Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
காற்று மாசுபாடு அதிகமாக உள்ள சமயத்தில் கர்ப்பிணி பெண்களை எப்படி பாதுகாக்கணும் தெரியுமா?
டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு என்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் சுவாசிக்க கூட முடியாமல் இக்கட்டான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர். வெளியே செல்ல வேண்டும் என்றால் கூட அவர்கள் எல்லாரும் மாஸ்க் போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த காற்று மாசுபாடு காரணமாக குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் பாதிப்படைகின்றனர். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் 10,000-30,000 இறப்புகள் காற்று மாசுபாடு காரணமாக மட்டுமே நிகழ்கின்றன. விவசாயிகள் தங்கள் விவசாய கழிவுகளை எரிப்பதாலும், வாகனப் புகை மற்றும் தொழிற்சாலை புகை இவற்றால் சுற்றுச்சூழல் காற்று பெரிய அளவில் மாசுபட்டு வருகிறது.

இந்த காற்று மாசுபாட்டின் காரணமாக மூச்சுத்திணறல், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு, காச நோய், ஆஸ்துமா, இஸ்கிமிக் இதய நோய், புற்றுநோய், கண் புரை போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. காற்று மாசுபாடு குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியையும் பாதிக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
எனவே கர்ப்பிணி பெண்கள் இந்த மாதிரியான சமயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே காற்று மாசுபாட்டின் போது கர்ப்பிணி பெண்கள் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் நாம் காண்போம்.
காற்று மாசுபாட்டின் ஆபத்தான விளைவுகள்
காற்று மாசுபாட்டால் காற்றில் தீங்கு விளைவிக்கும் துகள்கள் மற்றும் வாயுக்கள் உள்ளன. அதாவது இந்த நுண்ணிய துகள்கள் (PM 2.5), கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் ஒசோன் போன்ற பாதிப்புகள் ஏராளமான ஏற்படுகின்றன. கர்ப்பிணி பெண்கள் இந்த மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அவர்களின் ஆரோக்கியம் மட்டுமல்லாது கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பெருமளவில் பாதிப்படைகிறது. இதனால் குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், குழந்தையின் அறிவாற்றல் திறன் குறைதல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
குறைப்பிரசவம் உண்டாதல்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் படி, 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக சுமார் 6 மில்லியன் குறை பிரசவங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் 3 மில்லியன் குழந்தைகள் எடை குறைவாக பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எடை குறைவான குழந்தைகள்
காற்று மாசுபாட்டின் காரணமாக பிறக்கின்ற குழந்தையின் எடை குறைந்து போக வாய்ப்புள்ளது. இதனால் குழந்தை வளரும் பருவத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வளர்ச்சி சிக்கல் பாதிப்புகள்
காற்று மாசுபாட்டின் காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தையின் அறிவாற்றல் திறன் பாதிப்படைகிறது. இதனால் குழந்தைகள் நடத்தை பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சுவாச பிரச்சினைகள்
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் காற்று மாசுபாட்டை சந்திக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தைகளும் சுவாச பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்று மாசுபாட்டில் இருந்து கர்ப்பிணி பெண்கள் தங்களை எப்படி பாதுகாக்க வேண்டும்
காற்றின் தரத்தை கண்காணியுங்கள்
காற்றின் தரமானது நாம் சுவாசிக்கும் தரத்தில் இருக்க வேண்டும். உங்கள் ஸ்மார்ட் போனில் காற்றின் தரத்தை அறியக் கூடிய வகையில் ஆப்களை வைத்துக் கொள்ளலாம். எனவே வெளியே செல்வதற்கு முன்பு இதன் மூலம் காற்றின் தரத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். காற்றின் தரம் மோசமாக உள்ள நாட்களில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
மாஸ்க்குகளை அணிந்து வெளியே செல்லுங்கள்
கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க்குகளை அணிவது அவசியம். N95 போன்ற தரமான மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். ஏனெனில் இது மிகச் சிறிய (0.3 மைக்ரான்) துகள்களைக் கூட 95% தடுக்கிறது.
வெளியே செல்வதை குறையுங்கள்
கர்ப்பிணிப் பெண்கள் காற்று மாசுபாடு இருக்கும் சமயங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். முடிந்த வரை வீட்டில் இருந்து ஓய்வு எடுப்பது நல்லது.
பாதுகாப்பாக சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபடுங்கள்
கர்ப்பிணி பெண்கள் வீட்டில் இருந்த படியே பாதுகாப்பாக இருப்பது நல்லது. மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்த படியே செய்து வாருங்கள்.
ஆரோக்கியமான உணவை மற்றும் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்
சுற்றுச்சூழல் சீர்கேட்டை எதிர்த்து போராட முதலில் நாம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே ஆரோக்கியமான உணவை எப்பொழுதும் எடுத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களை தவிருங்கள்
காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களான அதிக போக்குவரத்து இடங்கள், தொழிற்துறை பகுதிகள், புகை வரும் இடங்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்
காற்று மாசுபாடு கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்களின் பிறக்காத குழந்தைக்கும் அதிகளவு பிரச்சினைகளை உண்டாக்குகிறது. எனவே எதாவது சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். அதே சமயத்தில் அரசாங்கமும் இதற்கான தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பிறக்கின்ற அடுத்த தலைமுறையை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.



Click it and Unblock the Notifications












