Latest Updates
-
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
கொத்து கொத்தா முடி கொட்டுதா? முடி பளபளன்னு இல்லையா? அப்ப செம்பருத்தியை இப்படி யூஸ் பண்ணுங்க!
முடி உதிர்தல் என்பது எல்லா வயதினருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும். மேலும், முடி உதிர்தலுக்கான அடிப்படை காரணங்களை முதலில் அடையாளம் கான் வேண்டும். ஏனெனில், அதன் அடிப்படையிலேயே உங்கள் முடி ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
பெரும்பாலும் மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில மருந்துகள் உங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், மாசு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் உங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்.

உங்களுக்கு முடி உதிர்தல் உட்பட பல்வேறு தலைமுடி பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் இயற்கையான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். இதற்கான தீர்வை உங்கள் தோட்டத்தில் நீங்கள் காணலாம். ஆம், அது அழகான வண்ண மலர்களை கொண்ட செம்பருத்தி செடிதான்!
செம்பருத்தி பழங்காலத்திலிருந்தே முடி உதிர்தலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அவை முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது மற்றும் உச்சந்தலையில் pH ஐ மீட்டெடுக்க உதவுகிறது. செம்பருத்தி டீ-யும் உங்கள் தலைமுடிக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
தலைமுடிக்கு செம்பருத்தி
முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடியை நிர்வகிக்க செம்பருத்தியை பயன்படுத்துவதற்கான வழிகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். செம்பருத்தி ஒரு இயற்கையான, நச்சுத்தன்மையற்ற பொருளாகும். இது முடி உதிர்வைக் குறைக்கவும் பளபளப்பான தலைமுடியை பெறவும் உதவுகிறது.
செம்பருத்தி பேஸ்ட்டை உருவாக்கவும்
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடியை சிறிதளவு தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக தயாரித்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து, அதை கழுவ வேண்டும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால், முடி உதிர்வைக் குறைக்கலாம். உங்கள் முடியும் பளபளப்பான பொலிவை பெரும். செம்பருத்தி பொடி இல்லையென்றால், செம்பருத்தி பூ மற்றும் இலைகளை அரைத்து அந்த பேஸ்ட்டை தலையில் தடவலாம்.
செம்பருத்தி எண்ணெய் பயன்படுத்தவும்
செம்பருத்திப் பொடியையும் தேங்காய் எண்ணெயையும் சம பாகமாகக் கலந்து வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெயைத் தயாரிக்கலாம். இந்த எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் 10 நிமிடங்கள் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். உங்கள் பெட்ஷீட் மற்றும் தலையணை முழுவதும் எண்ணெய் படாமல் இருக்க ஷவர் கேப் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது, உச்சந்தலையை ஊட்டமளிக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் உதவும்.
செம்பருத்தி ஷாம்பு தயாரியுங்கள்
செம்பருத்தி பொடி மற்றும் தண்ணீரை சம பாகங்களில் கலந்து செம்பருத்தி ஷாம்பு செய்யலாம். இந்த ஷாம்பூவை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், உங்கள் முடி உதிர்வை குறைக்கலாம்.
கண்டிஷனரில் செம்பருத்தியை பயன்படுத்துங்கள்
கண்டிஷனர் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. அந்த வகையில், உங்கள் வழக்கமான கண்டிஷனரில் ஒரு டேபிள் ஸ்பூன் செம்பருத்திப் பொடியைச் சேர்த்து பயன்படுத்துங்கள். இது உங்கள் முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும்.
இறுதிக் குறிப்பு
முடி உதிர்வைக் கட்டுப்படுத்த செம்பருத்தி இலை மற்றும் பூவைப் பயன்படுத்துவது, முடி உதிர்வைக் குறைப்பதற்கும், உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுவதற்கும் இயற்கையான, நச்சுத்தன்மையற்ற வழியாகும். இந்த இயற்கை தீர்வை வீட்டில் முயற்சித்து, அடர்த்தியான பளபளப்பான கூந்தலை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications


