Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சொத்தையை எப்படி முன்னரே தடுக்கலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்
பற்சொத்தை என்பது பெரியவர்களை மட்டுமல்ல சிறியவர்களையும் எளிதில் பாதிக்க கூடியது. அதிலும் குழந்தைகள் இந்த பற்சொத்தையால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் என்ன தான் கவனமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படுவது அதிகமாகித் தான் வருகிறது. பற்சொத்தை என்பது அவர்களுக்கு வலி மிகுந்த ஒன்றாகவும் உள்ளது.
சில குழந்தைகளுக்கு பற்சொத்தை அதிகமாகி சிறு வயதிலேயே பல்லை பிடுங்கும் அபாயம் மற்றும் பற்களுக்கு கேப் போடும் அபாயம் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி 6-8 வயதுள்ள குழந்தைகள் அதிகளவில் இந்த பற்சொத்தையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

எனவே குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பற்சொத்தையை முன்னரே தடுப்பது மிகவும் அவசியம். அதற்கு ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
பற்சொத்தை ஏற்படக் காரணங்கள்
மோசமான வாய்வழி சுகாதாரம்
பற்சொத்தைக்கு முக்கிய காரணமாக இருப்பது வாய் வழி சுகாதாரத்தை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதாகும். குழந்தைகள் போதுமான அளவு பல் துலக்காமல் இருப்பது, ஃப்ளாசிங் செய்யாமல் இருப்பது போன்றவை பல் இடுக்குகளுக்கிடையே உணவுப் பொருட்களை தங்க வைத்து காலப்போக்கில் பற்சொத்தையை ஏற்படுத்தி விடுகிறது.
உணவுப் பொருட்கள் தங்கும் இடத்தில் பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகரித்து பற்சொத்தையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பற்சொத்தை வராமல் தடுக்க சரியாக பல் துலக்க வேண்டும். அதிலும் ஃவுளூரைடு பற்பசைகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
1000 ppm வரை உள்ள ஃவுளூரைடு பற்பசைகளை பயன்படுத்துங்கள். அதே மாதிரி சாப்பிட்ட பிறகு வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். வாயை கொப்பளிக்கும் போது பற்களுக்கு இடையே உள்ள உணவுத் துகள்கள் வெளியே வந்து விடும்.
சர்க்கரை உணவுகள் வேண்டாம்
சர்க்கரை உணவுகள், சர்க்கரை அடங்கிய பானங்கள், சாக்லேட் போன்ற சர்க்கரை மிகுந்த உணவுகள் பற்சொத்தையை அதிகரிக்கிறது. சர்க்கரை மிகுந்த உணவுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது. இது பற்சிப்பியை அரிக்கும் அமிலத்தை உருவாக்கி பற்சொத்தையை உண்டாக்குகின்றன. எனவே சர்க்கரை பானங்கள், சோடா, இனிப்பு உணவுகள் போன்றவற்றை குழந்தைகள் எடுத்துக் கொள்வது பற்களை சேதப்படுத்தும். எனவே முடிந்த வரை இனிப்பு உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
பாட்டிலில் பால் குடிக்கும் பழக்கம்
அடிக்கடி குழந்தைகளுக்கு பாட்டில் பால் கொடுப்பது, குழந்தை பால் பாட்டிலை வாயில் வைத்திக் கொண்டே தூங்குவது பல் சிதைவுக்கு வழி வகுக்கிறது. பாலில் உள்ள சர்க்கரைகள் பற்களில் படிந்து பாக்டீரியா சிதைவுக்கு வழி வகுக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு பொருத்தமான வயதில் பாட்டிலில் பால் குடிப்பதை நிறுத்தி விட்டு டம்ளரில் குடித்து பழக்குங்கள்.
ஃவுளூரைடு பற்றாக்குறை
ஃவுளூரைடு என்ற தாதுப்பொருள் நம் பற்களுக்கு ஒரு அரணாக செயல்பட்டு பற்சொத்தையை தடுக்கிறது. இது பற்களில் ஏற்படும் அமிலத் தாக்குதலுக்கு எதிராக பற்களை வலுப்படுத்துகிறது. எனவே உங்கள் குழந்தைகள் பற்சொத்தையில் இருந்து தப்பிக்க ஒரே வழி ஃவுளூரைடு நிறைந்த பற்பசையை பயன்படுத்துங்கள். அதே நேரத்தில் அதிகப்படியான ஃவுளூரைடு உட்கொள்ளல் பல் ஃப்ளோரோசிஸுக்கு வழிவகுக்கும். பல் நிறமாற்றத்திற்கு வழி வகுக்கும். எனவே பல் மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே ஃவுளூரைடை பயன்படுத்துங்கள்.
பல் மருத்துவ பரிசோதனையை அடிக்கடி செய்யுங்கள்
உங்கள் உடல் பரிசோதனையை அடிக்கடி செய்வது போல உங்கள் பல் மருத்துவ பரிசோதனையையும் அடிக்கடி செய்வது அவசியம். அதிலும் குழந்தைகளுக்கு அடிக்கடி பல் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பற்சொத்தை பெரிதாகும் வரை வைத்திருந்து விட்டு அப்புறமாக மருத்துவரை நாடுகின்றனர்.
இதனால் சில சமயங்களில் குழந்தைகளுக்கு நிரந்தர பற்களைக் கூட எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படும் ஆரம்ப கால கட்டத்திலயே மருத்துவரிடம் செல்வது நல்லது. மேலும் அடிக்கடி பல் மருத்துவ பரிசோதனைகள் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படுவதை தடுக்க முடியும்.
மரபியல் மற்றும் குடும்ப வரலாறு
சில குழந்தைகளுக்கு பரம்பரை ரீதியாக பற்சொத்தை பிரச்சினைகள் இருக்கலாம். எனவே மரபியல் மற்றும் குடும்ப வரலாறு காரணமாக பற்சொத்தை ஏற்படலாம். அந்த மாதிரியான சிக்கல்கள் இருந்தால் மருத்துவரின் உதவியுடன் குழந்தைகளுக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
