Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சுருள் முடியை 5 நிமிடங்களில் ஸ்டைலாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
சுருள் முடி பராமரிப்பு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். சுருட்டை முடி கொண்டவர்கள் ஹேர் வாஷ் செய்யும் பொழுது ஏற்கனவே கொஞ்சம் வறட்சியாக இருக்கும் கூந்தலின் தன்மை மேலும் வறண்டு விடும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சுருட்டை முடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்..ஆனால் அதனை சரியாக பராமரிப்பது மிக மிகக் கடினம்.
சுருள் முடிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. சிலர் பிறக்கும்போதே சுருள் முடியுடன் பிறக்கின்றனர்.. இந்த சுருள் முடியை எவ்வாறு பராமரிப்பது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? நீண்ட கூந்தலை விட சுருட்டை முடியை சுத்தம் செய்து பராமரிக்க அதிக கவனம் தேவை. அதனால் அதை சுத்தமாக வைத்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். இது மற்ற முடி வகைகளைப் போல எளிமையானது அல்ல. இருப்பினும், சுருள் முடியின் அழகை பராமரிக்க பல எளிய வழிகள் உள்ளன.
அதில் முடி பராமரிப்பு பொருட்கள் பல உள்ளன, ஆனால் வீட்டில் பாதுகாப்பாக செய்யக்கூடிய இயற்கை பொருட்களை தேர்வு செய்வது சிறந்தது. உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் சுருள் முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

எண்ணெய்
நீளமான கூந்தலை விட சுருள் முடி வறட்சிக்கு ஆளாகிறது, எனவே எண்ணெய் தடவுவது அவசியம். ஏனெனில், சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய், சுருட்டை முடியின் முனைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. வறண்ட முடி பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை முயற்சிக்கவும்.
ஹேர் பேக்
பல்வேறு ஹேர் பேக்குகள் சுருள் முடியை சுத்தமாக வைத்திருக்க உதவும். சமையலறை பொருட்களை கொண்டு இவற்றை இயற்கை முறையில் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மயோனைஸ், முட்டை, பால், தயிர், தேன் மற்றும் எலுமிச்சை.
ஷாம்பு
சுருள் முடி உள்ளவர்கள் குறைவாக ஷாம்பு போட வேண்டும். பல வளைவுகள் மற்றும் பிளவுகள் இருப்பதால், ஷாம்பு எச்சம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது முடியின் அழகைக் கெடுத்துவிடும். சுருள் முடியை சுத்தம் செய்ய இயற்கை வழிகளை பின்பற்றவும். அதுவே நல்லது..
கண்டிஷனிங்
சுருள் முடியை கட்டுப்படுத்துவதற்கு கண்டிஷனிங் அவசியம். ஒன்று நல்ல கண்டிஷனர் வாங்கி உபயோகியுங்கள். அல்லது இயற்கை பொருட்களைப் பயன்படுத்துங்கள். தேன், முட்டை, ஆப்பிள் ஜூஸ் பானம் மற்றும் தேநீர் அனைத்தும் இயற்கையான கண்டிஷனர்கள்.
சீப்பு
சுருள் முடியை சீவும்போது சீப்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சுருட்டைகளில் சிக்காத தட்டையான பல் கொண்ட சீப்பு சிறந்தது. கூர்மையான பற்கள் கொண்ட சீப்புகள் முடி வழியாக இழுக்க கடினமாக இருக்கும். இது முடியை சேதப்படுத்தும். அதனால் உங்க சுருள் முடிக்கு ஏற்றவாறு நல்ல தட்டையான சீப்பை பயன்படுத்துங்கள்..



Click it and Unblock the Notifications