Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
முடி பிரச்சனையா? கவலைய விடுங்க.. இந்த உருளைக்கிழங்கு சாற்றை ட்ரை பண்ணுங்கள்..!
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு கிழங்கு வகை காய்கறியாகும்.. இது நம் அனைவரின் உணவு முறையில் அடிப்படையாக உபயோகிக்கும் காயாகும்.. இதை உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சமையலறையிலும் காண முடியும்..
இது மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். சத்தான உணவுகளில் நான்காவது இடத்தை உருளைக்கிழங்கு பெற்றுள்ளது என்றால் நம்புவீர்களா? . உருளைக்கிழங்குக்கு முன், அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆகியவை உலக உணவின் முக்கிய அங்கமாக இருந்தன.

அப்படிப்பட்ட இந்த உருளை கிழங்கு அழகு குறிப்புகளுக்கு பயன்படுகிறது தெரியுமா? ஆனால் அது உண்மைதான். உருளைக்கிழங்கை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தலாம். முகத்திற்கும் நம் கூந்தலுக்கும் இது பயன்படுகிறது.. அந்த வகையில் முடி நன்றாக வளர நம் கூந்தலுக்கு இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
உருளைக்கிழங்குடன் முடி அழகு குறிப்புகள்
1. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து நன்றக அரைத்து அதன் தண்ணீரை பிழியவும். அதில் முட்டை மற்றும் தயிர் கலக்கவும். பின்னர் ஒரு நல்ல பேக் செய்யப்படுகிறது. முடி மற்றும் முழு முடி வேர்களுக்கு இதை அப்ளை பண்னவும்.. பின்னர் இதை 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் சாதாரண ஷாம்பூவுடன் அலசிவிட வேண்டும்.. இதை 20 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர நல்ல கருமையான கூந்தல் வளரும்.. இந்த பேக் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை அளிக்கிறது.
2. உருளைக்கிழங்கை வட்டமாக தோலுடன் கட் பண்ணி வைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்குத் தோல்களைச் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது இந்த தண்ணீரை ஏதேனும் பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும். பின்னர் அநத சாற்றை உங்கள் கூந்தலில் அபளை பண்ணுங்கள்.. அதன் பிறகு சாதாரண ஷாம்பூவுடன் முடியை அலசிவிட வேண்டும்.. பின், வேகவைத்த மற்றும் வடிகட்டிய நீரில் கழுவவும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கருப்பு நிறத்தை கொடுக்க உதவுகிறது. நரை முடிக்கு இது ஒரு நல்ல மற்றும் இயற்கையான சிகிச்சையாகும்.
3. முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் பிரச்சனையை தீர்க்க வீட்டிலேயே செய்ய வேண்டிய அழகு செய்முறையை இப்போது தெரிந்துக் கொள்ளலாம்.. . உருளைக்கிழங்கு சாறு மூன்று ஸ்பூன், கற்றாழை சாறு மூன்று ஸ்பூன், தேன் இரண்டு ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து. இந்த கலவையை உச்சந்தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து வழக்கமான ஷாம்பு கொண்டு முடியை அலசி விடவும்... வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த 3 முறைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது.. உங்களின் கூந்தல் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளர்ந்து வருவதை நீங்களே உணரலாம்...



Click it and Unblock the Notifications