்கிக் கொள்ளவும்.
3. முடியை வெதுவெதுப்பான நீரில் 30 வினாடிகள் நன்கு நனைக்கவும்.
4. முடியின் நீளத்திற்குத் தக்கபடி, உள்ளங்கையில் ஷாம்புவை எடுத்துக் கொள்ளவும்.
5. தலையின் உச்சியில் ஷாம்புவை தடவி, தலை முழுவதும் விரல் நுனிகளால் மசாஜ் செய்து, பின் முடி நுனி வரை தேய்க்கவும்.
6. பின் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு முழுவதும் நீங்கும் வரை நன்கு அலசவும்.
7. இப்பொழுது சிறிது கண்டிஷனரை, உள்ளங்கையில் விட்டு, இரண்டு கைகளால் தடவி, கூந்தல் முழுவதும் தடவ வேண்டும். குறிப்பாக ஸ்கால்ப்பில் படும்படியாக தடவக் கூடாது.
8. 2 முதல் 3 நிமிடங்கள் வரை கண்டிஷனரைத் தலையில் முழுவதும் பரவும் படி மெதுவாக விரல்களால் நன்கு தேய்த்துக் கொண்டிருக்கவும்.
9. இப்பொழுது தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், கண்டிஷனர் முழுவதுமாக நீங்கும் வரை நன்கு அலசவும்.
10.இறுதியாகக் குளிர்ந்த நீரால் வேகமாக அடிக்கவும். அப்பொழுதுதான் தலையில் உள்ள மயிர் துவாரங்கள் அடைபட்டு, கூந்தலுக்கு கூடுதல் பளபளப்பைத் தரும்.
11. தலைமுடியின் ஈரத்தை ஒரு துணியால் ஒற்றி எடுக்கவும். முடியைப் பிழியக்கூடாது.
12. முடியைக் காற்றிலேயே உலர விடுவதுதான் ஆரோக்கியமானது. ஹேர் ட்ரையர் மூலம் உலர வைப்பதால் முடி வறண்டும் சுருண்டும் போகும்.



Click it and Unblock the Notifications
