Latest Updates
-
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க..
முருங்கை இலையை முடியில் இப்படி யூஸ் பண்ணா... உங்க முடி முருங்கை மரம் மாதிரி கிடுகிடுன்னு வருமாம்!
முருங்கை இலையை இதுவரை நீங்கள் சமையலில் மட்டுமே பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் உண்மையில் முருங்கை இலையை கொண்டு உங்கள் கூந்தலை அழகாக மாற்றலாம். முருங்கை இலை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கவதோடு மட்டுமல்லாமல் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குகிறது.

முருங்கை இலையில் புரோட்டீன், பீட்டா கரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு வகையான பீனாலிக் அமிலங்கள் உள்ளன. இவை உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. இதிலுள்ள ஜிங்க் உங்கள் கூந்தலுக்கு உள்ளிருந்து ஈரப்பதத்தை வழங்குகிறது.
இதன் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் பொடுகு, உச்சந்தலை அரிப்பு இவற்றை போக்கி கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இக்கட்டுரையில் முருங்கை இலையைக் கொண்டு உங்கள் கூந்தலை எப்படி பொலிவாக மாற்றலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
முருங்கை எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்யும் போது கூந்தல் வளர்ச்சி மேம்படுகிறது. இந்த எண்ணெய் தோல் அடுக்குகளில் ஊடுருவி முடியின் வேர்களை வலுவாக்குகிறது. இது முடிகளுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. முடியின் வறட்சியை போக்கி போதுமான ஊட்டமளிக்கிறது. இந்த எண்ணெயை நீங்கள் நேரடியாகவே உங்கள் தலைமுடியில் பயன்படுத்தலாம். பொடுகு இல்லாத கூந்தலை பெற விரும்புபவர்கள் இந்த செய்முறையை செய்து பலன் அடையலாம்.
முருங்கை இலை தேநீர்
சிறுதளவு முருங்கை இலையை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதன் சாறு நன்றாக இறங்கியதும் அதைக் கொண்டு உங்கள் கூந்தலை அலசி வரலாம். இந்த தேநீரில் முக்கியமான புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை சேதமடைந்த முடி செல்களை சரி செய்ய உதவுகிறது. இந்த தேநீரைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அலசுங்கள். இதன் மூலம் நீங்கள் அடர்த்தியான, நீளமான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும்.
முருங்கை இலை ஹேர் மாஸ்க்
முருங்கை இலை ஹேர் மாஸ்க் உங்கள் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 2 டீஸ்பூன் முருங்கை தூளுடன், 3 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் முருங்கை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்து 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு கூந்தலை தண்ணீரில் நன்றாக அலசுங்கள். இதன் மூலம் அழகான பொலிவான கூந்தலை நீங்கள் பெறலாம்.
முருங்கை இலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
முருங்கை இலையை உணவில் சேர்த்து வருவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. முருங்கை இலையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கும். முருங்கை இலை கூட்டு, முருங்கை இலை சாறு மற்றும் தேநீர் என நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஸ்மூத்திகள் மற்றும் சூப்களில் கூட இதை நீங்கள் பயன்படுத்தலாம். இது முடியின் வேர்களை பலப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
முருங்கை இலை ஹேர் டோனர்
ஒரு பாத்திரத்தில் சிறுதளவு தண்ணீர் ஊற்றி அதில் முருங்கை இலையை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். இப்பொழுது இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து கூந்தலுக்கு டோனராக பயன்படுத்தலாம். தேவைப்படும் போது இதை கூந்தலில் அடித்து டோனராக பயன்படுத்தி கொள்ளுங்கள். இது கூந்தல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
முருங்கை இலை ஜூஸ்
1 டீஸ்பூன் முருங்கை இலை பவுடரை சிறுதளவு வெந்நீரில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரைக் கொண்டு கூந்தலை அலசி வாருங்கள். இது தலையில் உள்ள அழுக்குகள் மற்றும் பொடுகுகளை நீக்கி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. கூந்தல் உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது. முருங்கை இலை பொடி தயாரிக்க முருங்கை இலையை வெயில் படாமல் உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உலர்ந்த இலையை மிக்ஸி சாரில் போட்டு பொடியாக்கி டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications


