Latest Updates
-
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க
வெள்ளையான சருமத்தைப் பெறுவதற்கான டிப்ஸ்...
சினிமா நடிகைகளும், பத்திரிக்கைகளில் இடம் பெறும் பெண்களும் எப்படி இவ்வளவு அழகாக தோற்றம் அளிக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அவர்களை போல் அழகாக இருக்க முடியவில்லையே என்று ஏங்கியது உண்டா? அப்படியெனில் வெள்ளையான சருமத்தைப் பெறுவதற்கு சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வெள்ளையாக அழகாக மின்னுங்கள்.

* முகத்தில் ஏற்கனவே ஏதாவது அழகுப் பொருள் பூசப்பட்டு இருந்தால், முதலில் அதை நீக்கவும். அதுவும் அழகுப் பொருளை துடைக்கும் கருவி அல்லது அட்டை மூலமாக முகத்தில் இருக்கும் க்ரீம்களை நீக்கலாம். இதை தினந்தோறும் செய்யாவிட்டால், சருமம் விரைவில் முதிர்ச்சி அடைந்து, சரும துவாரங்கள் அடைக்கப்பட்டு கரும்புள்ளிகள், கருவளையம் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். ஆகவே காலையிலும் இரவிலும் சுத்தம் செய்து, மெருகூட்டுங்கள்.
* காலையிலும், இரவிலும் உங்கள் சருமத்தை ஈரப்படுத்த வேண்டும். அதிலும் உலர்வான சருமம் இருந்தால், பகல் நேரங்களிலும் சருமத்தை ஈரப்படுத்தலாம். முகம் முழுவதும் நல்ல ஈரப்படுத்தும் மாய்ஸ்சுரைசர் பொருளை பயன்படுத்துவது அவசியம். பகலுக்கும், இரவுக்கும் ஏற்ற ஈரப்படுத்தும் சாதனத்தை பயன்படுத்த வேண்டும். சுருக்கங்கள் தோன்றுவதை நீக்க விரும்பினால், சுருக்கங்களை தடுக்கும் ஈரப்படுத்தும் சாதனத்தை பயன்படுத்தலாம். அழகு சாதனம் பூசிக் கொள்ளும் முன்பும், பின்பும் இதை செய்ய மறக்க வேண்டும். இதனால் நாள் முழுவதும் இழந்த ஈரப்பதத்தை மீண்டும் பெற்றிடலாம்.
* ஃபௌவுண்டேஷன் திரவம், பௌடர் அல்லது க்ரீம் ஆகியவற்றை வாங்க முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக சரும நிறத்திற்கு பொருத்தமான நிறத்தை வாங்க மறக்கக் கூடாது. சீரற்ற சரும நிறத்தை நிரப்பி, சருமத்தை மென்மையாக்க திரவம் சிறந்தது. புள்ளிகளையும், வடுக்களையும் நீக்க பௌடர் சிறந்தது. சில அழகுக்கலை நிபுணர்கள் இரண்டையும் பயன்படுத்துவார்கள். ஆனால் உங்கள் விருப்பப்படி நீங்கள் ஒப்பணை செய்து கொள்ள வேண்டும். நல்ல ஃபௌண்டேஷன்கள் உதாரணமாக க்ரீம்கள் அதிகமாக இருக்கும் ஃபௌண்டேஷன்கள் சரும துவாரங்களை அடைக்காது. அனைத்து சருமங்களுக்கும் ஏற்ற ஃபௌண்டேஷன் என்று விற்கப்படும் எதையும் வாங்காதீர்கள், பெரும்பாலும் அவை அவ்வாறு செயல்படுவது இல்லை.
* நல்ல கன்சீலர் வாங்கவும் முதலீடு செய்ய வேண்டும். இதனால் ஃபௌண்டேஷன் விட்டு வைத்த புள்ளிகள் மற்றும் மாசுகளை இவை மறைத்துவிடும். மேலும் இரவில் சரியாக உறங்காததால் ஏற்படும் கருவட்டங்களை குறைக்கவும், இவை உதவும்.
குறிப்புகள்:
சருமத்திற்கு ஏற்ற ஈரமாக்கும் பொருளை பயன்படுத்த மறக்காதீர்கள்/ உதாரணமாக உலர்வான, எண்ணெய் பிசுக்கான, சாதாரண சருமத்திற்கு ஏற்ற ஈரமாக்கும் பொருட்களை பயன்படுத்தவும். சரியான நிறத்தை உடைய ஃபௌண்டேஷனை வாங்க வேண்டும். அதுவும் பரிசோதித்த பிறகே அவற்றை வாங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
